என் மலர்
உள்ளூர் செய்திகள்

வரதமாநதி முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேறும் காட்சி.
பழனியில் கொட்டித்தீர்த்த மழை 3 அணைகளில் இருந்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு வெள்ள அபாய எச்சரிக்கை
- கொடைக்கானலில் கடந்த 1 வாரமாக பெய்த கனமழை காரணமாக பழனி நகரில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
- அணைகள் நிரம்புவதால் பொதுமக்கள் ஆற்றின் கரையோரம் குளிக்கவோ, துணி துவை க்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பழனி:
கொடைக்கானலில் கடந்த 1 வாரமாக பெய்த கனமழை காரணமாக பழனி நகரில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஏற்கனவே குதிரையாறு, வரதமாநதி, பாலாறு, பொருந்தலாறு ஆகிய அணைகள் நிரம்பும் நிலையில் இருந்தன.
முதற்கட்டமாக வரத மாநதி அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்ற ப்பட்டது. தற்போது மற்ற 2 அணைகளும் நிரம்பி முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து வரதமாநதி யிலிருந்து 2441 கனஅடியும், பாலாறு, பொருந்தலாறு அணையில் இருந்து 2870 கனஅடியும், குதிரையாறு அணையில் இருந்து 450 கனஅடி நீரும் வெளியேற்ற ப்படுகிறது.
இந்த தண்ணீர் சண்முகா நதி வழியாக செல்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் வரதமாநதியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மானூர் வழியாக குளங்கள், கண்மாய்களுக்கு செல்கிறது. பழனியில் சண்முகாநதி, வையாபுரி குளங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ள்ளது.
இதனால் பொதுமக்கள் ஆற்றின் கரையோரம் குளிக்கவோ, துணி துவை க்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளு ம்படியும் அவர்கள் ஒலிபெருக்கி மூலம் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 54 செ.மீ. மழையளவு பதிவாகி உள்ளது. திண்டு க்கல் 4, கொடைக்கானல் 176, பழனி 28, சத்திரப்பட்டி 5.2, நத்தம் 35, நிலக்கோட்டை 55, வேடசந்தூர் 3.6, காமா ட்சிபுரம் 3.4, போட்கிளப் 234 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது. மொத்த மழையளவு 547.8 மி.மீ. ஆகும்.






