search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் மீது சரக்கு வேன் மோதியதில் ஒருவர் பலி
    X

    பஸ் மீது சரக்கு வேன் மோதியதில் ஒருவர் பலி

    • நின்று கொண்டிருந்த பஸ் மீது சரக்கு வேன் மோதியதில், அதில் பயணித்த ஒருவர் பலியானார்
    • க கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தெத்துவாசல் பட்டி பேருந்து நிறுத்தத்தில் தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் பயணிகள் இறங்கி கொண்டிருந்த பொழுது, புதுக்கோட்டை பாலன் நகரை சேர்ந்த முத்து மகன் ஐயப்பன்(வயது 23) ஓட்டி வந்த சரக்கு வேன் பேருந்தின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் சரக்கு வேனில் அமர்ந்திருந்த ஆட்டங்குடி கருப்பையா மகன் பாண்டியன் (வயது 40) தனியார் நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் பாண்டியன் உடலை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சரக்கு வேன் ஓட்டி வந்த ஐயப்பன் படுகாயம் அடைந்தார்.இது தொடர்பாக கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

    Next Story
    ×