search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெப்டத்லானில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா பதக்கத்தை நெருங்குகிறார்
    X

    ஹெப்டத்லானில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா பதக்கத்தை நெருங்குகிறார்

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்காக ஹெப்டத்லான் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னா பர்மன் பதக்கத்தை நெருங்குகிறார் #AsiaGames2018
    பெண்களுக்கான ஹெப்டத்லான் பந்தயம் 100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டம் ஆகிய 7 விளையாட்டுக்களை உள்ளடக்கியது.

    இந்தியா சார்பில் ஸ்வப்னா பர்மன், பூர்ணிமா ஹெம்பிராம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த 7 விளையாட்டுகளிலும் சேர்த்து சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகளை பெறுபவருக்கு தங்கம் பதக்கம் கிடைத்தது. நேற்று ஹெப்டத்லானில் 4 பந்தயங்கள் முடிந்தன. இன்று காலை நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய பந்தயங்கள் நடந்தது.

    6 பந்தயங்கள் முடிவில் ஸ்வப்னா 5218 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். சீன வீராங்கனை வாங் 5155 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும், ஜப்பான் வீராங்கனை யூகி யமசாகி 5019 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளர். மற்றொரு இந்திய வீராங்கனையான பூர்ணிமா 5001 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

    ஸ்வப்னா நீளம் தாண்டு தலில் 6.05 மீட்டர் தூரம் (2 -வது இடம்) தாண்டினார். ஈட்டி எறிதலில் 5.85 மீட்டர் தூரம் (5-வது இடம்) எறிந்தார்.



    இந்திய நேரப்படி இன்று மாலை 6.40 மணிக்கு கடைசி பந்தயமான 800 மீட்டர் ஓட்டம் நடக்கிறது. தற்போது ஒட்டு மொத்தத்தில் முன்னிலையில் இருக்கும் ஸ்வப்னா இதில் சிறப்பாக செயல்பட்டு தங்கம் வெல்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல பூர்ணிமா மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.




    100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை டூட்டி சந்த் இன்று 200 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 5.20 மணிக்கு இந்த ஓட்டம் நடைபெறுகிறது. டூட்டி சந்த் இதில் சிறப்பாக ஓடி இந்தியாவுக்கு பதக்கம் பெற்று தருவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
    Next Story
    ×