search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consecration"

    • ஒன்றியத்தில் 24 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
    • முக்கிய வீதிகளில் சென்று ரெயில்வே கேட் அருகில் உள்ள முள்ளி ஆற்றங்கரையில் விஜர்சனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் இந்து முன்னணி நடத்தும் சிம்ம விநாயகர் ஊர்வலம் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாளை விநாயகர் சதுர்த்தி அன்று காலை 6 மணிக்கு நகரில் மற்றும் ஒன்றியத்தில் 24 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும். பின்னர் 3-ந் தேதி மாலை 6 மணிக்கு அனைத்து விநாயகர்களும் திருத்துறைப்பூண்டி பிரவி மருந்தீஸ்வரர் கோவிலின் சன்னி தெருவில் இருந்து புறப்பட்டு நகரின் வழக்கமான பாதையில் முக்கிய வீதிகளில் சென்று ரெயில்வே கேட் அருகில் உள்ள முள்ளி ஆற்றங்கரையில் விஜர்சனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் விழா கமிட்டியான தமிழ் பால் சிவகுமார் பா.ஜ.க மாவட்ட துணை தலைவர் வினோத் மாவட்ட செயலாளர் இளசு மணி முன்னாள் மாவட்ட செயலாளர் மாதவன் இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் பூபதி பா.ஜ.க ஒன்றிய தலைவர் பாலாஜி பா.ஜ.க முன்னாள் நகர தலைவர் மற்றும் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் விக்னேஷ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், திருவாரூர் மாவட்ட மேலிட பார்வையாளர் பேட்டை சிவா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    • ஆவணி மூலப் பெருந்திருவிழாவில் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாரைக்கு முக்தி கொடுத்த லீலை
    • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் 2-ம் நாளான இன்று நாரைக்கு முக்தி கொடுக்கும் லீலையில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்யப்படும். இதனைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர், 8 மாத காலம் ஆட்சி செய்வதாக பக்தர்கள் நம்பிக்கை. விழாவின்போது சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில், 12 லீலைகள் அரங்கேற்றம் செய்யப்படும். அதன்படி நேற்று சிவபெருமான் கருங்குயிலுக்கு உபதேசம் வழங்கிய லீலை நடந்தது. 2-ம் நாளான இன்று நாரைக்கு முக்தி கொடுத்த லீலை நடந்தது. மீனாட்சி அம்மன்- பிரியாவிடை சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். நாளை மாணிக்கம் விற்ற லீலை நடக்க உள்ளது.

    மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா 9-ம் தேதி வரை நடக்க உள்ளது. மதுரையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆவணி மூல திருவிழா நடக்கவில்லை. இந்த நிலையில் பக்தர்களின் பங்களிப்புடன் ஆவணி மூலத் திருவிழா நடப்பாண்டு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
    • திருப்பூா் மாநகரில் செப்டம்பா் 3ந் தேதி விநாயகா் விசா்ஜனம் நடைபெறும்.

    திருப்பூர் :

    இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தியை ஒட்டி தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியதாவது: தமிழகத்தில் விநாயா் சதுா்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில் நிகழாண்டு 1.25 லட்சம் சிலைகள் பொதுமக்களின் வழிபாட்டுக்காக பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. இதில் திருப்பூா் மாநகரில் 1,200 மற்றும் மாவட்டத்தில் 3,800 என மொத்தம் 5 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.

    திருப்பூா் மாநகரில் வரும் செப்டம்பா் 3ந் தேதி நடைபெறும் விநாயகா் விசா்ஜன பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.மாநிலத் தலைவா் அண்ணாமலை பிரிவினைவாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனையை வளா்ப்போம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளாா்.

    காங்கயம் பகுதியில் காங்கயம் நகர், நத்தக்காடையூர், படியூர், காங்கயம்பாளையம், காடையூர் உள்ளிட்ட 60 இடங்களில் வருகிற 31-ந் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் (செப்டம்பர்) 1-ந்தேதி அனைத்து சிலைகளும் உடையார் காலனிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஊர்வலம் தொடங்குகிறது. முக்கிய வீதிகள் வழியாக செல்லும் ஊர்வலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நிறைவடைகிறது. பின்னர் அனைத்து சிலைகளும் நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர் வடக்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில், வடக்கு பகுதி விசர்ஜன ஊர்வலம் துவக்கும் விழா குறித்த ஆலோசனை கூட்டம் மாநில பொது செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் பெரியார் காலனியில் நடந்தது. மாநில செயலாளர்கள் செந்தில்குமார், சேவுகன், கோட்ட செயலாளர் மோகனசுந்தரம் உட்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இதில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வரும் 25ந் தேதி, ஒவ்வொரு விநாயகர் கமிட்டிக்கும், 5 பேர் வீதம், புதிய பஸ் நிலையம், கோட்டை ஈஸ்வரன் கோவிலில் மாலை போட்டு, காப்பு கட்டி விரதம் துவக்கம், செப்டம்பர் 3-ந் தேதி விசர்ஜன ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள், பிரம்மாண்டமான ரதங்கள் பங்கேற்பதால், பாதுகாப்பு குழு அமைப்பது ஆகியன குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாட்டுக்கு வைக்கப்பட உள்ளது.
    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் தாயுமானவர் சுவாமி கோவில் அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி பொது செயலாளர் ராமமூர்த்தி கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை- பூஜைகள் செய்து வழிபாட்டுக்கு வைக்கப்பட உள்ளது.

    இந்த சிலைகளுடன் செப்டம்பர் 1 மற்றும் 2-ந் தேதிகளில் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, பரமக்குடி, உச்சிப்புளி, ஏர்வாடி, தேவிபட்டினம், சாயல்குடி, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது.

    இந்த வருடம் விநாயகர் சிலைகள் அரசின் சுற்றுச்சூழல்துறை விதி–களுக்கு உட்பட்டு எளிதில் கரையக்கூடிய சிலைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் பிரிவினை வாதத்தை முறியடிப்போம்.

    தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற பொருளுடன் விழா நடை–பெறுகிறது. இந்துக்களின் ஒற்றுமை திருவிழாவாகவும், இந்துக்களின் எழுச்சி விழாவாகவும் விநாயாகர் சதுர்த்தியை கொண்டாட உள்ளோம். இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நிர்வாகத்திடம் ஒத்துழைப்பு அளித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் தாயுமானவர் சுவாமி கோவில் அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    • முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.

    ஆரணி:

    ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள ஏ.சி.எஸ் கல்வி குழும வளாகத்தில் புதிய நீதி கட்சி நிறுவனரும் ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவருமான ஏ.சி.சண்முகம் தன்னுடைய சொந்த செலவில் 95 அடி உயர ராஜ கோபுரத்துடன் புதியதாக ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவில் கும்பாபிஷேகம் விழா புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமையில் இன்று நடந்தது. ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீஸ்ரீ திருமலை திருப்பதி ஸ்ரீ பெரிய ஜீயர் சின்ன ஜீயர் சுவாமிகள் ஸ்ரீபெரும்புத்துர் ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீ அப்பர் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமி முன்னிலையில் யாகசாலை பூஜை நடைபெற்றது.

    இதனையடுத்து இன்று காலை 10 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை செய்து கங்கை, யமுனா, கோதாவரி, காவிரி, கமண்டலநாகநதி உள்ளிட்ட புண்ணிய நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கொண்டு வெங்கடாஜலபதி கோவில் கோபுர கலசத்திற்கு கொண்டு சென்று மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

    அ.தி.மு.க. இணை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தா.ம.க.தலைவர் ஜி.கே.வாசன், இந்துமக்கள் கட்சி தலைவர் சம்பத், ரத்னகிரி பாலமுருகனடிமை சாமிகள் கலவை சச்சிதானந்தா சாமிகள் கலந்து கொகொண்டனர்.

    இந்த கும்பாபிஷேகம் விழாவிற்கு வந்த அனைவரையும் புதிய நீதி கட்சி நிறுவனரும் ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவருமான ஏ.சி.சண்முகம் லலிதா சண்முகம் அருண்குமார் மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள் ஏ.சி.பாபு ஏ.சி.எஸ். கல்வி குழும நிர்வாகிகள் வரவேற்றனர். இறுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.

    ×