சின்னமனூர் அருகே தொழிலாளி விபத்தில் பலி

தொழிலாளி துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். டிராக்டர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சின்னமனூர்:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள புத்த ம்ப ட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது40). கூலித்தொழிலாளி. இவருக்கு ராஜாத்தி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

இன்று காலை தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சீப்பா லக்கோட்டை அடுத்துள்ள கருப்புசாமி கோவில் பிரிவில் சென்றபோது எதிரில் வந்த டிராக்டர் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ராஜபாண்டி உயிரிழந்தார்.

இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com