search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "barrage"

    • தடுப்பணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அடுத்துள்ள திரளி சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது40), கட்டித் தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு ஹம்சவர்தணி என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று தனது மகளை கல்லூரிக்கு பஸ் ஏற்றி விட்டு சென்ற குமரேசன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் திரளி கவுண்டமா நதி தடுப்பணை அருகே ஆண் பிணம் மிதந்தது. தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    இதுதொடர்பாக போலீ சார் விசாரணை நடத்திய போது தடுப்பணை யில் இறந்து கிடந்தது குமரேசன் என தெரியவந்தது. அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா?என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பேரையும் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவத்தில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருப்பூர் :

    திருப்பூர் பி.என் ரோடு சாந்தி தியேட்டர் அருகில் வேன் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு ஏராளமான வேனை நிறுத்தி வாடகைக்கு ஓட்டி வந்தனர்.இந்த நிலையில் வேனை நிறுத்துவதில் டிரைவர்கள் ராஜா மற்றும் வசீகரன் ஆகியோரு கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ராஜாவின் நண்பர்கள் ஆனந்த் சிவகுமார் ஆகியோர் நேற்று இரவு வேன் ஸ்டாண்டிலிருந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்தநேரத்தில் வசீகரன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு வந்துள்ளனர்.

    அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. சற்று நேரத்தில் அது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் சமாதியாக தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த வசீகரனின் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து ஆனந்த் மற்றும் சிவகுமார் ஆகிய இருவரையும் சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதில் இரண்டு பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தில் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவத்தில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதல் தொடர்பாக வேன் டிரைவர்கள் விக்னேஷ், காளிதாஸ் ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் மீது வீடு புகுந்து சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது.
    • ராதாவுக்கும், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெயமணி கணேசன் என்பவருக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சி அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார். இவரது மனைவி ராதா. இவர் சில மாதங்களுக்கு முன்பு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 25-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இத்தேர்தலின்போது ராதாவுக்கும், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெயமணி கணேசன் என்பவருக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது.இருவரது வீடும் அருகருகே உள்ளது.

    இந்நிலையில் ஜெயமணி தனது உறவினர்களுடன் சேர்ந்து கவுன்சிலர் ராதா வீட்டுக்குள் அவரையும், அவரது மாமியாரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராதா, அவரது மாமியார் ஆகியோர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர்.

    அவர்களை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், நகர செயலாளர் ராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

    இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசில் தி.மு.க. பெண் நிர்வாகி மீது புகார் செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் விசாரணை செய்து வருகிறார்.

    • ஈளாடா தடுப்பணை, முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும், சராசரியாக 9 முதல் 12 அடி ஆழமும் கொண்டதுமான தடுப்பணை அமைந்துள்ளது.

    ஊட்டி:

    கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு ஈளாடா கிராம பகுதியில் சுமார் 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும், சராசரியாக 9 முதல் 12 அடி ஆழமும் கொண்டதுமான தடுப்பணை அமைந்துள்ளது.

    கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான இந்த தடுப்பணையில் அருகிலுள்ள மலைப்பகுதியில் உள்ள இயற்கை ஊற்றுக்களில் வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் மூலம் கோத்தகிரி நேரு பூங்கா அருகிலுள்ள நீர் உந்து நிலையத்திலுள்ள தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டு, நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    இது மட்டுமின்றி தடுப்பணை நீரை நம்பி, நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மலை காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக கோடநாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக ஈளாடா தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதுடன், தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

    தற்போது கோத்தகிரி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மாற்று திட்டமாக கொண்டு வரப்பட்ட அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் நீர் உந்து அறைகளில் ஏற்பட்டு வரும் மின் அழுத்த குறைபாடு காரணமாக மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாவதால், குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    எனினும் கோத்தகிரி நகர மக்களின் குடிநீர் தேவையை பல ஆண்டுகளாக பூர்த்தி செய்து வரும் ஈளாடா தடுப்பணை, முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×