என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் தமிழ்நாடு விவசாய சங்கம் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
ஆலங்குடியில், விவசாய சங்க ஒன்றியக்குழு கூட்டம்
- 10 ஊராட்சிகளில் தமிழ்நாடு விவசாய கிராம சங்கம் அமைக்க வேண்டும்.
- பருத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
நீடாமங்கலம்:
கும்பகோணம் அருகே ஆலங்குடியில் தமிழ்நாடு விவசாய சங்கம் ஒன்றியக்குழு கூட்டம் விவசாய சங்க ஒன்றிய தலைவர் கலிய பெருமான் தலை மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர், செந்தில்குமார் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் செயலாளர் சின்னராஜா கலந்து கொண்டு பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் வலங்கை மான் ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் தமிழ்நாடு விவசாய கிராம சங்கம் அமைக்க வேண்டும், பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பூசாந்திரம், ராஜேஷ்கண்ணா மோகன், மாலா, கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






