search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress leader"

    மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரத்தால் நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி கூறியுள்ளார். #Sophia #ManishTewari
    புதுடெல்லி:

    தூத்துக்குடி விமானத்தில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக கோஷமிட்டு, அந்தக் கட்சியின் தமிழக தலைவர் தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இதை காங்கிரஸ் கட்சி, நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருப்பதாக கூறி கடுமையாக சாடியது.



    இதுபற்றி அந்த கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி, டெல்லியில் நேற்று கருத்து தெரிவிக்கையில், “இது அறிவிக்கப்படாத அவசர நிலை இல்லை என்றால், இந்த சூழ்நிலையை நீங்கள் என்னவென்று அடையாளப்படுத்துவீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

    மேலும் அவர் கூறும்போது, “தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் நடந்து இருப்பது, கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தும் உரிமை மீதான தாக்குதல் மட்டுமல்ல; நமது அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலும் மட்டுமல்ல. இது இந்திய அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்; ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” என்றும் குறிப்பிட்டார்.   #Sophia #ManishTewari
    திமுக தலைவர் கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். #Karunanidhi #Thirunavukkarasar
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக 11 நாட்கள் காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறுதி சடங்குகள் நிறைவுற்று 8-ம் தேதி மாலை அவர் மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

    முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதிக்கு தமிழக மக்களும், தொண்டர்களும் விடிய விடிய அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுகவின் திருச்சி சிவா முன்வைத்தார்.



    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில், திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலும், கருணாநிதிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதும், சென்னை நகரின் பிரதான சாலைக்கு கருணாநிதியின் பெயரை வைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். #Karunanidhi #Thirunavukkarasar
    எல்லைப்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்தியில் உள்ள மோடி அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். #JammuBorderResidents #JKCeasefire
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக எல்லையோரம் வசிக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று  பர்க்வால் செக்டாரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதால், ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தாரா சந்த் சென்று பார்வையிட்டார். 

    அப்போது அவர் கூறுகையில், “பொதுமக்களை பாகிஸ்தான் குறிவைத்து தாக்குவது வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது. ஜம்மு காஷ்மீரின் எல்லையோரம் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மோடி அரசு முழுமையாக தவறிவிட்டது. பாகிஸ்தானுடனான மோதலை கையாள்வதில் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளதால், கடந்த 4 ஆண்டுகளில் அதிக உயிரிழப்பும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது” என்றார். #JammuBorderResidents #JKCeasefire
    ×