என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாங்குநேரியில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 3 பேர் கைது
- நாங்குநேரி ரெயில்வே கேட் பகுதியில் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்தனர்.
களக்காடு:
நாங்குநேரி ரெயில்வே கேட் பகுதியில் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். மேலும் அவர்களிடம் ஒரு மூட்டையும் இருந்தது.
இதைப்பார்த்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்த மூட்டையை சோதனையிட்டனர். அப்போது அதில் 30 கிலோ அளவிலான புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சிங்கநேரியை சேர்ந்த சங்கர்கணேஷ் (வயது 25), வேல்கண்ணன் (27) தூத்துக்குடியை சேர்ந்த வீரபத்ரன் (32) என்பது தெரியவந்தது. 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






