search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "continuous rain"

    • எம்.எல்.ஏ., மேயர் நேரில் ஆய்வு
    • சீரமைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    வேலூர்:

    வேலூரில் பெய்த பரவலான மழையால் வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட் பட்ட நேதாஜி மார்க்கெட் சேறும், சகதியுமானது, இதனை அவற்றை சரிசெய்ய உரிய நடவ டிக்கை எடுக்கும்படி பொது மக்கள், வியாபாரிகள் எம்எல்ஏ மற்றும் மேயர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து, எம் எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகளு டன் நேற்று மாலை நேதாஜி மார்க்கெட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது, மார்க்கெட்டுக்குள் வாகனங்கள் வந்து செல்லும் பகுதியில் அழுகிய காய்கறிகள், வாழைத்தார் உள்ளிட்டவை கொட்டப் பட்டு துர்நாற்றம் வீசியது.

    மேலும் மழை காரணமாக அப்பகுதி சேறும், சகதியு மாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் காணப்பட்டது. அதைப் பார்த்த எம்.எல்.ஏ., மேயர் ஆகியோர், மார்க்கெட்டில் சேகரமாகும் அழுகிய காய் கறிகள், குப்பைகளை தினமும் சேகரித்துச் செல்லும் படி மாநகராட்சி ஊழிய ர்களுக்கு உத்தரவிட்டனர்.

    மேலும் அங்குள்ள வியாபாரிகளிடம் அழுகிய காய்கறிகள், குப்பைகளை சாலையில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். அவ ற்றை மாநகராட்சி ஊழியர் களிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர். மேலும், நேதாஜி மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி சேறும், சகதியும் ஆகாத வகையில் உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்று தெரிவித் தனர்.

    அதையடுத்து அவர்கள் சாரதி மாளிகையில் ஆய்வு செய்தனர். அங்குள்ள கழிவறையை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் அங்கு சில கடைக்காரர்கள், பொதுமக்கள் செல்ல வழி பயின்றி ஆக்கிரமிப்பு செய்து கடைக்கு வெளியேயும் பொருட்களை வைத்திருந் தனர். அதை அகற்றவும் உத்தரவிட்டனர்.

    பின்னர் சாரதி மாளிகையில் அடிக்கடி திருட்டு போவதாகவும், அதை தடுக்க சிசிடிவி கேமராக் கள் பொருத்தி தரும்படி வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

    ஆய்வின் போது 2வது மண்டலக்குழு தலைவர்நரேந்திரன், உதவி கமிஷனர் சுதா, உதவி பொறியாளர் வெங்கடே சன், சுகாதார அலுவலர் லூர்துசாமி, அனைத்து வணிகர் சங்கங்களின் பேர மைப்பு மாவட்ட தலைவர். ஞானவேலு, நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் எல்.கே.எம்.பி. வாசு மற்றும் கலந்து பலர் கொண்டனர்.

    • கொடைக்கானலில் கடந்த 1 வாரமாக பெய்த கனமழை காரணமாக பழனி நகரில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • அணைகள் நிரம்புவதால் பொதுமக்கள் ஆற்றின் கரையோரம் குளிக்கவோ, துணி துவை க்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    கொடைக்கானலில் கடந்த 1 வாரமாக பெய்த கனமழை காரணமாக பழனி நகரில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஏற்கனவே குதிரையாறு, வரதமாநதி, பாலாறு, பொருந்தலாறு ஆகிய அணைகள் நிரம்பும் நிலையில் இருந்தன.

    முதற்கட்டமாக வரத மாநதி அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்ற ப்பட்டது. தற்போது மற்ற 2 அணைகளும் நிரம்பி முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து வரதமாநதி யிலிருந்து 2441 கனஅடியும், பாலாறு, பொருந்தலாறு அணையில் இருந்து 2870 கனஅடியும், குதிரையாறு அணையில் இருந்து 450 கனஅடி நீரும் வெளியேற்ற ப்படுகிறது.

    இந்த தண்ணீர் சண்முகா நதி வழியாக செல்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் வரதமாநதியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மானூர் வழியாக குளங்கள், கண்மாய்களுக்கு செல்கிறது. பழனியில் சண்முகாநதி, வையாபுரி குளங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ள்ளது.

    இதனால் பொதுமக்கள் ஆற்றின் கரையோரம் குளிக்கவோ, துணி துவை க்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளு ம்படியும் அவர்கள் ஒலிபெருக்கி மூலம் தெரிவித்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 54 செ.மீ. மழையளவு பதிவாகி உள்ளது. திண்டு க்கல் 4, கொடைக்கானல் 176, பழனி 28, சத்திரப்பட்டி 5.2, நத்தம் 35, நிலக்கோட்டை 55, வேடசந்தூர் 3.6, காமா ட்சிபுரம் 3.4, போட்கிளப் 234 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது. மொத்த மழையளவு 547.8 மி.மீ. ஆகும்.

    • 3 நாட்களாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.

    சத்தியமங்கலம்:

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த 3 நாட்களாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6,600 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    அணையில் இருந்து வாய்க்காலில் வினாடிக்கு 1,600 கனஅடியும், காலிங்கராயன் வாய்க்காலில் 300 கனஅடியும், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி பாசனத்துக்கு 800 கன அடியும், பவானி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியும் என மொத்தம் 6,700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானி ஆற்றில் 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.

    • காலை முதலே மழை மேக மூட்டமாகவும், குளிர்காற்றும் வீசி வந்தது.
    • இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் தொடங்கிய கன மழை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் மட்டும் சுற்றுப்புற பகுதியில் நேற்று காலை முதலே மழை மேக மூட்டமாகவும், குளிர்காற்றும் வீசி வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் தொடங்கிய கன மழை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. தொடர் மழையின் காரணமாக வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் பொதுமக்கள் இந்த மழையால் வெகுநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

    நேற்று வாரச்சந்தை என்பதால் காய்கறி வியாபாரிகளும், சாலையில் கடைவைத்திருந்த நடைபாதை வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தொடர் மழையின் காரணமாக கோம்புப்பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

    • கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • மழையால் கொடைக்கானல், மேல்மலை கிராமங்களில் நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகவே தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதியில் விவசாயம் செய்யப்பட்டிருந்த விவசாயப் பயிர்கள் பெரும் சேதம் அடைந்துள்ளன.

    மேலும் நிலச்சரிவுகளும் மரங்கள் முறிந்து விழுவதும் வாடிக்கையாகி உள்ளது. தொடர் மழை காரணமாக கொடைக்கானலில் உள்ள நீர் நிலைகள் பெரும்பாலும் தொடர்ந்து நிரம்பி வருகிறது. குறிப்பாக நட்சத்திர ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது.

    மேலும் மேல்மலை கிராமங்களான பூண்டி, மன்னவனூர், கூக்கால், போளூர் உள்ளி ட்ட பகுதிகளில் அமைந்திரு க்கக் கூடிய அருங்காட்டு ப்பள்ளம், கீழ்மடைப் பள்ளம், வரங்கானல் அசன் குளம், பரப்பாரு உள்ளிட்ட அணைகளும் ஏரிப் பகுதிகளாக இருக்கக்கூடிய கூக்கால் ஏரி, எழும்பள்ளம் ஏரி, கோணலாறு உள்ளிட்ட பெரிய நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது.

    இது மட்டுமல்லாது சிறிய நீர்த்தேக்கங்களிலும் தண்ணீர் வரத்து அதிக மாகவே காணப்படுகிறது.

    மேலும் மலை பகுதிகளில் ஆங்காங்கே புதிதாக அருவி கள் உருவாகி கண்கொ ள்ளாக் காட்சியாக உள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்ட கானல் நீர்வீழ்ச்சி உள்பட அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடு முறையை கொண்டாட பல்வேறு பகுதிகளில் இரு ந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை உற்சாகமாக கண்டு ரசித்தனர்.

    • மதுரையில் தொடர் மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
    • தண்ணீர் வெளியேறி வீணாக ஆற்றில் கலக்கிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

    மதுரை

    மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று காலை மாணவ, மாணவிகள் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர். சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமடைந்தனர்.

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவும், இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகள் மற்றும் வீதிகளில்மழை நீர்குளம் போல் தேங்கியுள்ளது.

    இன்று காலை மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பொது மக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    இந்த மழை காரணமாக முக்கிய சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நீர் நிலைகள் முழுமையாக நிரம்பி வருகின்றன. வைகை ஆற்றிலும் கூடுதலாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதையொட்டி வைகை அணையில்இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் குளிக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டு வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக மதுரையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயப்ப ணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

    மதுரை வண்டியூர் கண்மாய், சுமார் 687 ஏக்கர் பரப்பளவு உடையது. இது முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்ந்து ஓடுகிறது.

    எனவே வண்டியூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இங்கு வந்து வேடிக்கை பார்த்து சொல்கின்றனர். ஒரு சிலர் தூண்டில் வலை போட்டு மீன்களை பிடித்து வருகின்றனர்.

    வண்டியூர் கண்மாய் நிரம்பியதால் கே.கே. நகர், அண்ணாநகர், மேலமடை, கோமதிபுரம் உள்ளிட்ட பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து உள்ளது.

    அதே நேரத்தில் கண்மாயை சரியாக தூர்வாரி பராமரிக்காமல், விட்டுவிட்டதால் கண்மாயிலிருந்து தண்ணீர் வெளியேறி வீணாக ஆற்றில் கலக்கிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • அணையின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரிநீர் திறந்துவிடப் படுகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானலில் கொட்டிவரும் கனமழையினால் பழனியில் உள்ள பாலாறு, பொருந்தலாறு, குதிரையாறு, வரதமாநதி ஆகிய அணைகள் நிரம்பி வருகின்றன.

    65 அடி உயரம் உள்ள பாலாறு பொருந்தலாறு அணையில் தற்போது 61 அடி நீர்மட்டம் உள்ளது. இதனால் அணையின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. குதிரயைாறு அணை அதன் முழுகொள்ளளவான 72 அடியை எட்டியுள்ளது. வரதமாநதி அணை நிரம்பி உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. 80 அடி உயரம் உள்ள பரப்பலாறு அணையிலும் நீர்வரத்து அதிகரிப்பால் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மேலும் நீர்வரத்து வர வாய்ப்புள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து அணைக்கு வரும் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    • கொடைக்கானலில் கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகள் அருவிகள் முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்
    • கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குதூகலம்

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடைசீசன் முடிந்த பின்னரும் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகல்பொழுதில் வெயில் அடித்த போதும் மாலையில் தொடங்கி இரவு வரை மழை நீடித்து வருகிறது. இதனால் நட்சத்திர ஏரி நிரம்பி வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    நுழைவாயில் பகுதியான வெள்ளிநீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிய அருவிகளும் உருவாகி கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது.

    நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் நீர்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதமான சீதோஷ்ணம் நிலவி வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைநீரால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா? என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
    தாம்பரம்:

    சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னையை அடுத்த தாம்பரம், பல்லாவரம், சிட்லபாக்கம் பகுதிகளில் மழைநீரால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா? என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார்.

    மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் தங்கு தடையின்றி செல்கிறதா? என பார்வையிட்ட அவர், சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றால் உடனடியாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் பொன்னையா, நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் 2 நாட்கள் மழைநீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வெள்ள பாதிப்புகளை தடுக்க மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    பெரிய அளவில் எங்கும் மழைநீர் தேக்கம் இல்லை. சிறியஅளவில் மழைநீர் தேங்கினாலும், அவற்றை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    மாவட்டத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 9 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. அந்த ஏரிகளால் தாழ்வான பகுதிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மற்ற ஏரிகள் 25 முதல் 50 சதவீதம் வரை நிரம்பி உள்ளன.

    மழையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதையும் மீறி தனியார் பள்ளிகள் இயக்கப்படுவதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல், பெருங்களத்தூர், மாடம்பாக்கம், சிட்லபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்காமல் தடுக்க நகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    பல்லாவரம் நகராட்சி பகுதியில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற 30 மின்மோட்டார்கள், பொக்லைன் எந்திரங்களுடன் 24 மணிநேரமும் நகராட்சி ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதாக பல்லாவரம் நகராட்சி கமிஷனர் கருப்பையாராஜா தெரிவித்தார்.
    ×