search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Acid attack"

    சேலத்தில் இளம்பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் தொடர்பாக மரம் அறுக்கும் தொழிலாளியான சீனிவாசனை போலீசார் தேடி வருகிறார்கள். #AcidAttack
    சேலம்:

    சேலம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள எஸ்.பாலம் பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன், ஆட்டோ டிரைவர்.

    இவரும், குகை லோகுசெட்டி தெருவை சேர்ந்த காயத்திரி (வயது 31) என்பவரும் காதலித்து கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகன் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். 2-வது மகன் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்த நிலையில் பாலமுருகனுக்கும், காயத்திரிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு, காயத்திரி வீட்டை விட்டு வெளியேறி குழந்தைகளுடன் குகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    இன்று காலை 9 மணிக்கு 2 மகன்களையும் பள்ளியில் விடுவதற்காக காயத்திரி மொபட்டில் அழைத்துக் கொண்டு சென்றார்.

    குகை மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது, மர்ம நபர் ஒருவர் திடீரென மொபட்டை வழிமறித்து காயத்திரியின் முகத்தில் ஆசிட்டை வீசினார்.

    இதில் காயத்திரியின் முகத்தின் வலது பக்கம், நெஞ்சு பகுதி, கால் பகுதி வெந்தது. ஆசிட்டை ஒரு புறமாக மர்ம நபர் வீசியதால் அது மெல்ல மெல்ல உடலின் ஒரு பக்கமாக பரவியது. வலி தாங்க முடியாமல் அய்யோ... அம்மா... காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கதறி அழுதார்.

    பொதுமக்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து காயத்திரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



    இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காயத்திரி மீது ஆசிட் வீசியவர் பக்கத்து தெருவை சேர்ந்த மரம் அறுக்கும் தொழிலாளி சீனிவாசன்(40) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    பக்கத்து தெரு என்பதால், சீனிவாசனுக்கும், காயத்திரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த காயத்திரியின் பெற்றோர், உறவினர்கள் கண்டித்தனர். சீனிவாசனுடன் பேசக்கூடாது என்று கூறினர். இதையடுத்து காயத்திரியும் சீனிவாசனுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.

    இதையடுத்து தினமும் வந்து என் கூட ஏன்? பேச மறுக்கிறாய் என்று காயத்திரியிடம் கேட்டார். அதற்கு அவர் பதில் எதுவும் சொல்லாமல் சென்றுள்ளார்.

    இதனால் கோபம் அடைந்த சீனிவாசன் சில நாட்களுக்கு முன்பு என்னிடம் பேசாமல் இருந்தால் உன்னை விட மாட்டேன் என்று கூறியதாக தெரிகிறது. ஆனாலும், காயத்திரி பேசவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் ஒரு கேனில் ஆசிட்டை வாங்கிக் கொண்டு வந்து காயத்திரியின் முகத்தில் வீசியது தெரியவந்துள்ளது.

    தலைமறைவாக உள்ள சீனிவாசனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். #AcidAttack
    கர்நாடகா மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தலில் தும்குர் பகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் இனாயத்துல்லா கானின் வெற்றி கொண்டாட்டத்தில் ஆசிட் வீசப்பட்டதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். #KarnatakaLocalBodyElections
    பெங்களூரு:

    கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை சுமார் 60 சதவிகிதம் முன்னிலை பெற்று விளங்குகிறது. இன்று மாலை 4 மணி வரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி 982 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது.

    பாஜக 927 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில், தும்குர் பகுதியில் வெற்றி பெற்ற இனாயத்துல்லா கான் என்ற காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி கொண்டாட்டத்தில் மர்ம நபர்கள் ஆசிட் வீசினர்.

    இந்த ஆசிட் வீச்சில் இனாயத்துல்லாவின் ஆதரவாளர்கள் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #KarnatakaLocalBodyElections 
    கற்பழிப்பு, ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையை ரூ.3 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்த்தி வழங்க பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. #Bihar
    பாட்னா:

    ஒருதலைக் காதல், காதல் தோல்வி போன்ற பல்வேறு காரணங்களால் பெண்கள் மீது ஆசிட் வீசுவதும், கொலை செய்ய முயற்சிப்பதுமான சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டு, மனம் தளராமல் வாழ்பவர்களுக்கு பீகார் அரசு 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கி வருகிறது. இதேபோல் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், தற்போது இந்த நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 7 லட்ச ரூபாய் இனி நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட 14 வயதுக்கும் குறைவானவர்களுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணத் தொகையான 7 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக 50 சதவிகிதம் அதாவது, 10.5 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் எனவும் பீகார் அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Bihar
    ×