search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Games 2023"

    • குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை பிரீதி பவார் வெண்கலம் வென்றார்.
    • இந்திய அணி இதுவரை 13 தங்கம், 24 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டியின் பெண்கள் குத்துச்சண்டையில் 50-54 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிரீதி பவார் வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இந்திய வீராங்கனையை வீழ்த்திய சீன வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இந்திய அணி இதுவரை 13 தங்கம், 24 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின.
    • இதில் இந்திய அணி 13-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு பெண்கள் ஹாக்கி அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியுடன் மோதியது.

    இதில் இந்திய அணி தொடக்கம் முதலே கோல் மழை பொழிந்தது.

    இறுதியில், இந்திய அணி 13-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்திய பெண்கள் ஹாக்கி அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு டிரா பெற்றது. இதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது.

    இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நாளை நடக்கும் அரையிறுதியில் தென் கொரியாவுடன் மோதுகிறது.

    • வில்வித்தை பெண்கள் காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    • வில்வித்தை ஆண்கள் காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டின் வில்வித்தை போட்டியில் பெண்கள் தனிநபர் காம் பவுண்ட் காலிறுதியில் இந்தியாவின் ஜோதி சுரேகா 147-144 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

    மற்றொரு காலிறுதியில் இந்திய வீராங்கனை அதிதி 149-143 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

    பின்னர் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஜோதி சுரேகா-அதிதி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஜோதி சுரேகா 149-146 என்ற கணக்கில் வென்று தனிநபர் காம்பவுண்ட் பிரிவு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அதிதி வெண்கலப்பதக்கத் துக்கான போட்டியில் விளையாட உள்ளார்.

    இதேபோல், ஆண்கள் தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் காலிறுதியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா 147-147 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் வீரருடன் சமன் செய்தார். இதையடுத்து ஷூட்-ஆப் முறையில் அபிஷேக் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    அதன்பின் நடந்த அரையிறுதியில் அபிஷேக் வர்மா 147-145 என்ற கணக்கில் தென் கொரிய வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் இந்திய வீரர் ஓஜஸ் பிரவீன் 150-142 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    அவர் அரையிறுதியில் தென்கொரிய வீரரை 150-146 என்ற புள்ளி கணக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • முதலில் ஆடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது.
    • யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து அவுட்டானார்.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டில் ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று முதல் காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.

    இன்று காலை நடைபெற்ற முதல் காலிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் சதமடித்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ரிங்கு சிங் 15 பந்தில் 37 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் அணி களமிறங்கியது. திபேந்திர சிங் 32 ரன்னும், சந்தீப் ஜோரா, குஷால் மல்லா 29 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், நேபாளம் 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    • கேனோ ஆண்கள் டபுள் 1000 மீட்டர் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது.
    • உஸ்பெகிஸ்தான் தங்கம், கஜகஸ்தான் வெள்ளியும் வென்றது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டியின் கேனோ ஆண்கள் டபுள் 1000 மீட்டர் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் சிங், சுனில் சிங் சலாம் ஆகியோர் 3ம் இடம் பிடித்து வெண்கலம் வென்றனர்.

    உஸ்பெகிஸ்தான் தங்கம், கஜகஸ்தான் வெள்ளியும் வென்றனர்.

    இந்திய அணி இதுவரை 13 தங்கம், 24 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
    • தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி சதமடித்தார்.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டில் ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று முதல் காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.

    இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய முதல் காலிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெயிக்வாட், ஜெயிஸ்வால் ஆகியோர் களமிறங்கினர்.

    ஆரம்பம் முதல் ஜெயிஸ்வால் அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். 25 ரன்கள் எடுத்திருந்த கெயிக்வாட் அவுட்டானார்.

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெயிஸ்வால் 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

    • ஆசிய விளையாட்டில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
    • இந்தியா இதுவரை 60 பதக்கங்களை வென்று இருக்கிறது.

    ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில் இந்தியா, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வீரர்களை களமிறக்கி உள்ளது.

    அதன்படி ஆசிய விளையாட்டில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை 60 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

    இந்த நிலையில், ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இது குறித்த எக்ஸ் பதிவில், ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்த பிரித்விராஜ் தொண்டைமான், டென்னிஸ்-இல் வெள்ளி பதக்கம் வென்ற ராம்குமார் ராமநாதன், ஸ்குவாஷ் விளையாட்டில் வெண்கலம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

    • பெண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்தியாவின் பருல் சவுத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
    • இதில் இந்தியாவின் பிரீதி லம்பா வெண்கலம் வென்று அசத்தினார்.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி 13 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், தடகளத்தில் பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்தியாவின் பருல் சவுத்ரி வெள்ளிப் பதக்கமும், பிரீதி லம்பா வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தினர்.

    இதுவரை இந்தியா 13 தங்கம், 22 வெள்ளி, 23 வெண்கலம் என 58 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வங்காளதேசத்துடன் மோதியது.
    • இதில் இந்தியா 12-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    பீஜிங்:

    ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வங்காளதேசத்துடன் மோதியது. இதில் தொடக்கம் முதல் இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் முதல் பாதி முடிவில் இந்தியா 6-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    இறுதியில், இந்திய அணி 12-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஹர்மன்பிரித் சிங், மன்தீப் சிங் ஆகியோர் ஹாட்ரிக் கோல் அடித்தனர்.

    நடப்பு தொடரில் இந்திய அணி தான் ஆடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 58 கோல்களை அடித்து அசத்தியது. இதன்மூலம் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    • வில்வித்தையில் இந்திய கலப்பு அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
    • காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெறுகின்றன.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டின் வில்வித்தை போட்டியில் இன்று ரிகர்வ் கலப்பு அணி எலிமினேசன் பிரிவில் அதானு தாஸ், அங்கிதா பகத் ஆகியோரை கொண்ட இந்திய அணி 6-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

    காம்பவுண்ட் கலப்பு அணி எலிமினேசன் பிரிவில் பிரவீன் ஓஜஸ்- ஜோதி சுரேகா வெண்ணாம் ஆகியோரை கொண்ட இந்திய அணி 159-151 என்ற புள்ளி கணக்கில் ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்தியது.

    காம்பவுண்ட் ஆண்கள் அணி எலிமினேசன் பிரிவில் பிரவின் ஓஜஸ், அபிஷேக் வர்மா, ஜவ்கர் பிரதமேஷ் ஆகியோரை கொண்ட இந்திய அணி 235-219 என்ற புள்ளி கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

    ரிகர்வ் பெண்கள் அணி எலிமினேசன் பிரிவில் அங்கிதா பகத், பஜன் கவூர், சிம்ரன்ஜீத் கவூர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 5-1 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.

    ரிகர்வ் ஆண்கள் அணி எலிமினேசன் பிரிவில் அதானு தாஸ், தீராஜ், துஷார் பிரபாகர் ஆகியோர் கொண்ட இந்திய அணி 6-0 என்ற கணக்கில் ஹாங்காங்கை தோற்கடித்தது.

    • இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றன.
    • லீக் ஆட்டங்கள் முடிவில் நேபாளம், ஹாங்காங், மலேசியா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டில் ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றன.

    நேபாளம், மாலத்தீவு, மங்கோலியா, ஹாங்காங், ஜப்பான், கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய 9 அணிகள் லீக் சுற்றில் விளையாடின. அவைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. லீக் ஆட்டங்கள் முடிவில் நேபாளம், ஹாங்காங், மலேசியா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், நாளை முதல் காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன. நாளை காலை 6.30 மணிக்கு நடக்கும் முதல் காலிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன. 11.30 மணிக்கு நடக்கும் 2-வது காலிறுதியில் பாகிஸ்தான், ஹாங்காங் மோதுகின்றன.

    4-ம் தேதி நடக்கும் 3-வது காலிறுதியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் (காலை 6.30 மணி), 4-வது காலிறுதியில் வங்காளதேசம், மலேசியா (காலை 11.30) பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணியில் திலக் வர்மா, ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ஷிவம் துபே, ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ்கான், முகேஷ் குமார் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    • டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் முகர்ஜி ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
    • இந்திய ஜோடி வட கொரியாவிடம் 3-4 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றது.

    ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி 13 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் முகர்ஜி சகோதரிகள், வடகொரிய வீராங்கனைகளுடன் மோதினர். இதில் 3-4 என்ற கணக்கில் தோற்றனர். அரையிறுதியில் தோற்றாலும் வெண்கலப் பதக்கம் பெற்றனர். டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.

    இதன்மூலம் இந்தியா 13 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலம் என 56 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    ×