search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharatanatyam"

    • சேலம் மாவட்டம் ஆத்தூரில் விஜயதசமியை முன்னிட்டு 4 உலக சாதனை படைத்த கலை அருவி நாட்டிய பள்ளி சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது
    • நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் நிர்மலா பபிதா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் விஜயதசமியை முன்னிட்டு 4 உலக சாதனை படைத்த கலை அருவி நாட்டிய பள்ளி சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரெட் கிராஸ் சங்க தலைவர் ஜோ கலைஞரின் நாட்டிய பள்ளி ஆசிரியை கிளாடி ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியை ஆத்தூர் நகர மன்ற தலைவி நிர்மலா பபிதா மணிகண்டன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் சத்திய பிரியா, ரெட்கிராஸ் அபி, கவிஞர் சரண், சுகுமார், வணிகர் சங்க கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளி குழந்தைகள் பாரதியின் பாடல்களுக்கு நாட்டியம் ஆடி அனனவரயும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். இதில் 100-க்கனக்கான மாணவிகள் பங்கேற்றனர்.

    • ஏழை மாணவிகளுக்கு ஆசிரியர் விஜய் பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து வருகிறார்.
    • சலங்கைகள் வழங்கும் நிகழ்ச்சி துடுப்பதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

    திருப்பூர் :

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த துடுப்பதி ஊராட்சி பகுதியில் ஏழை மாணவிகளுக்கு அப்பகுதியை சேர்ந்த ஆசிரியர் விஜய் பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து வருகிறார். இதையறிந்த திருப்பூர் இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் இந்திரா சுந்தரம் மாணவிகளுக்கு சலங்கைகள் வாங்கி கொடுக்க முடிவு செய்தார்.

    இதன்படி சலங்கைகள் வழங்கும் நிகழ்ச்சி துடுப்பதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அறக்கட்டளை தலைவர் இந்திரா சுந்தரம், துடுப்பதி ஊராட்சி தலைவர் அன்பரசு முன்னிலையில் 10 மாணவிகளுக்கு சலங்கைகளை இலவசமாக வழங்கினார். இதில் அறக்கட்டளை செயலாளர் ராஜா முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இணையம் மூலம் பரதநாட்டிய பயிற்சிப்பள்ளி நடத்தி வருபவரிடம் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் பரதநாட்டிய பயிற்சி பெற்று வருகின்றனர்.
    • இங்குள்ள பிரதான 15 கோவில்களில் பரதநாட்டியமாடி சாமிகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என முடிவு செய்தனர்.

    சுவாமிமலை:

    கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியை சேர்ந்தவர் சுஷ்மாரெட்டி. இவர் அங்கு இணையம் மூலம் பரதநாட்டிய பயிற்சிப்பள்ளி நடத்தி வருகின்றார். அவரிடம், சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் பரதநாட்டிய பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் பரதம் பயின்ற மாணவிகள் இக்கலை உருவான தமிழகத்துக்கு வந்து, இங்குள்ள பிரதான 15 கோயில்களில் பரதநாட்டியம் நடனமாடி, சுவாமிகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என முடிவு செய்தனர்.

    அதன்படி, புதுச்சேரியை சேர்ந்த பரதநாட்டிய பேராசிரியர் ஷெல்லா தலைமையில், சுஷ்மாரெட்டி இவருடைய மாணவிகளான பிரியா, இவருடைய மகள் பூமி, ஜான்வி, கேத்திரி, பவானி, சக்ஸரா, வைஷ்ணவி, பவன் ஆகிய 8 பேர் கடந்த 22-ம் தேதி தமிழகத்துக்கு வந்தனர். பின்னர், அவர்கள், தாராசுரம், சுவாமிமலை, புதுச்சேரி, மதுரை உள்ளிட்ட 8 கோயில்களில் நடனமாடியுள்ளனர்.

    தொடர்ந்து கிராமப்புறத்தை சேர்ந்த ஏழ்மையில் படிக்கும் பள்ளி மாணவர்களை ஊக்கு விக்கும் வகையில், சுவாமிமலை அருகே திம்மக்குடியிலுள்ள அருள்ஜோதி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில், மாணவர்கள் முன் பரதநாட்டியமாடினர்.

    இது குறித்து தகவலறிந்த சாக்கோட்டை க. அன்பழகன் எம்.எல்.ஏ, நேரில் சென்று, பரதநாட்டிய நடனத்தைப் பார்வையிட்டு, பாராட்டு தெரிவித்து, இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பள்ளி செயலாளர் பாலசுப்பிரமணியன், தலைமையாசிரியர் சாந்தி, உதவி ஆசிரியர் கலைச்செல்வி, தி.மு.க ஒன்றிய செயலாளர் சுதாகர், ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நட்டுவாங்கம் இரண்டு ஆண்டு பட்டயமும், நாட்டுப்புற கலை மூன்று ஆண்டு பட்டையமும் பயிற்றுவிக்கப்படும்.
    • 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், பரதநாட்டியம் பட்டயம் தேர்ச்சி அல்லது இளங்கலை பரதநாட்டியம் முதன்மைப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் 239 மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இளங்கலை இசை பிரிவில் குரல் இசை, வீணை, வயலின் ஆகியவை முதன்மை பாடங்களாகவும், பட்டய பிரிவில் குரல் இசை, வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம், தவில், நாதசுரம் ஆகியவை முதன்மை பாடங்களாகவும் மற்றும் இசை ஆசிரியர் பயிற்சி பட்டயமும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. முனைவர் பட்ட ஆய்வு மையமாகவும் செயல்பட்டு வருகிறது.

    இத்துடன் இந்த கல்வி ஆண்டு 2022-23-ம் ஆண்டு முதல் இளங்கலை இசை பாடப்பிரிவில் அரசாணை எண் 209, சுற்றுலா மற்றும் பண்பாடு அறநிலையங்கள் பண்துறை நாள் 10-12-2021 வாயிலாக புதிதாக தோற்றுவிக்கப்பட்ட இளங்கலை மற்றும் இளங்கலை பரதநாட்டியம் பாடப்பிரிவுகளும் பட்டய பாடப்பிரிவில் நட்டுவாங்கம் இரண்டு ஆண்டு பட்டயமும், நாட்டுப்புற கலை மூன்று ஆண்டு பட்டையமும் பயிற்றுவிக்கப்படும்.

    இக்கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகளில் புதிதாக சேர்வதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், நாதசுரம், தவில், பரதநாட்டியம், நாட்டுப்புறக்கலை 3 ஆண்டுகள் பட்டயப டிப்பு படிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 16 முதல் 21 வரை இருத்தல் வேண்டும்.நட்டுவாங்கம் 2 ஆண்டுகள் பட்டயப்படிப்பு பயில 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், பரதநாட்டியம் பட்டயம் தேர்ச்சி அல்லது இளங்கலை பரதநாட்டியம் முதன்மைப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 16 முதல் 25 வரை இருத்தல் வேண்டும்.இளங்கலை இசை குரலிசை, வீணை, வயலின், பரதநாட்டியம் 3 ஆண்டுகள் பட்டப்படிப்பு பயில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 17 முதல் 22 வரை இருத்தல் வேண்டும்.முதுகலை இசை குரலிசை, வீணை 2 ஆண்டுகள் பட்டப்படிப்பு பயில இளங்கலை இசை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை.

    இசை ஆசிரியர் பயிற்சி 1 ஆண்டு பட்டயப் படிப்பு பயில 10ஆம் வகுப்புதேர்ச்சியுடன், இளங்கலை இசைப் பட்டம் (அல்லது) இசை பட்டயம் (அல்லது) இசையில் இதற்கு நிகரான பட்டயம் தோச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 16 முதல் 25 வரை இருத்தல் வேண்டும்.

    இசையில் முனைவர் பட்ட ஆய்வு படிப்பு பயில கல்வித் தகுதி மற்றும் ஏனைய விவரங்கள் அறிய தொடர்புடைய கல்லூரியை அணுகவும்.மேற்காணும் தகுதியுடன் இக்கல்லூரியில் சேர விருப்பம் தெரிவிக்கும் மாணவர்கள் திருவையாறு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள இசைக் கல்லூரிக்கு நேரிலோ அல்லது இணையவழியிலோ www.artandculture.tn.gov.in அதற்கான விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்ப டுகிறார்கள். மேலும் தொடர்புக்கு 04362- 261600 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×