என் மலர்

  செய்திகள்

  ஆசிய விளையாட்டு போட்டி ஹாக்கியில் இலங்கையை 20-0 என வீழ்த்தியது இந்தியா
  X

  ஆசிய விளையாட்டு போட்டி ஹாக்கியில் இலங்கையை 20-0 என வீழ்த்தியது இந்தியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய விளையாட்டு போட்டி ஹாக்கியில் இலங்கையை 20-0 என துவம்சம் செய்து இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. #AsianGames2018
  இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஹாக்கியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது.

  இன்று நடைபெற்ற ஆண்களுக்கான லீக் ஆட்டத்தில் இந்தியா இலங்கையை எதிர்கொண்டது. இதில் இந்தியா 20-0 என இலங்கையை துவம்சம் செய்தது. இந்திய அணியின் அக்சய்தீப் சிங் 6 கோல்களும், ஹர்மன்ப்ரீத் சிங், ருபிந்தர் பால் சிங், மந்தீப் சிங் ஆகியோர் தலா மூன்று கோல்களும், லலித் குமார் உபத்யாய் 2 கோல்களும் அடித்தனர். விவேக் சாகர் பிரசாத், அமித் ரோஹிதாஸ், தில்ப்ரீத் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர்.  இந்த வெற்றியின் மூலம் ‘ஏ’ பிரவில் இடம் பிடித்துள்ள இந்தியா 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் முதல் இடம்பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா முதல் ஆட்டத்தில் இந்தோனேசியாவை 17-0 எனவும், ஹாங் காங்கை 26-0 எனவும், ஜப்பானை 8-0 எனவும், தென்கொரியாவை 5-3 எனவும் வீழ்த்தியிருந்தது.
  Next Story
  ×