search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cotton"

    • 10 ஊராட்சிகளில் தமிழ்நாடு விவசாய கிராம சங்கம் அமைக்க வேண்டும்.
    • பருத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

    நீடாமங்கலம்:

    கும்பகோணம் அருகே ஆலங்குடியில் தமிழ்நாடு விவசாய சங்கம் ஒன்றியக்குழு கூட்டம் விவசாய சங்க ஒன்றிய தலைவர் கலிய பெருமான் தலை மையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர், செந்தில்குமார் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சங்கத்தின் செயலாளர் சின்னராஜா கலந்து கொண்டு பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் வலங்கை மான் ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் தமிழ்நாடு விவசாய கிராம சங்கம் அமைக்க வேண்டும், பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பூசாந்திரம், ராஜேஷ்கண்ணா மோகன், மாலா, கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 8,057 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.
    • குவிண்டால் ரூ. 6,000 முதல் ரூ. 7,700 வரை விற்பனையானது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.71 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 832 விவசாயிகள் தங்களுடைய 8,057 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 2,532 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 24 வணிகா்கள் வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 6,000 முதல் ரூ. 7,700 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 6,900. கடந்த வார சராசரி விலை ரூ. 6,600. ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ. 1.71 கோடி.

    விற்பனைக்கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    • 416 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
    • பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,000 முதல் ரூ.7,316 வரை ஏலம் போனது.

    அவினாசி :

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.7.75 லட்சத்துக்கு வா்த்தகம் புதன்கிழமை நடைபெற்றது.

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 416 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதில் ஆா்.சி.எச்.பி.டி. ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6,000 முதல் ரூ.7,316 வரையிலும், கொட்டுரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரையிலும் ஏலம் போனது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் ரூ.7.75 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. 

    • பருத்தி ஏலத்திற்கு 384 மூட்டை பருத்தி வந்திருந்தது.
    • ரூ. 2000 முதல் ரூ.7322 வரையில் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.

    அவினாசி :

    அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் பருத்தி விவசாயம் செய்யும் விவசாயிகள் விளையும் பஞ்சுகளை கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர்.

    நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு 384 மூட்டை பருத்தி வந்திருந்தது. இதில் ஆர்.சி.எச்., ரக பருத்தி குவிண்டால் ரூ.6000 முதல் ரூ.7322 வரையிலும் மட்ட ரக பருத்தி ரூ. 2000 முதல் 3000 வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ. 6.77 லட்சம் ஆகும். இந்த தகவலை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஏலத்துக்கு 366 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன.
    • ரூ. 2,000 முதல் ரூ. 7,269 வரையில் ஏலம் போனது.

    அவினாசி :

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 6 லட்சத்து 25 ஆயிரத்துக்கு பருத்தி வா்த்தகம் புதன்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 366 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன.

    இதில், ஆா்.சி.எச். பி.டி. ரகப் பருத்தி ஒரு குவிண்டால் ரூ. 5,500 முதல் ரூ. 7,269 வரையிலும், கொட்டு ரக (மட்ட ரக) பருத்தி ஒரு குவிண்டால் ரூ. 2,000 முதல் ரூ. 3,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 6லட்சத்து 25 ஆயிரத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது. 

    • பூச்சிகள் இலைகளுக்கு அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் இலைகளின் நிறம் மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது.
    • அதனை சாப்பிடுவதற்காக எறும்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

    திருவாரூர்:Methods of pest control in cotton crop

    நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்போது பருத்தி பயிருக்கு மண் அணைத்து உரங்களை இட்டு வருகிறார்கள். இந்த தருணத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக உள்ளது. சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, இலைப்பேன், வெள்ளை ஈ, தத்துப்பூச்சி மற்றும் மாவுப்பூச்சிகள் அதிக சேதத்தை உண்டு பண்ணுகின்றன.

    இளம் பூச்சிகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் பருத்தி இலைகளுக்கு அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் இலைகளின் நிறம் மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது. குறிப்பாக தத்துப்பூச்சி இலைகளின் சாற்றை உறிஞ்சும் போது அதனுடைய உமிழ்நீரில் உள்ள நச்சுக்கள் இலைகளில் ஊடுருவும் போது இலைகள் மஞ்சள் நிறமாகி மேலும் இலைகள் கீழ்நோக்கி குவிந்து திட்டுத்திட்டாக கரிதல் போன்ற அறிகுறியை தோற்றுவிக்கும். இதுவே தத்துப்பூச்சி எரிப்பு என்றும் கூறுவார்கள்.

    சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும் போது இலைகள், பூக்கள், பிஞ்சுகள், காய்கள் உதிர்ந்து விடும். இலை, தண்டு மற்றும் பூக்களில் கருமை நிறமாக இருப்பதை காணமுடியும். இதற்கு காரணம் என்னவென்றால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தேன் போன்ற திரவத்தை சுரக்கும். அதனை சாப்பிடுவதற்காக எறும்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

    மேலும் அந்த தேன் போன்ற திரவத்தில் இருந்து கேப்நோடியம் என்ற பூஞ்சானம் வளரும். இது போன்ற கருமை நிறமாக இருப்பதால் இலைகள் சுவாசிக்க முடியாமல் இறந்துவிடும். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த விளக்குப்பொறி பயன்படுத்தவேண்டும். மஞ்சள் நிற ஒட்டும் பொறி அசுவினி மற்றும் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்க மஞ்சள் நிற ஒட்டும் பொறியை ஒரு ஏக்கருக்கு 5 என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.

    தாவரப் பூச்சிகொல்லிகள் உபயோகிப்பதாக இருந்தால் 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல் அல்லது எப். ஓ. ஆர். எஸ். 25 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு பயன்படுத்தலாம்.

    வெள்ளை ஈக்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்த வெற்றிசீலியம் லெக்கானி என்ற பூஞ்சானத்தை ஒரு எக்டேருக்கு 2.5 கிலோ பயன்படுத்த வேண்டும். செயற்கை பூச்சிகொல்லிகள் உபயோகிப்பதாக இருந்தால் புப்ரோபெசின் 1000 மில்லி அல்லது டயபென்தியுரான் 600 கிராம் அல்லது இமிடாக்குளோபிரிட் 100 மில்லி அல்லது தயமீத்தாக்சாம் 100 கிராம் ஒரு எக்டேருக்கு பயன்படுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தற்போது 40ம் எண்நூல் ஒரு கிலோ 245 ரூபாய்க்கும், 60ம் எண் நூல் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    • பல மில்கள் தினமும் ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்ச ரூபாய் இழப்புடன் இயங்கி வருகின்றன.

    திருப்பூர்:

    கோவை புறநகரில் சரவணம்பட்டி, கோவில்பாளையம், அன்னூர் மற்றும் புளியம்பட்டி பகுதியில் 3,000 முதல் 50 ஆயிரம் ஸ்பின்டில் திறன் வரை உள்ள ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து பருத்தி மற்றும் பஞ்சு கொள்முதல் செய்து நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு பெரும்பாலும் 40 மற்றும் 60ம் எண் நூல் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு உற்பத்தியாகும் நூல் சோமனூர், திருப்பூர், ஈரோடு மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    அன்னூர் தாலுகாவில் மட்டும் கரியாம்பாளையம், குன்னத்தூர், கெம்பநாயக்கன்பாளையம், பொகலுார், பசூர், கஞ்சப்பள்ளி உட்பட பல பகுதிகளில் 110 ஸ்பின்னிங் மில்கள் உள்ளன.கடந்த சில மாதங்களாக 3 ஷிப்டுகள் இயங்கி வந்த ஸ்பின்னிங் மில்கள், இரண்டு ஷிப்டுகளாக மாறின. தற்போது ஒரு ஷிப்ட் மட்டுமே இயங்கி வருகின்றன. ஒரு சில மில்கள் மட்டுமே இரண்டு ஷிப்டுகள் இயங்குகின்றன. சில ஸ்பின்னிங் மில்கள் வாரத்திற்கு 2 நாள் விடுமுறை அறிவித்துள்ளன.சில மில்களில் ஒடிசா, பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வரவழைத்திருந்த தொழிலாளர்களுக்கு நீண்ட விடுமுறை அளித்து அனுப்பி விட்டனர்.

    இது குறித்து ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:-

    கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு ஸ்பின்னிங் மில்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது, 356 கிலோ எடையுள்ள ஒரு கண்டி பஞ்சு 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பஞ்சில் நூல் உற்பத்தி செய்யும்போது ஒரு கிலோ நூல் வங்கிக் கடனுக்கான வட்டி இல்லாமல் 283 ரூபாய் அசல் ஆகிறது.

    தற்போது 40ம் எண்நூல் ஒரு கிலோ 245 ரூபாய்க்கும், 60ம் எண் நூல் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோவுக்கு 33 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதிலும் வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டியை சேர்த்தால் ஒரு கிலோவுக்கு 50 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. பல மில்கள் தினமும் ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்ச ரூபாய் இழப்புடன் இயங்கி வருகின்றன. இந்த நிலை மீண்டு விடும் என்கிற நம்பிக்கையில் நஷ்டத்துடன் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக தொழிலாளர்களுக்கு வேலை தரும் ஜவுளித்துறை நிலைத்து நிற்க மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    மத்திய மாநில அரசுகள் உடனடியாக நூற்பாலைகளுக்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். தற்போது வசூலிக்கப்படும் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். ஸ்பின்னிங் மில் முதலீட்டுக்கு மானியம் அளிக்க வேண்டும். உள்ளூரிலேயே பருத்தி அதிக அளவில் விளைவிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு பருத்தி, பஞ்சு ஏற்றுமதி செய்யக்கூடாது. நூல் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும். அதிக கட்டுப்பாடு விதிக்க வேண்டும். நுால் ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் சலுகை தர வேண்டும் என்றனர்.

    இந்தநிலையில் பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில், மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இது குறித்து விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(பெடக்சில்) துணைத்தலைவர் பல்லடத்தை சேர்ந்த சக்திவேல் கூறியதாவது:-

    ஜவுளி தொழில் துறை சார்பில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் ஆகியோரை, குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடந்த நிகழ்ச்சியின்போது சந்தித்து, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. விஸ்கோஸ் மற்றும் செயற்கை நூல் இழைகளுக்கு, மத்திய அரசின் பல்வேறு தர கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாய சான்று பெறும் விதிமுறை நடைமுறையில் உள்ளது. ஜவுளி உற்பத்தி தொழில் வளர்ச்சிக்கு, இது பெரும் தடையாக உள்ளது. விஸ்கோஸ் மற்றும் செயற்கை நூல் இழைக்கு அரசின் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தில் இருந்து,விலக்கு அளிக்க வேண்டும்.

    உள்நாட்டில் போதிய அளவு பருத்தி சாகுபடி கிடையாது. துணி உற்பத்திக்கு தேவையான பருத்தி - பஞ்சினை வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்தாக வேண்டும் என்ற நிலை உள்ளது. இவ்வாறு, இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இது துணி உற்பத்தி செலவை அதிகரிக்க செய்கிறது.உள்நாட்டில் பருத்தி சாகுபடியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் துணி உற்பத்தியை பெருக்கி ஏற்றுமதி வாய்ப்பை அதிகப்படுத்த முடியும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த வார ஏலத்துக்கு, மொத்தம் 1216 பருத்தி மூட்டைகள் வரத்து இருந்தது.
    • ரூ.22 லட்சத்து 47 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது

    அவிநாசி:

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.22.47 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.இந்த வார ஏலத்துக்கு, மொத்தம் 1216 பருத்தி மூட்டைகள் வரத்து இருந்தது.

    இதில் ஆா்.சி.எச். ரகப்பருத்தி குவிண்டால் ரூ.6,500 முதல் ரூ. 7,856 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ரூ.2500 முதல் ரூ.3,500 வரையிலும், ஏலம் போனது. மொத்தம் ரூ.22 லட்சத்து 47 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    • அபிராமம் பகுதியில் பருத்தி சாகுபாடி செய்யப்பட்டுள்ளது.
    • பருத்தி செடியில் இலை சுருட்டல், காய்புழு போன்ற நோய் தாக்குதலால் பருத்தி விவசாயமும் பாதிக்கப்படுகிறது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் நெல் அறுவடைக்கு பிறகு கண்மாய், குளம், ஊரணிகளில் தேங்கி உள்ள தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் பருத்தி நடவு செய்துள்ளனர். பருத்தி செடியை பொறுத்தவரை லேசான ஈரப்பதத்திலும், கடும் வறட்சி நிலையிலும் அதிக மகசூல் தரக்கூடிய தன்மை உடையது. இருந்தபோதிலும் இந்த ஆண்டு தொடர் மழையால் பருத்தி விவசாயம் பாதிப்படைந்து உள்ளது.

    இதுபற்றி அபிராமம் பகுதியைச் சேர்ந்த பருத்தி விவசாயி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடைக்கு பின் கோடை காலங்களில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய பருத்தி விவசாயத்தை செய்து வந்த நிலையில், இந்தப்பகுதியில் இந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. தற்போது பருத்தி சாகுபடி செய்துள்ளோம். பருத்தி செடியில் இலை சுருட்டல், காய்புழு போன்ற நோய் தாக்குதலால் பருத்தி விவசாயமும் பாதிக்கப்படுகிறது. இதனால் மிகவும் பொருளதார நஷ்டம் ஏற்படுவதுடன் மன உளைச்சலும் ஏற்படுகிறது என்றனர்.

    • விவசாயிகள் தங்களுடைய 12,651 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
    • 31 வணிகா்கள் இதனை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

    மூலனூர் :

    மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.90 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இங்கு வாரந்தோறும் பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வெள்ளிக்கிழமை காலை வரை ஏலம் நீடித்தது.

    கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1,205 விவசாயிகள் தங்களுடைய 12,651 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 3,872 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 31 வணிகா்கள் இதனை வாங்குவதற்காக வந்திருந்தனா். ஒரு குவிண்டால் ரூ. 6,700 முதல் ரூ. 8,572 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,700. கடந்த வார சராசரி விலை ரூ. 7,650. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 2.90 கோடி.

    ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணி ப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    • கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.
    • நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

    எடப்பாடி:கொங்கணாபுரத்தில்

    ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

    கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த சுமார் 3 ஆயிரம் பருத்தி மூட்டைகள் 550 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு ஏலம் நடந்தது. இதில் பி. டி. ரக பருத்தியானது குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூ. 7 ஆயிரத்து 350 முதல் ரூ. 8 ஆயிரத்து 361 வரை விற்பனையானது. இதேபோல் டி. சி. எச். ரக பருத்தியானது, ஒரு குவிண்டால் ரூ. 7 ஆயிரத்து 600 முதல் ரூ. 8 ஆயிரத்து 529. வரை விற்பனையானது. கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூ. 4 ஆயிரத்து 250 முதல் ரூ. 6 ஆயிரத்து 50 வரை விற்பனையானது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

    • நூற்பாலை பயன்பாட்டுக்கு மட்டும் 283 லட்சம் பேல் பஞ்சு தேவை.
    • 6 மாதங்களாகிய நிலையில் 155 லட்சம் பேல் பஞ்சு மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது.

    மங்கலம் :

    நடப்பு பருத்தி ஆண்டில் (அக்டோபர் 2022 - செப்டம்பர் 2023), 315 லட்சம் பேல் பருத்தி விளைச்சல் இருக்கும் எனவும், 12 லட்சம் பேல் இறக்குமதி செய்யப்ப டும் எனவும் தொடக்க கையிருப்புடன் 399 லட்சம் பேல் பஞ்சு கிடைக்குமென கணக்கிடப்பட்டது. இந்திய பருத்தி கழகம் வெளியிட்ட ஆண்டறிக்கை யில், நூற்பாலை பயன்பாட்டுக்கு மட்டும் 283 லட்சம் பேல் பஞ்சு தேவை. சிறு, குறு தொழில்களுக்கு 19 லட்சம், நூற்பு இல்லாத தேவைக்கு 16 லட்சம், ஏற்றுமதி 41 லட்சம் பேல் என 359 லட்சம் பேல் தேவைப்படு மென தெரிவித்துள்ளனர்.

    பருத்தி சீசன் துவங்கியதில் இருந்தே பருத்தி பஞ்சு வரத்து குறைவாக இருந்தது. சீசன் துவங்கி 6 மாதங்களாகிய நிலையில் 155 லட்சம் பேல் பஞ்சு மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. அதிகபட்சமாக பிப்ரவரி - 33.77 லட்சம், மார்ச் - 30.07 லட்சம், நவம்பர் - 27.03 லட்சம், டிசம்பர் - 27.96 லட்சம், ஜனவரி - 26.66 லட்சம், அக்டோபர் - 9.71 லட்சம் பேல் பஞ்சு விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்து நூற்பாலைகள் தரப்பினர் கூறுகையில், நடப்பு பருத்தி ஆண்டில் சீசன் துவங்கிய ஆறு மாதங்க ளாகியும், உற்பத்தியான பஞ்சில் 50 சதவீதம் கூட விற்பனைக்கு வந்து சேரவில்லை. கூடுதல் விலை கிடைக்கும் என பஞ்சை விற்பனைக்கு எடுக்காமல் வைத்துள்ளனர்.பருத்தி வரத்தில் அசாதாரண சூழல் நிலவினாலும், விலை சீராக இருக்கிறது.

    இருப்பினும் பஞ்சு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்து பஞ்சு இறக்குமதி க்கான வரியை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்றனர்.

    ×