search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bodi"

    போடி அருகே கோவில் திருவிழாவில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி சந்தைப் பேட்டை ஏகாளிசந்து பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40). இவர் அதே பகுதியில் நடந்த காளியம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்றார். 

    அப்போது பால்குடம் எடுத்து வந்த சிறுமிகளை அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (36) என்பவர் கீழே தள்ளி விட்டுள்ளார். இதனை சீனிவாசன் கண்டித்தார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    அதன் பிறகு ராஜ்குமார் அரிவாளால் சீனிவாசனை தாக்கி விட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து சீனிவாசன் போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

    போடி பகுதியில் தொடரும் மணல் கடத்தலால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. எனவே இதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மேற்குதொடர்ச்சி மலையில் பெய்யும் மழையைக்கொண்டு விவசாயிகள் மா, பலா, இலவமரங்கள் மற்றும் மானாவாரி பயிரிட்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மணல்கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அவ்வப்போது அதிகாரிகள் ரோந்து சென்று மணல் கடத்தும் கும்பலை பிடித்து அபராதம் விதித்தபோதும் மணல் திருட்டை தடுக்கமுடியவில்லை.

    போடி அருகே கரட்டுப்பட்டி ஓடையில் டிராக்டரில் சிலர் மணல் கடத்துவதாக குரங்கணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார் டிராக்டரை மடக்கி சோதனையிட்டனர். அதில் மணல் கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனைதொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து டிரைவர் நல்லசாமியை கைது செய்தனர். டிராக்டர் உரிமையாளர் முத்துராஜை தேடி வருகின்றனர்.

    போடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் தொழிலாளி வீட்டுக்குள் புகுந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் சிபிசோன் (வயது50). இவர் தனது குடும்பத்துடன் காரில் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றார். அப்பகுதியை சுற்றி பார்த்து விட்டு நேற்று கேரளாவிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    நள்ளிரவு 12 மணி அளவில் போடி அருகே கார் சென்று கொண்டிருந்தது. முந்தல் பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. அதன்பின்பும் அருகே இருந்த தொழிலாளி ராஜேந்திரன் என்பவர் வீட்டுக்குள் புகுந்தது.

    இதில் மின் கம்பம் முற்றிலுமாக முறிந்து கீழே விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. ராஜேந்திரன் குடும்பத்துடன் வீட்டுக்குள் தூங்கி உள்ளார். மின் கம்பத்தில் மோதி வீட்டுக்குள் புகுந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. சுவர் சேதம் அடைந்தது. மின் ஊழியர்கள் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    ×