search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலப்பு 4X400 மீட்டர் ரிலேயில் வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜிவிற்கு ரூ. 30 லட்சம்- முதல்வர் பழனிசாமி
    X

    கலப்பு 4X400 மீட்டர் ரிலேயில் வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜிவிற்கு ரூ. 30 லட்சம்- முதல்வர் பழனிசாமி

    வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜிவிற்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கலப்பு 4X400 மீட்டர் ரிலே இறுதிப் போட்டியில் முகமது அனாஸ், ஹிமா தாஸ், ஆரோக்கிய ராஜிவ், பூவம்மா ராஜு ஆகியோர் கொண்ட இந்திய அணி 3 நிமிடம் 15.71 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

    இதில் ஆரோக்கிய ராஜிவ் தமிழகத்தைச் சேர்ந்தவர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வாங்கி இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜிவிற்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
    Next Story
    ×