search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "textbooks"

    • அயோத்தியில் அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது.
    • பள்ளி பாடப் புத்தகங்களில் கடவுள் ராமரின் வரலாறு இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியானது.

    புதுடெல்லி:

    உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

    இந்நிலையில், வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள என்.சி.இ.ஆர்.டி. சமூக அறிவியல் நிபுணர் குழு, கடவுள் ராமர் பற்றிய பாடங்களை இடம்பெறச் செய்யலாம் என்ற பரிந்துரையை வழங்கி இருப்பதாக தெரிகிறது.

    சங்க கால இந்தியா என்ற பிரிவில் ராமாயணம், ராமர் அயோத்தியை ஆட்சி செய்த விதம், வனவாசம் உள்ளிட்டவை இடம்பெறும் வகையிலான பரிந்துரை வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனை அரசு ஏற்கும் பட்சத்தில், விரைவில் பள்ளி பாடப் புத்தகங்களிலும் கடவுள் ராமர் குறித்த வரலாறு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • புத்தகங்களை அந்தந்த வட்டார கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.
    • பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றனர்.

    திருப்பூர்:

    காலாண்டு தேர்வு தொடங்கிய ஓரிரு நாளில், இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள் சென்னையில் இருந்து திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தெற்கு பகுதி பள்ளிகளுக்கான புத்தகம், நோட்டுகள் குப்பா ண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், வடக்கு பகுதி பள்ளிகளுக்கு புத்தகங்கள் 15 வேலம்பாளையம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் இருப்பு வைக்கப்ப ட்டிருந்தது. தேர்வு முடிவடைந்ததை தொடர்ந்து, புத்தகங்களை அந்தந்த வட்டார கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.

    இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர் கல்வி மாவட்டத்தை பொறுத்தவரை, மொழிப்பாடம், பிற பாடங்கள் உட்பட 70 ஆயிரம் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஐந்தாம் வகுப்புக்கு 14 ஆயிரம் புத்தகங்கள், குறைந்தபட்சமாக ஒன்றாம் வகுப்புக்கு 79 ஆயிரம் புத்தகங்கள் வந்துள்ளன.

    இவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் வசம் ஒப்படைக்கப்படும். பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
    • தொடர்ந்து குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தமிழகம் முழுவதும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்பு களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    மேயர் ஆய்வு

    அப்போது தொன்மை யான புராதான சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இப்பள்ளி அதன் பழமை மாறாமல் இருக்க, பள்ளி குழந்தைகள் சிரமமின்றி கல்வி கற்க வேண்டும் என்பதற்கான ஏற்கனவே செய்யப்பட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் பள்ளி மாண வர்களுக்கு இனிப்பு கள், புதிய பாடப் புத்தகங் களை வழங்கினார். தொடர்ந்து குழந்தை தொழி லாளர்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் அவர் பேசுகையில், கோடை விடுமுறை முடிந்து முதல்நாள் பள்ளிக்குச் வந்துள்ள மாணவர்களக்கு வாழ்த்துகள். படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள். உலகைப் புரிந்து கொள்ளுங்கள்.

    நீங்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும். நான் உறுதுணையாக இருப்பேன் என்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்திற் கேற்ப மாணவ- மாணவி கள் கல்வி கற்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியின் போது மாநகராட்சி கவுன்சி லர்கள் மும்தாஜ், சுரேஷ் குமார், முன்னாள் கவுன்சில ரும், தி.மு.க.வட்ட செயலா ளருமான ரவிந்திரன், போல் பேட்டை பகுதி செயலாளர் ஜெயக்குமார், பகுதி செய லாளர் டூவிபுரம் ரவி, 38-வது வார்டு மொய்தீன் மற்றும் ஜேஸ்பர் ஞான மார்ட்டின் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன.
    • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் முருக பவனத்தில் உள்ள பாடநூல் கழக கிடங்கில் பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணியை அமைச்சர் இ.பெரியசாமி, பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அதன் பிறகு அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கிய ஒரு வாரத்திலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படும். புத்தகங்கள் மட்டுமின்றி கல்வி உபகரணங்களையும் மாணவர்களுக்கு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.

    பாடநூல்களை பொறுத்தவரையில் தட்டுப்பாடு என்பது கிடையாது. அனைவருக்கும் அரசின் இலவச புத்தகங்கள் கிடைக்கும்.

    தேனி மாவட்டத்தில் சுற்றி வரும் அரிசி கொம்பன் யானையை பிடிக்க வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். விரைவில் அதற்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி தனது பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய 3 கோடியே 56 லட்சம் புத்தகங்கள் தயார் நிலையில் அனுப்பப்பட்டு விட்டன. மேலும் இலவச பாட புத்தகங்களுடன் 11 கல்வி உபகரணங்களும் வழங்கப்படும். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைப்பார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. குறிப்பாக 6ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்தால் அவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். மேலும் கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு பாடத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் திராவிட மொழி குடும்பம் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது முழுமையான வாழ்க்கை வரலாறு பாடத்தை சேர்க்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அவர் தமிழக முதலமைச்சரின் அனுமதி பெற்று இதற்கான உத்தரவை வழங்குவார் என்றார்.

    • மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது
    • பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுரை

    வேலுார்:

    கோடை விடுமுறை முடிந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை ஜூன் 1-ந் தேதியும், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 5-ந் தேதியும் வகுப்பு கள் தொடங்க உள்ளன.

    இதையொட்டி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 2023-24ம் ஆண்டில் 1 முதல் பிளஸ்-2 வரையிலான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் உள்ளிட்ட இலவச நலத்திட்ட உபகரணங்கள் எல்லாம், பள்ளிக்கல்வித்துறை மூலமாக மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    வேலுார் மாவட்டத்தில் 157 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், அந்தந்த பள்ளிகளுக்கு வினியோகம் செய்யும் பணி, காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது.

    முதல்கட்டமாக, வேலுார், அணைக்கட்டு, கே.வி.குப்பம், காட்பாடி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டன. தொடர்ந்து, குடியாத்தம், பேரணாம்பட்டு, கணியம்பாடி ஒன்றியங்களை சேர்ந்த பள்ளி களுக்கு ஓரிரு நாட்களில் புத்தகங்கள் வழங்கப்படும்.

    அதோடு, மாணவர் களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களை எல்லாம், பள்ளிகளில் பாதுகாப்பாக வைத்து, பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுதவிர, மாவட்டத்தில் இயங் கும் 779 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி, ஓரிரு நாளில் தொடங்கப்படும் என கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    • அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் இலவச புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
    • 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் இன்னும் 3 வாரங்களில் அச்சிடப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்விப் பணிகள் கழகம் 2023-24-ம் கல்வியாண்டுக்கான 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக 2 கோடிக்கும் அதிகமான புத்தகங்களை அச்சிட்டுள்ளது.

    இந்த புத்தகங்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள. டி.பி.ஐ. வளாகம், அடையாறு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள பாட நூல் கழக கிடங்கு ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த பாடப்புத்தகங்கள் விற்பனை தொடங்கி உள்ளது.

    இந்த புத்தகங்களை பெற தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பணம் செலுத்திய பிறகு இந்த பாடப் புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம். புத்தகங்களை வினியோகம் செய்ய டி.ஜி.பி. வளாகத்தில் 4 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

    அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் இலவச புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவை பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

    தமிழ்நாடு பாட நூல் கழகம் மொத்தம் 5 கோடி பாடப் புத்தகங்களை அச்சடித்துள்ளது. இதில் 3.75 கோடி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. 1.25 கோடி புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் இன்னும் 3 வாரங்களில் அச்சிடப்படும். பள்ளிகள் திறக்கப்படும் நாளில் அவை மாணவர்களுக்கு வழங்கப்படும்.

    மேலும் மாணவர்களுக்கான பைகள், காலணிகள், சாக்ஸ் வினியோகமும் தொடங்கியுள்ளது. கலர் பென்சில்கள், கிரேயான்கள், ஜியோ மெட்ரிபாக்ஸ் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு வரும் ஜூன் மாதத்திற்கு முன்பு வழங்கப்படும்.

    9-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் முதல் பாடம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி 'செம்மொழியான தமிழ்மொழியாம்" என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

    • பொதுத்தேர்வு பணி முடிவடையும் முன்பு புத்தகம் அச்சிடும் பணி முடிந்து விடும் என்றனர்.
    • அடுத்த கல்வியாண்டில் படிக்க உள்ள 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    நடப்பு கல்வியாண்டு (2022 - 2023) மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரையும், பிளஸ் 1 பொது தேர்வு மார்ச் 14-ந் தேதி துவங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரையும் , பிளஸ் 2 பொதுதேர்வு மார்ச் 13-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரையும் நடக்கிறது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது 9, 10, 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நிறைவு பெற்றவுடனோ, கோடை விடுமுறைக்கு முன்னதாகவோ அவர்கள் அடுத்த கல்வியாண்டில் படிக்க உள்ள 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

    பொதுத்தேர்வை அவர்கள் எதிர்கொள்வதற்கு இது உதவும். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் - டிசம்பரில் பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி துவங்கி விட்டது. பொதுத்தேர்வு பணி முடிவடையும் முன்பு புத்தகம் அச்சிடும் பணி முடிந்து விடும் என்றனர். 

    • மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.
    • உற்சாகமாக வாங்கி சென்றனர்

    பெரம்பலூர்

    காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளி திறந்த முதல் நாளிலேயே பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு 2-ம் பருவ விலையில்லா பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன. அதனை மாணவர்கள் உற்சாகமாக வாங்கி சென்றனர்

    • ஈரோடு மாவட்டத்தில் 6, 7-ம் வகுப்புக்கான பாட புத்தகங்கள் ரெயில்வே காலனி பள்ளியில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
    • இது தவிர 6, 7, 8, 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேவையான 80 பக்க நோட்டுகளும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    ஈரோடு:

    காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வரும் 10-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

    இதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தீவிர படுத்தப்ப ட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் கொல்லம் பாளையம் ெரயில்வே காலனி மேல்நிலைப்ப ள்ளியில் இருந்து 6, 7-ம் வகுப்புக்கான 2-ம் பருவ பாட நூல்களும், 6 முதல் 9-ம் வகுப்பு களுக்கான நோட்டுகளும் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

    இது குறித்து தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலர்கள் கூறியதாவது:

    காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பெரும்பாலான பள்ளிகளில் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டு 2-ம் பருவ தேர்வுக்கான பாடங்கள் தொடங்கியுள்ளன.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் சுயநிதி பள்ளிகள் என 55 பள்ளிகளுக்கு தேவையான 6, 7-ம் வகுப்புக்கான பாட புத்தகங்கள் ரெயில்வே காலனி பள்ளியில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த பள்ளிகளுக்கு தேவையான அனைத்து பாடப்புத்தகங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தவிர 6, 7, 8, 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேவையான 80 பக்க நோட்டுகளும் அனுப்பி வைக்கப்படுகிறது. 5 பாட புத்தகங்களுக்கு தேவையான 5 வகையான நோட்டுகளும் அனுப்பி வைக்கப்படுகிறது. இவை இலவசமாக வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தீவிரம்.
    • ‘இல்லம் தேடி கல்வி மையம்” மூலம் மாலைநேர சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தன.

    மதுரை

    தமிழகத்தில் கடந்த மாதம் 14-ந் தேதி பொது தேர்வு முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ- மாணவிகளுக்கு ஜூன் 13-ந் தேதி (நாளை) முதல் பள்ளி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை திறக்கப்பட உள்ளன. ஒரு வாரமாக பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. பள்ளியில் தூய்மை பணிகள், கட்டிடத்தின் உறுதி நிலை, சீரான மின்இணைப்பு, கழிவு நீர் தொட்டிகளை மூடுதல் ஆகிய பணிகளை தலைமை ஆசிரியர் மேற்பார்வையில் ஊழியர்கள் செய்தனர்.

    மதுரை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 166 பள்ளிக்கூ டங்கள் உள்ளன. இங்கு 5 லட்சத்து 15 ஆயிரத்து 276 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நாளை பள்ளி திறக்கும் நாள் அன்றே பாடபுத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடு கள் நடந்து வருகின்றன. அன்றைய தினமே புதிய மாணவர் சேர்க்கையும் நடக்கிறது.மதுரை மாவட்டத்தில் 1-10ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு காலை 9.10 முதல், மாலை 4.10 வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9 முதல் மாலை 4 வரை வகுப்புகள் நடைபெறும்.

    பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டபோதிலும் 'இல்லம் தேடி கல்வி மையம்" மூலம் மாலைநேர சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தன. மாணவர்கள் கல்வி கற்பதில் தயக்க நிலை- இடையூறு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×