search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு இசை கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    அரசு இசை கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

    • நட்டுவாங்கம் இரண்டு ஆண்டு பட்டயமும், நாட்டுப்புற கலை மூன்று ஆண்டு பட்டையமும் பயிற்றுவிக்கப்படும்.
    • 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், பரதநாட்டியம் பட்டயம் தேர்ச்சி அல்லது இளங்கலை பரதநாட்டியம் முதன்மைப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் 239 மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இளங்கலை இசை பிரிவில் குரல் இசை, வீணை, வயலின் ஆகியவை முதன்மை பாடங்களாகவும், பட்டய பிரிவில் குரல் இசை, வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம், தவில், நாதசுரம் ஆகியவை முதன்மை பாடங்களாகவும் மற்றும் இசை ஆசிரியர் பயிற்சி பட்டயமும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. முனைவர் பட்ட ஆய்வு மையமாகவும் செயல்பட்டு வருகிறது.

    இத்துடன் இந்த கல்வி ஆண்டு 2022-23-ம் ஆண்டு முதல் இளங்கலை இசை பாடப்பிரிவில் அரசாணை எண் 209, சுற்றுலா மற்றும் பண்பாடு அறநிலையங்கள் பண்துறை நாள் 10-12-2021 வாயிலாக புதிதாக தோற்றுவிக்கப்பட்ட இளங்கலை மற்றும் இளங்கலை பரதநாட்டியம் பாடப்பிரிவுகளும் பட்டய பாடப்பிரிவில் நட்டுவாங்கம் இரண்டு ஆண்டு பட்டயமும், நாட்டுப்புற கலை மூன்று ஆண்டு பட்டையமும் பயிற்றுவிக்கப்படும்.

    இக்கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகளில் புதிதாக சேர்வதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், நாதசுரம், தவில், பரதநாட்டியம், நாட்டுப்புறக்கலை 3 ஆண்டுகள் பட்டயப டிப்பு படிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 16 முதல் 21 வரை இருத்தல் வேண்டும்.நட்டுவாங்கம் 2 ஆண்டுகள் பட்டயப்படிப்பு பயில 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், பரதநாட்டியம் பட்டயம் தேர்ச்சி அல்லது இளங்கலை பரதநாட்டியம் முதன்மைப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 16 முதல் 25 வரை இருத்தல் வேண்டும்.இளங்கலை இசை குரலிசை, வீணை, வயலின், பரதநாட்டியம் 3 ஆண்டுகள் பட்டப்படிப்பு பயில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 17 முதல் 22 வரை இருத்தல் வேண்டும்.முதுகலை இசை குரலிசை, வீணை 2 ஆண்டுகள் பட்டப்படிப்பு பயில இளங்கலை இசை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை.

    இசை ஆசிரியர் பயிற்சி 1 ஆண்டு பட்டயப் படிப்பு பயில 10ஆம் வகுப்புதேர்ச்சியுடன், இளங்கலை இசைப் பட்டம் (அல்லது) இசை பட்டயம் (அல்லது) இசையில் இதற்கு நிகரான பட்டயம் தோச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 16 முதல் 25 வரை இருத்தல் வேண்டும்.

    இசையில் முனைவர் பட்ட ஆய்வு படிப்பு பயில கல்வித் தகுதி மற்றும் ஏனைய விவரங்கள் அறிய தொடர்புடைய கல்லூரியை அணுகவும்.மேற்காணும் தகுதியுடன் இக்கல்லூரியில் சேர விருப்பம் தெரிவிக்கும் மாணவர்கள் திருவையாறு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள இசைக் கல்லூரிக்கு நேரிலோ அல்லது இணையவழியிலோ www.artandculture.tn.gov.in அதற்கான விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்ப டுகிறார்கள். மேலும் தொடர்புக்கு 04362- 261600 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×