search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Games 2018"

    ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் ஹாக்கி, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவுக்கு 5 பதக்கம் உறுதியாகி உள்ளது. #AsianGames2018


    பெண்கள் ஹாக்கிப்போட்டியில் இந்திய அணி அரை இறுதியில் சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம் வெள்ளிப்பதக்கம் உறுதியானது. இந்திய அணி இறுதிப்போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது.

    ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பல்லிகல், ஜோஸ்னா சின்னப்பா, சுனையா குருவல்லா தன்விகன்னா ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணியும், ஹரிந்தர்பாலசாந்து, ரம்ஜித் தண்டன், மகேஷ் மன்கோகர், சவுரவ் கோ‌ஷல் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணியும் அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

    இதன்மூலம் ஸ்குவாஷ் போட்டியில் 2 வெண்கலம் உறுதியானது. ஏற்கனவே ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் 3 வெண்கலம் கிடைத்து இருந்தது. அரை இறுதியில் பெண்கள் அணி ஆங்காங்கையும், ஆண்கள் அணி மலேசியாவையும் இன்று சந்திக்கின்றன.

    குத்துச்சண்டை போட்டியில் 4 இந்தியர்கள் கால்இறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர். இதில் அமித் பன்ஹால், விகாஸ் கிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு நுழைந்தனர். இதனால் 2 வெண்கல பதக்கம் உறுதியானது. தீரஜ், சர்ஜூபாலா ஆகியோர் கால்இறுதியில் தோற்றனர்.

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் 7 விளையாட்டுக்களை உள்ளடக்கிய ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். #AsianGames2018 #ArpinderSingh
    ஜகார்த்தா:

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான ஹெப்டத்லான் விளையாட்டில் இந்தியா சார்பில் ஸ்வப்னா பர்மன், பூர்ணிமா ஹெம்பிராம் ஆகியோர் பங்கேற்றனர். 

    100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டம் ஆகிய 7 விளையாட்டுக்களை உள்ளடக்கிய இப்போட்டியில், 7 விளையாட்டுகளிலும் சேர்த்து சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகளை பெறுபவருக்கு தங்கம் பதக்கம் கிடைக்கும். 

    அந்த வகையில் நேற்று பெண்களுக்கான ஹெப்டத்லானில் 4 பந்தயங்கள் முடிந்தன. இன்று காலை நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய பந்தயங்கள் நடந்தது. 6 பந்தயங்கள் முடிவில் ஸ்வப்னா 5218 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருந்தார். இதனால் அவர் தங்கப் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு இருந்தது. மற்றொரு இந்திய வீராங்கனையான பூர்ணிமா 5001 புள்ளியுடன் 4-வது இடத்தில் இருந்தார்.

    இந்நிலையில், பெண்களுக்கான ஹெப்டத்லான் போட்டியில் கடைசி பந்தயமான 800 மீட்டர் ஓட்டம் இன்று மாலை நடந்தது. இதில், ஸ்வப்னா 808 புள்ளிகள் பெற்றார். பூர்ணிமா 836 புள்ளிகள் பெற்றார். ஒட்டுமொத்தத்தில் 6026 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த ஸ்வப்னா தங்கப்பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கு கிடைக்கும் 11-வது தங்கம் ஆகும். 

    ஒட்டுமொத்தமாக 11 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 54 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியது. #AsianGames2018 #ArpinderSingh
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் டூட்டி சந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #DuteeChand
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுத் தொடரில், இன்று பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில், சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனை டூட்டி சந்த் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். மாலையில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் இவர் பந்தய தூரத்தை 23.20 வினாடிகளில் கடந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 

    இப்போட்டியில் பஹ்ரைன் வீராங்கனை ஒடியாங் எடிடியாங் தங்கப் பதக்கமும் (22.96 வினாடி), சீனாவின் வெய் யோங்லி வெண்கலப் பதக்கமும் (23.27 வினாடி) வென்றனர். டூட்டி சந்த் முன்னதாக 100 மீட்டர் ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

    இந்த போட்டியின் முடிவில்,  இந்தியா 9 தங்கம், 20வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 52 பதக்கங்களுடன் 9 இடத்தில் நீடிக்கிறது. #AsianGames2018 #DuteeChand
    ஆசிய விளையாட்டு போட்டி குத்துச் சண்டையில் காலிறுதியில் வெற்றி பெற்று விகாஸ் கிருஷ்ணன், அமித் பதக்கங்களை உறுதி செய்தனர். #AsianGames2018
    18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. குத்துச் சண்டை போட்டியின் கால் இறுதிக்கு 3 வீரர்களும், ஒரு வீராங்கனையும் என மொத்தம் 4 இந்தியர்கள் தகுதி பெற்றிருந்தனர்.

    அமித் பங்கல் (49 கிலோ பிரிவு), தீரஜ் (64 கிலோ பிரிவு), விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ பிரிவு) சர்ஜு பாலா (51 கிலோ பிரிவு) ஆகியோர் தகுதி பெற்று இருந்தனர்.

    இன்று கால் இறுதி ஆட்டங்கள் நடந்தது. அமித் பனகல் வட கொரியாவை சேர்ந்த கிம்ஜாங்கை எதிர் கொண்டார். இதில் அமித் 5-0 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.



    மற்றொரு காலிறுதியில் விகாஸ் கிருஷ்ணன் சீன வீரரை 3-2 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் 3-வது முறையாக ஆசிய பதக்கத்தை விகாஸ் கிருஷ்ணன் உறுதி செய்துள்ளார்.

    சர்ஜு பாலா காலிறுதியில் சீன வீராங்கனையிடம் 0-5 என தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். தீரஜ் போட்டியிட இருக்கிறார்.
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்காக ஹெப்டத்லான் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னா பர்மன் பதக்கத்தை நெருங்குகிறார் #AsiaGames2018
    பெண்களுக்கான ஹெப்டத்லான் பந்தயம் 100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டம் ஆகிய 7 விளையாட்டுக்களை உள்ளடக்கியது.

    இந்தியா சார்பில் ஸ்வப்னா பர்மன், பூர்ணிமா ஹெம்பிராம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த 7 விளையாட்டுகளிலும் சேர்த்து சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகளை பெறுபவருக்கு தங்கம் பதக்கம் கிடைத்தது. நேற்று ஹெப்டத்லானில் 4 பந்தயங்கள் முடிந்தன. இன்று காலை நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய பந்தயங்கள் நடந்தது.

    6 பந்தயங்கள் முடிவில் ஸ்வப்னா 5218 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். சீன வீராங்கனை வாங் 5155 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும், ஜப்பான் வீராங்கனை யூகி யமசாகி 5019 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளர். மற்றொரு இந்திய வீராங்கனையான பூர்ணிமா 5001 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

    ஸ்வப்னா நீளம் தாண்டு தலில் 6.05 மீட்டர் தூரம் (2 -வது இடம்) தாண்டினார். ஈட்டி எறிதலில் 5.85 மீட்டர் தூரம் (5-வது இடம்) எறிந்தார்.



    இந்திய நேரப்படி இன்று மாலை 6.40 மணிக்கு கடைசி பந்தயமான 800 மீட்டர் ஓட்டம் நடக்கிறது. தற்போது ஒட்டு மொத்தத்தில் முன்னிலையில் இருக்கும் ஸ்வப்னா இதில் சிறப்பாக செயல்பட்டு தங்கம் வெல்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல பூர்ணிமா மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.




    100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை டூட்டி சந்த் இன்று 200 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 5.20 மணிக்கு இந்த ஓட்டம் நடைபெறுகிறது. டூட்டி சந்த் இதில் சிறப்பாக ஓடி இந்தியாவுக்கு பதக்கம் பெற்று தருவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
    வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜிவிற்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கலப்பு 4X400 மீட்டர் ரிலே இறுதிப் போட்டியில் முகமது அனாஸ், ஹிமா தாஸ், ஆரோக்கிய ராஜிவ், பூவம்மா ராஜு ஆகியோர் கொண்ட இந்திய அணி 3 நிமிடம் 15.71 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

    இதில் ஆரோக்கிய ராஜிவ் தமிழகத்தைச் சேர்ந்தவர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வாங்கி இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜிவிற்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
    ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 9 தங்கத்துடன் ஐம்பது பதக்கங்களை கைப்பற்றி 8-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் மற்றும் வெள்ளியை கைப்பற்றியது. இத்துடன் மேலும் பல பதக்கங்களை வெல்ல இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 50-ஐத் தொட்டுள்ளது.

    இந்தியா தடகளத்தில் 3, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம் போட்டியில் 2, படகு, டென்னிஸில் 1 தங்கம் என 9 தங்கம் பெற்றுள்ளது.

    தடகளத்தில் 8 வெள்ளி, துப்பாக்கி சுடுதலில் 4 வெள்ளி, வில்வித்தையில் 2 வெள்ளி, குதிரை ஏற்றத்தில் 2 வெள்ளி, பேட்மிண்டன், பகடி, குரேஷ் ஆகியவற்றில் தலா ஒரு வெற்றி என 19 வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. 
    ஆசிய விளையாட்டு போட்டியின் கலப்பு 4X400 மீட்டர் ரிலேயில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் வெள்ளிப் பதக்கம் வென்றனர். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று கலப்பு 4X400 மீட்டர் ரிலே இறுதிச் சுற்று நடைபெற்றது. இந்தியாவுடன் 8 அணிகள் பதக்கத்திற்கான இறுதிச் சுற்றில் இடம்பிடித்தன.

    இதில் முகமது அனாஸ், ஹிமா தாஸ், ராஜிவ் ஆரோக்கியா, பூவம்மா ராஜு ஆகியோர் கொண்ட இந்திய அணி 3 நிமிடம் 15.71 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. பஹ்ரைன் 3 நிமிடம் 11.89 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றது. கஜகஸ்தான் 3 நிமிடம் 19.52 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றது.
    ஆசிய விளையாட்டு போட்டி 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீரர்கள் மஞ்சித் சிங், ஜான்சன் முறையே தங்கம், வெள்ளி வென்றனர். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் மஞ்சித் சிங், ஜின்சன் ஜான்சன் ஆகியோர் தகுதிப் பெற்றனர். இவர்களுடன் மேலும் 6 பேர் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    இறுதிப் போட்டியில் மஞ்சித் சிங் 1 நிமிடம் 46.15 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். ஜின்சன் ஜான்சன் 1 நிமிடம் 46.25 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கத்தார் வீரர் அபுபேக்கர் அப்தல்லா 1 நிமிடம் 46.38 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார்.
    ஆசிய விளையாட்டு போட்டி ஹாக்கியில் இலங்கையை 20-0 என துவம்சம் செய்து இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. #AsianGames2018
    இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஹாக்கியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது.

    இன்று நடைபெற்ற ஆண்களுக்கான லீக் ஆட்டத்தில் இந்தியா இலங்கையை எதிர்கொண்டது. இதில் இந்தியா 20-0 என இலங்கையை துவம்சம் செய்தது. இந்திய அணியின் அக்சய்தீப் சிங் 6 கோல்களும், ஹர்மன்ப்ரீத் சிங், ருபிந்தர் பால் சிங், மந்தீப் சிங் ஆகியோர் தலா மூன்று கோல்களும், லலித் குமார் உபத்யாய் 2 கோல்களும் அடித்தனர். விவேக் சாகர் பிரசாத், அமித் ரோஹிதாஸ், தில்ப்ரீத் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர்.



    இந்த வெற்றியின் மூலம் ‘ஏ’ பிரவில் இடம் பிடித்துள்ள இந்தியா 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் முதல் இடம்பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா முதல் ஆட்டத்தில் இந்தோனேசியாவை 17-0 எனவும், ஹாங் காங்கை 26-0 எனவும், ஜப்பானை 8-0 எனவும், தென்கொரியாவை 5-3 எனவும் வீழ்த்தியிருந்தது.
    ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் தருண் இந்த வெற்றியை தனது தாயாருக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். #AsianGame2018 #DharunAyyasamy
    ஜகர்தா:

    ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் தருண் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராவுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார். விவசாயியான இவரது தந்தை அய்யாசாமி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அங்குள்ள மெட்ரிகுலேசன் பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்க்கும் அவரது தாயார் பூங்கொடி தான் தருணையும், அவரது தங்கை சத்யாவையும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் வளர்த்து வருவதுடன், விளையாட்டில் இருவருக்கும் ஊக்கமும் அளித்து வருகிறார்.

    பதக்கம் வென்ற பிறகு தருண் அளித்த பேட்டியில், ‘எனக்கு 8 வயதாக இருக்கையில் தந்தை இறந்து விட்டார். தாயார் எனக்கான நிறைய தியாகம் செய்து இருக்கிறார். அவருக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன். தற்போதும் அவர் ஆசிரியையாக வேலை பார்த்து மாதத்துக்கு ரூ.14 ஆயிரம் தான் சம்பாதித்து வருகிறார். தற்போது எனது தாயாருக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன். சிறந்த திறனை வெளிப்படுத்தி பதக்கம் வென்றதன் மூலம் அரசு வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய போட்டியாளர்கள் பற்றி சிந்திக்காமல் எனது ஓட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எனது தேசிய சாதனை நேரத்தை விட சிறப்பான நேரத்தில் பந்தயத்தை முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 6 மாதங்களாக போலந்து மற்றும் செக் குடியரசு நாடுகளில் பயிற்சி பெற்றது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது’ என்று தெரிவித்தார்.  #AsianGame2018 #DharunAyyasamy
    ஆசிய விளையாட்டு போட்டி ஸ்டீபிள்சேஸில் இந்திய வீராங்கனை சுதா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டி நடைபெற்றன. பெண்களுக்கான இந்த போட்டியில் இந்திய வீராங்கனை சுதா சிங், சின்டா, உள்பட 14 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் இந்திய வீராங்கனை சுதா சிங் 9 நிமிடம் 40.03 வினாடியில் பந்தய தூரத்தை கடந்த வெள்ளிப் பதக்கம் வென்றார். பஹ்ரைன் வீராங்கனை வின்ஃப்ரெட் யவி 9 நிமிடம் 36.52 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். வியட்நாம் வீராங்கனை தி ஒயான் 9 நிமிடம் 43.83 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார்.

    மற்றொரு இந்திய வீராங்னை சின்ட்டி 10 நிமிடம் 26.21 வினாடிகளில் கடந்த 11-வது இடத்தை பிடித்தார்.
    ×