search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker attacked"

    • 17 வயது சிறுவன் குடிபோதையில் அறைக்கு வந்தார்.
    • வட மாநில தொழிலாளியை தாக்கிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

    கோவை

    சிதம்பரத்தை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 51). இவர் கோவை வெள்ளலூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவரிடம் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிந்துகுமார் (23) உள்பட 84 வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று கட்டுமான நிறுவனத்தில் காவலாளி பிந்து குமாரை காவலாளி அறையில் இருக்க வைத்து விட்டு ரோந்து சென்றார். அப்போது அதே கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்க்கும் 17 வயது சிறுவன் வெளியே சென்று விட்டு குடிபோதையில் அறைக்கு சென்றார். அப்போது காவலாளி அறையில் இருந்த பிந்துகுமார் இந்தியில் விசாரித்தார். இதில் ஆத்திரம் அடைந்த சிறுவன் தான் வைத்து இருந்த பீர் பாட்டிலால் வடமாநில தொழிலாளியை தாக்கினார். இதனை தடுக்க முயன்ற போது பிந்துகுமாரின் கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் சிறுவன் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து வடமாநில தொழிலாளர்கள் மேஸ்திரி புகழேந்திக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக நிறுவனத்துக்கு விரைந்து சென்று பிந்துகுமாரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடமாநில தொழிலாளியை தாக்கிய 17 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • மது வாங்கி தராத ஆத்திரத்தில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.
    • காயமடைந்தவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே காணப்பாடி மாலப்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது41). இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார்

    சம்பவத்தன்று வேலையில் இருந்த தர்மரா ஜிடம் மாலைப்பட்டியை சேர்ந்த மூர்த்தி (31) தனக்கு மதுபானம் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த மூர்த்தி தகாத வார்த்தைகளால் திட்டி தர்மராஜை கம்பால் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். மேலும் தர்மராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்த மூர்த்தியை வடமதுரை போலீசார் கைது செய்து வேடசந்தூர் சிறையில் அடைத்தனர்.

    • செல்போன் உடைந்தது குறித்து தட்டிக்கேட்ட தொழிலாளி தாக்கப்பட்டார்.
    • காயமடைந்த தொழிலாளி திரவியராஜ் மருத்துவமனையில் அனுமதி.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள மேலமாவடியை சேர்ந்தவர் திரவியராஜ் (வயது 38). தொழிலாளி. அதே ஊரை சேர்ந்தவர் கணேசன் (39). 2 பேரும் உறவினர்கள்.

    இந்நிலையில் சமீபத்தில் நடந்த திரவியராஜ் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த கணேசனுடன், அவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது திரவியராஜின் செல்போன் உடைந்தது. சம்பவத்தன்று திரவியராஜ், கணேசன் வீட்டிற்கு சென்று உடைந்த செல்போன் குறித்து கேட்டார்.

    அப்போது ஏற்பட்ட தகராறில் காயம்அடைந்த திரவியராஜ் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து 2 தரப்பையும் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குளத்தில் மனைவியை மது குடிக்க வலியுறுத்தி தகராறில் ஈடுபட்ட தொழிலாளி குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை அக்னிமாடன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 36). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சீதா (30). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முருசேனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. 

    இந்நிலையில் நேற்று இரவு முருகேசன் வீட்டில் இருந்து மதுக்குடித்துள்ளார். அப்போது சீதாவையும் மதுக்குடிக்குமாறு கூறியுள்ளார். இதற்கு சீதா மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த முருகேசன் சீதாவை அடித்து தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த அவர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது குறித்து ஆலங்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவையில் தனியார் கம்பெனி ஊழியரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை பிச்சைவீரன்பேட் புதுநகர் வடக்கு வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் தசரதன் (வயது 42). தனியார் கம்பெனி ஊழியர்.

    இவர் கடந்த 28-ந் தேதி இரவு மேட்டுப்பாளையத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

    அப்போது 2 பேர் தசரதனிடம் வந்து இந்த முகவரி எங்கு இருக்கிறது? என்று கேட்டனர். அதற்கு தசரதன் எனக்கு தெரியாது என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தசரதனை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து தசரதன் மேட்டுப்பாளைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் தசரதனை தாக்கியது சின்னயன் பேட் பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (வயது 21), சாரம் பகுதியை சேர்ந்த கிஷோர் (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×