என் மலர்
நீங்கள் தேடியது "நாங்குநேரி"
- அரிவாள் வெட்டில் காயமடைந்த பிரபாகரன், ராமசாமி ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நடந்த சம்பவங்கள் பற்றி கேட்டறிந்தார்.
- கடந்த 4 ஆண்டுகளாக பட்டியல் இன மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.
களக்காடு:
நாங்குநேரி அருகே பெரும்பத்தில் கடந்த 2-ந் தேதி இரவில் 9 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதில் பலியான மாற்றுத்திறனாளி ஜான் குடும்பத்தினரை புதிய தமிழகம் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் ஷியாம் கிருஷ்ணசாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் அரிவாள் வெட்டில் காயமடைந்த பிரபாகரன், ராமசாமி ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நடந்த சம்பவங்கள் பற்றி கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவல்துறையில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவது அதிகரித்துவிட்டது. அதனால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. அஜித்குமாரும், ஆகாசும் இதனால்தான் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டனர்.
கடந்த 4 ஆண்டுகளாக பட்டியல் இன மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. நாங்குநேரி சம்பவம் அரசின் தோல்வியை காட்டுகிறது. முதலமைச்சர் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. அரசின் சார்பில் நிவாரணம் வழங்கவும் இதுவரை முன் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு முழுதும் போதைப்பொருள் புழக்கத்தால் சீர்கெட்டுள்ளதை நாங்குநேரி நிகழ்வு வெட்டவெளிச்சமாக்கியது.
- நாட்டு மக்களின் பாதுகாப்பான வாழ்வினை விட அரசின் வருமானம்தான் திமுக அரசிற்கு முக்கியமானதா என்றார்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த கடம்போடு வாழ்வு கிராமத்தில் 9 பேர் கொண்ட போதை கும்பல் அப்பாவி பொதுமக்களைக் கொடூர ஆயுதங்களால் தாக்கிய துயர நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. போதைக்கும்பலின் கண்மூடித்தனமான தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததுடன் 7 பேர் படுகாயமடைந்த துயரச்செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பன்மடங்கு அதிகரித்துள்ள போதைப்பொருள் புழக்கத்தால் நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.
போதைக்கும்பலின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சகோதரர் ஜான் மற்றும் வடமாநிலத் தொழிலாளர் இருவரின் குடும்பத்திற்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய உயர் மருத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு உயிர் காக்க வேண்டும்.
இக்கொடூர கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட கும்பல் போதையிலிருந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் கையாலாகாத்தனமே நடைபெற்றுள்ள இக்கொடூர குற்றத்திற்கு மூல காரணமாகும்.
தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்துப் படுகொலைகளும், வன்முறை நிகழ்வுகளும் முன்பகையால் திட்டமிட்டு நடப்பவை என்று காரணம் கற்பித்த திமுக அரசு, எந்தவித காரணமும் இன்றிப் போதைக்கும்பல் நடத்தியுள்ள கண்மூடித்தனமான இந்தப் படுகொலைகளுக்கு என்ன பதில் கூறப்போகிறது?
நாங்குநேரியில் நடைபெற்றுள்ள இக்கொடூர நிகழ்வு தமிழ்நாடு முழுவதுமே போதைப்பொருள் புழக்கத்தால் முற்றுமுழுதாக சீர்கெட்டுள்ளதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
நாட்டில் நடக்கும் அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படை காரணமாக உள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையைத்தான் திமுக அரசால் தடுக்க முடியவில்லை. குறைந்தபட்சம் அரசு நடத்தும் மதுக்கடைகளை மூடுவதில் திமுகவிற்கு என்ன தயக்கம்? நாட்டு மக்களின் பாதுகாப்பான நல்வாழ்வினை விடவும் அரசின் வருமானம்தான் திமுக அரசிற்கு முக்கியமானதா?
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடவேண்டும், போதைப்பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், சட்டம்-ஒழுங்கை சீர்படுத்த வேண்டுமென தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி போராடி வருகின்றது. ஆனால், ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 5 ஆண்டாக எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, தற்போது தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கையை மக்கள் முற்று முழுதாக இழந்துவிட்டனர்.
கட்டுக்கடங்காது நடைபெறும் போதைப்பொருட்கள் விற்பனையும், அதன் காரணமாக நடைபெறும் கொடூர படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியம் மீதமிருக்கும் நாட்களில் இன்னும் எத்தனை உயிர்களை பலி கொள்ளப்போகிறதோ என்று மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தி சட்டம்-ஒழுங்கை சீர்படுத்தாது, தமிழ்நாட்டை பாதுகாப்பற்ற மாநிலமாக மாற்றி நிறுத்தியுள்ள திமுக அரசிற்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இக்கொடிய குற்றத்தில் ஈடுபட்ட போதைக்கும்பலை தமிழ்நாடு காவல்துறை விரைந்து கைதுசெய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் இந்திரா காலனி உள்ளது. இங்குள்ள ஒரு டீக்கடை முன்பு சிலர் நேற்று இரவில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் 9 பேர் கொண்ட மர்ம கும்பல் மதுபோதையில் வந்து, திடீரென பெட்ரோல் குண்டை வீசியது. பின்னர் சாலையில் கண்ணில் தென்பட்டவர்களை கொடூரமாக அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் மாற்றுத்திறனாளி உள்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேய உயிரிழக்க, மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் நாங்குநேரியில் நடந்த கொடூர சம்பவத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "நேற்று இரவு நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.
வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும் சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் அடுத்த தலைமுறையின் கனவுக்குள்ளும் நீங்கா சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- விடியா திமுக அரசின் அலட்சிய போக்கின் விளைவு தான் இந்த கொடூரக் கொலைகள்.
- தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை வளர்த்து விடுகிறதா திமுக?
நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம்.
பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் அந்த கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்து, 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய விடியா திமுக அரசின் அலட்சிய போக்கின் விளைவு தான் இந்த கொடூரக் கொலைகள்.
இது தங்கள் சமூகத்தைக் குறிவைத்து நடந்த தாக்குதல் எனவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அச்சத்துடன் போராடி வருகின்றனர் அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள்.
இதே நாங்குநேரி தொடங்கி, தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு? வேடிக்கை மட்டும் தானே பார்த்துக்கொண்டு இருந்தது?
தொடர்ந்து இப்பகுதியை பதற்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டுமென்பது தான் திமுக அரசின் எண்ணமா? தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை வளர்த்து விடுகிறதா திமுக? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மக்களிடையே எழுகிறது.
வாய்கிழிய மேடைகளில் சமத்துவம் என்று பேசும் திமுக, தனது ஆட்சியில் சமூக மோதல்களைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது; கடும் கண்டனத்திற்குரியது.
பெரும்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- சம்பவம் தொடர்பாக நாங்குநேரியை சேர்ந்த சந்தேகப்படும்படியான 6 பேர் பிடிபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் இந்திரா காலனி உள்ளது. இங்குள்ள ஒரு டீக்கடை முன்பு சிலர் நேற்று இரவில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் 9 பேர் கொண்ட மர்ம கும்பல் மதுபோதையில் வந்து, திடீரென பெட்ரோல் குண்டை வீசியது. பின்னர் சாலையில் கண்ணில் தென்பட்டவர்களை கொடூரமாக அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
மேலும் மர்மகும்பல் அருகில் உள்ள கடம்போடு வாழ்வு கிராமத்திலும் புகுந்து அங்கிருந்த சிலரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடிவிட்டு தப்பிச் சென்றது.
இந்த திடீர் தாக்குதலில் பெரும்பத்து இந்திரா காலனியை சேர்ந்த மாற்றுத் திறனாளியான ஜான் மார்க்(வயது 45) மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரிநாத் கட்டா(50) என்ற செங்கல் சூளை தொழிலாளி ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
இச்சம்பவத்தில் பெரும்பத்து கிராமத்தை சேர்ந்த நெல்சன்(45), பிரபாகரன், ராமசாமி, வீராங்குளத்தை சேர்ந்த கணேசன் (58), புளியங்குளத்தை சேர்ந்த சசிகுமார் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்து நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையுண்ட 2 பேர் உடலையும் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த நெல்சன், கணேசன் ஆகிய 2 பேருக்கும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்கள் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் மற்றும் போலீசார் இரவில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பல் கஞ்சா, மது போதையில் வெறியாட்டம் ஆடினார்களா? அல்லது திட்டமிட்டு இச்சம்பவத்தை நிகழ்த்தினார்களா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே தென் மணண்டல போலீஸ் ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி நேற்று இரவோடு இரவாக நெல்லை வந்தார். அவர் நள்ளிரவில் பெரும்பத்து பகுதிக்கு சென்று நேரடி விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே, தப்பிச் சென்ற மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த பயங்கர சம்பவத்தால் நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றத்தை தணிக்கும் வகையில் பெரும்பத்து பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாது தென்காசி மாவட்டத்தில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு நாங்குநேரி சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் நேற்று இரவு முதலே நாங்குநேரியில் இருந்து மஞ்சங்குளம், பெரும்பத்து வழியாக ஏர்வாடி பகுதிக்கு பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று 2-வது நாளாக அந்த வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படவில்லை.
அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளிட்டவை மூலமாக போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நாங்குநேரியை சேர்ந்த சந்தேகப்படும்படியான 6 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தையடுத்து சாலையில் திரண்ட பெரும்பத்து கிராம மக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.
இன்று மதியத்திற்குள் குற்றவாளிகள் யார்? தாக்குதலுக்கான பின்னணி என்ன? என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் தெரிவித்துள்ளார்.
- உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?
- இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே?
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் வடமாநிலத் தொழிலாளி உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன்.
உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?
இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே?
நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா?
போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா?
பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?
மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சரமாரியாக வெட்டிய அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.
- பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலியில் டீக்கடையில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாங்குநேரி அருகே களக்காடு செல்லும் சாலையில் பெரும்பத்து என்ற கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடை முன்பு சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது 3 இரு சக்கர வானங்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் தாங்கள் எடுத்து வந்த அரிவாள் மற்றும் பிற ஆயுதங்களால் திடீரென தாக்குதல் நடத்தினர்.
அங்கிருத்தவர்களை சரமாரியாக வெட்டிய அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.
இந்த சம்பவத்தில் 9 பேருக்கு வெட்டு விழுந்தது. 2 பேர் இறந்த நிலையில், 2 பேர் அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் லேசான காயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஏர்வாடி - நாங்குநேரி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட எஸ்.பி பிரசன்னா குமார் மற்றும் நெல்லை சரக டிஐஜி சரவணன் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவ இடத்தில் ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
- கைதான சங்கரநாராயணன் மீது பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- நெல்லையில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை. கடந்த 2023-ம் ஆண்டு சாதி ரீதியிலான தாக்குதலில் பலத்த காயம் அடைந்தார். இவர் தற்போது நெல்லை திருமால்நகர் குடியிருப்பில் வசித்து வருவதுடன், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 16-ந் தேதி நெல்லை கொக்கிரகுளம் வசந்தம் நகர் விரிவாக்கம் பகுதிக்கு தனது இன்ஸ்டாகிராம் நண்பரை பார்க்க சென்றார். அப்போது அவரை அடையாளம் தெரியாத 4 பேர் தாக்கியதுடன், செல்போனையும் பறித்துச் சென்றனர்.
ஏற்கனவே பாதிக்கப்பட்ட மாணவன் மீண்டும் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
போலீசாரின் விசாரணையில் பாலகிருஷ்ணன் மகன் பரமேஸ் (வயது 20) என்பவர் தலைமையில், அவருடைய நண்பர்கள் சங்கர நாராயணன் (23), சக்திவேல் (19), சண்முக சுந்தரம் மற்றும் வேல்முருகன் ஆகியோர் சின்னத்துரையிடம் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு, அவரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு சம்பவ இடத்துக்கு வரவழைத்து இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த நிலையில் சக்திவேல், சங்கரநாராயணன் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான சங்கரநாராயணன் மீது பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் பரமேஸ், சண்முகசுந்தரம், வேல்முருகன் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே மாணவன் சின்னத்துரையை காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசி ஆறுதல் கூறி, நிதிஉதவியும் வழங்கினர்.
பின்னர் ரஞ்சன் குமார் கூறுகையில், 'நெல்லையில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் சின்னத்துரைக்கு வீடு வசதி, கல்வி வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சாதி ரீதியான மோதல்கள் அதிகமாக நடந்து வருகிறது. பாளையங்கோட்டை பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர் அரிவாளால் வெட்டப்பட்டது கண்டிக்கத்தக்கது. சாதி ரீதியான வன்முறைகளுக்கு எதிராக சிறப்பு தனி சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
- சிகிச்சை முடிந்து நேற்று இரவு வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
- 2 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு சின்னத்துரை (வயது18) என்ற மகனும், 1 மகளும் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாதி ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் சின்னத்துரை படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கல்வியை தொடர்ந்தார். தற்போது சின்னத்துரை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு அவர் படித்து வருகிறார்.
அவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் பெருமாள்புரம் திருமால் நகரில் உள்ள குடிசை மாற்று வாரியம் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
நேற்று மாலை தனது நண்பன் அழைப்பதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற அவரை கொக்கிரகுளம் அறிவியல் மையம் அருகே உள்ள வசந்த் நகரில் வைத்து சிலர் தாக்கியதாகவும், தன்னிடம் இருந்த பணம் மற்றும் செல்போனையும் பறித்துச் சென்று விட்டதாகவும் அவர் தனது தாயாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். லேசான காயங்களுடன் இருந்த அவருக்கு சிகிச்சை முடிந்து நேற்று இரவு வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
இதனிடையே அவரை தாக்கிய கும்பல் யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முன்னதாக மாணவன் சின்னதுரையிடம் விசாரித்த போது, இணையதள செயலி மூலமாக நண்பர் ஒருவர் அறிமுகமாகி இருந்தார். அவர் திருமண பத்திரிகை கொடுக்க வேண்டும் என்று தன்னை அழைத்ததாகவும், அதன்படி அப்பகுதிக்கு சென்றதாகவும் அங்கு திடீரென வந்த கும்பல் தன்னை தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் பி.என்.எஸ். 309(பி) காயத்தை ஏற்படுத்தி சொத்துக்களை வழிப்பறி செய்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவ தொடர்பாக 4 பேர் கொண்ட மர்ம கும்பலை பிடிப்பதற்கு 2 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
- நாங்குநேரி ரெயில்வே கேட் பகுதியில் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்தனர்.
களக்காடு:
நாங்குநேரி ரெயில்வே கேட் பகுதியில் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். மேலும் அவர்களிடம் ஒரு மூட்டையும் இருந்தது.
இதைப்பார்த்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்த மூட்டையை சோதனையிட்டனர். அப்போது அதில் 30 கிலோ அளவிலான புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சிங்கநேரியை சேர்ந்த சங்கர்கணேஷ் (வயது 25), வேல்கண்ணன் (27) தூத்துக்குடியை சேர்ந்த வீரபத்ரன் (32) என்பது தெரியவந்தது. 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாங்குநேரி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணம், தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி ஜான்சிராணி வடக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கள பொறுப்பாளராக உள்ளார்.
- சம்பவத்தன்று இரவில் ஜான்சிராணியின் தாயாருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாக, அவரது தந்தை போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணம், தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சென்னையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ஜான்சிராணி (வயது 43) வடக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கள பொறுப்பாளராக உள்ளார். இவருக்கும், இவரது தம்பியான அதே ஊரை சேர்ந்த எட்வர்டு ராஜனுக்கும் பணம் மற்றும் நகை கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
சம்பவத்தன்று இரவில் ஜான்சிராணியின் தாயாருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாக, அவரது தந்தை போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஜான்சிராணி கீழரதவீதியில் உள்ள தந்தை வீட்டிற்கு தாயாரை பார்ப்பதற்காக சென்றார்.
அப்போது எட்வர்டு ராஜன் எங்கள் வீட்டிற்கு எப்படி வரலாம் என கேட்டு ஜான்சிராணியை அவதூறாக பேசினார். மேலும் அரிவாளால் வெட்டினார். பின்னர் கொலை மிரட்டலும் விடுத்தார்.
இதனால் காயமடைந்த ஜான்சிராணி சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி விஜயநாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி எட்வர்டு ராஜனை தேடி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர்.
- 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 6 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
களக்காடு:
நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் மற்றும் போலீசார் நாங்குநேரி ரெயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். இதைக்கண்ட போலீசார் விரட்டி சென்று 2 பேரை பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் விஜயநாரா யணத்தை சேர்ந்த இசக்கி பாண்டி (வயது 45), ஆண்டான்குளத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி (32), என்பதும், தப்பி ஓடியது புதுக்குளம் நடுத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் (34) என்பதும், 3 பேரும் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.






