என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி குழந்தைகள் பரதநாட்டியம் ஆடியபோது எடுத்தபடம்.
விஜயதசமியை முன்னிட்டு பரதநாட்டிய கலை நிகழ்ச்சி
- சேலம் மாவட்டம் ஆத்தூரில் விஜயதசமியை முன்னிட்டு 4 உலக சாதனை படைத்த கலை அருவி நாட்டிய பள்ளி சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது
- நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் நிர்மலா பபிதா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூரில் விஜயதசமியை முன்னிட்டு 4 உலக சாதனை படைத்த கலை அருவி நாட்டிய பள்ளி சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரெட் கிராஸ் சங்க தலைவர் ஜோ கலைஞரின் நாட்டிய பள்ளி ஆசிரியை கிளாடி ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியை ஆத்தூர் நகர மன்ற தலைவி நிர்மலா பபிதா மணிகண்டன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் சத்திய பிரியா, ரெட்கிராஸ் அபி, கவிஞர் சரண், சுகுமார், வணிகர் சங்க கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளி குழந்தைகள் பாரதியின் பாடல்களுக்கு நாட்டியம் ஆடி அனனவரயும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். இதில் 100-க்கனக்கான மாணவிகள் பங்கேற்றனர்.
Next Story






