search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress demonstration"

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்தும் மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லை:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்தும் மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நாங்குநேரி பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்கேஎம்.சிவக்குமார் தலைமை தாங் கினார். இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அப்பாவி மக்களை படுகொலை செய்த அரசை வன்மையாக கண்டிப்பது, பெட்ரோல்-டீசல் விலையினை ஜி.எஸ்.டி.வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் மற்றும் முடக்கி வைக்கப்பட்ட இணையதள சேவை உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

    இதில் ஏஐசிசி உறுப்பினர் வசந்தா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜார்ஜ் ஜெயராஜ், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மோகன்குமார்ராஜா, மாவட்ட துணைத்தலைவர் தனபால், மாவட்ட பொதுச்செயலாளர் மருதம் ஆனந்த், வட்டார தலைவர்கள் ஜார்ஜ், ரவீந்திரன், சொர்ணம், முன்னாள் வட்டார தலைவர் செல்வராஜ், நகர தலைவர்கள் பைசல், மலுக்காமலி, செல்லையா, மாணிக்கம், கிழக்கு மாவட்ட சட்டபிரிவு தலைவர் பால்ராஜ், சேவாதள தலைவர் செல்வின், நாங்குநேரி தொகுதி ஊடகபிரிவு தலைவர் தருவை காமராஜ், நாங்குநேரி வட்டார துணைத்தலைவர் வாகைதுரை, நல்லான்குளம் சுரேஷ், பாபு, வானமாமலை மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாங்குநேரி நகர காங்கிரஸ் தலைவர் சுடலைக்கண்ணு செய்திருந்தார்.

    பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ராமநாதபுரம்:

    பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்களை சுட்டுக்கொன்ற தமிழக அரசை கண்டித்தும் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தெய் வேந்திரன் தலைமையில் அரண்மனை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் செல்லதுரை அப்துல்லா,பொதுக்குழு உறுப்பினர் பாரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர் காங்கிரஸ் தலைவர் கோபி வரவேற்றார். நகர் காங்கிரஸ் தலைவர்கள் ராஜாமணி, அஜீஸ், வட்டார தலைவர்கள் ஜோதிபாலன், கோபால், ஜெயபாண்டி, சேதுபாண்டியன், கந்தசாமி, முனீஸ்வரன், தன சேகரன், விஜயரூபன், ஜேசு மனோ கரன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் சகுந் தலாதேவி, பெமிளா விஜய குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் கவுசி மகா லிங்கம், முத்து ராமலிங்கம், பாலகிருஷ்ணன், இலக்கிய அணி மாவட்ட தலைவர் முருகேசன், ரவி, காமராஜ், விஜயன், அருள், கந்தப்பழம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் முத்து கிருஷ்ணன் நன்றி கூறினார்.

    கோவையில் கர்நாடக கவர்னரை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    கோவை:

    கோவை மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. எம்.என். கந்தசாமி, மகேஷ் குமார், கே.பி.எஸ். மணி, கே.வி. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கர்நாடகாவில் பெரும்பான்மையான காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தளத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல் பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்த கர்நாடக கவர்னரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் தென்றல் நாகராஜ், கணபதி சிவகுமார், உமாபதி, குருமூர்த்தி, கருணாகரன், திலகவதி, வக்கீல் கருப்பசாமி, சவுந்திரகுமார், ராம. நாகராஜன், குமரேசன், பாஸ்கர், வசந்தி, துளசிராஜ், காந்தகுமார், ஆடிட்டர் குருசாமி, விஜயசாந்த், இஸ்மத், விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×