search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் நடனமாடி மாணவர்களை ஊக்கப்படுத்திய பரதநாட்டிய கலைஞர்கள்
    X

    பரதநாட்டிய கலைஞர்களை அன்பழகன் எம்.எல்.ஏ. பாராட்டினார்.

    பள்ளியில் நடனமாடி மாணவர்களை ஊக்கப்படுத்திய பரதநாட்டிய கலைஞர்கள்

    • இணையம் மூலம் பரதநாட்டிய பயிற்சிப்பள்ளி நடத்தி வருபவரிடம் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் பரதநாட்டிய பயிற்சி பெற்று வருகின்றனர்.
    • இங்குள்ள பிரதான 15 கோவில்களில் பரதநாட்டியமாடி சாமிகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என முடிவு செய்தனர்.

    சுவாமிமலை:

    கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியை சேர்ந்தவர் சுஷ்மாரெட்டி. இவர் அங்கு இணையம் மூலம் பரதநாட்டிய பயிற்சிப்பள்ளி நடத்தி வருகின்றார். அவரிடம், சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் பரதநாட்டிய பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் பரதம் பயின்ற மாணவிகள் இக்கலை உருவான தமிழகத்துக்கு வந்து, இங்குள்ள பிரதான 15 கோயில்களில் பரதநாட்டியம் நடனமாடி, சுவாமிகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என முடிவு செய்தனர்.

    அதன்படி, புதுச்சேரியை சேர்ந்த பரதநாட்டிய பேராசிரியர் ஷெல்லா தலைமையில், சுஷ்மாரெட்டி இவருடைய மாணவிகளான பிரியா, இவருடைய மகள் பூமி, ஜான்வி, கேத்திரி, பவானி, சக்ஸரா, வைஷ்ணவி, பவன் ஆகிய 8 பேர் கடந்த 22-ம் தேதி தமிழகத்துக்கு வந்தனர். பின்னர், அவர்கள், தாராசுரம், சுவாமிமலை, புதுச்சேரி, மதுரை உள்ளிட்ட 8 கோயில்களில் நடனமாடியுள்ளனர்.

    தொடர்ந்து கிராமப்புறத்தை சேர்ந்த ஏழ்மையில் படிக்கும் பள்ளி மாணவர்களை ஊக்கு விக்கும் வகையில், சுவாமிமலை அருகே திம்மக்குடியிலுள்ள அருள்ஜோதி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில், மாணவர்கள் முன் பரதநாட்டியமாடினர்.

    இது குறித்து தகவலறிந்த சாக்கோட்டை க. அன்பழகன் எம்.எல்.ஏ, நேரில் சென்று, பரதநாட்டிய நடனத்தைப் பார்வையிட்டு, பாராட்டு தெரிவித்து, இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பள்ளி செயலாளர் பாலசுப்பிரமணியன், தலைமையாசிரியர் சாந்தி, உதவி ஆசிரியர் கலைச்செல்வி, தி.மு.க ஒன்றிய செயலாளர் சுதாகர், ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×