search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Premji"

    • மே 1 ஆம் தேதி அஜித் குமார் 53- வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.
    • 2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், மகத், என பலர் நடித்து வெளியான திரைப்படம் மங்காத்தா.

    வெங்கட் பிரபு தற்பொழுது விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். கோட் திரைப்படம் இந்தாண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான விசில் போடு சில நாட்களுக்கு முன் வெளியாகி மிக வைரலானது.

    வெங்கட் பிரபு இயக்கும் படங்கள் அனைத்தும் காமெடிக் கலந்து வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும். அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், மகத், என பலர் நடித்து வெளியான திரைப்படம் மங்காத்தா.

    இன்ஸ்பக்டர் விநாயக் மகாதேவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் மிகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார். ஒரு கடத்தல்காரனை தப்பிக்க விட்டதற்காக அவரை ச்ஸ்பண்ட் செய்து விடுவார்கள். அப்பொழுது அவர் ஒரு கும்பலை சந்திக்கிறார். அவர்கள் 500 கோடி ரூபாய் பணத்தொகையை கடத்த திட்டம் போடுகிறார்கள். அதற்கு அஜித் உதவுவதாக கூறுவார் அதற்கு அடுத்து என்ன நடந்தது என்பதே கதைக்களம்.

    இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். படத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும். படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.

    மே 1 ஆம் தேதி அஜித் குமார் 53- வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதை மேலும் சிறப்பிக்கும் வகையில் மங்காத்தா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய பட்க்குழு திட்டமிட்டுள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்திற்கு பிறகு இவர் ஏராளமான படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.
    • பிரேம்ஜிக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

    நடிகர் சிலம்பரசன் இயக்கி, நடித்து பெரும் வெற்றி பெற்ற வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரேம்ஜி. இதைத் தொடர்ந்து இவர் சென்னை 28 படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவர் ஏராளமான படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.

    அந்த வகையில், இவர் மற்ற இயக்குனர்கள் படங்களில் நடித்ததை விட தனது சகோதரர் வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்டவை பிரேம்ஜிக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

    தமிழ் திரையுலகில் சிங்கிளாக வலம்வரும் பிரேம்ஜி தனது திருமணம் பற்றி வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். புத்தாண்டு நாளில் இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "புத்தாண்டு வாழ்த்துக்கள், இந்த ஆண்டு நான் திருமணம் செய்து கொள்கிறேன். டாட்" என்று குறிப்பிட்டுள்ளார். 


    ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் என்று இசையமைப்பாளர் அனிருத், ஆர்.கே.நகர் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். #RKNagar #Anirudh
    ‘சென்னை 600028’ படத்தின் இரண்டாம் பாகத்தை தன்னுடைய பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் சார்பில் தயாரித்த வெங்கட் பிரபு, இரண்டாவது படமாக வைபவை வைத்து ஆர்.கே.நகர் என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கியுள்ளார். 

    வைபவுக்கு ஜோடியாக ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் நடித்த சானா அல்தாப் நடிக்கிறார். சம்பத் வில்லனாக நடிக்கிறார். பிரேம்ஜி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

    இதில் அனிருத் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு டிரைலரை வெளியிட்டார். பின்னர் அவர் பேசும்போது, ‘நான் இந்த படத்திற்கு விருந்தினராக வரவில்லை. ஒரு விசிறியாக வந்திருக்கிறேன். இந்த படத்தின் நாயகன் வைபவ் நடித்த ‘மேயாதமான்’ படத்தை இதுவரைக்கும் 10 தடவைக்கும் மேல் பார்த்திருப்பேன். அந்த படத்தில் வைபவ்வின் காமெடி, டைமிங் ஆகியவற்றை நானும் என் நண்பர்களும் ரசித்திருக்கிறோம். 

    ஆர்.கே.நகர் படத்தின் இயக்குனர் சரவண ராஜன் இயக்கத்தில் முந்தைய படமான ‘வடகறி’ படத்தில் நான் ஒரு பாட்டு பாடியிருக்கிறேன். நண்பர் விவேக்தான் இசையமைத்திருந்தார். இசை சுனாமி பிரேம்ஜிக்கும் எனக்கும் நல்ல நட்பு இருக்கிறது. இசை சுனாமி டைட்டில் பிரேம்ஜிக்கு பொருத்தமாக இருக்கிறது. இதை அவர் வைத்துக் கொள்ள நான் வேண்டிக்கிறேன். 



    சிவாவிற்கும் நான் மிகப்பெரிய விசிறி. நான் தியேட்டரில் படம் பார்ப்பது குறைவு. ரஜினி, அஜித் படங்களை முதல் நாளில் போய் பார்ப்பேன். அதுக்குப் பிறகு சிவாவுடைய படத்தைதான் முதல் நாள் போய் பார்ப்பேன். மேடைக்காக சொல்லவில்லை. உண்மையாக சொல்லுகிறேன். அவருடைய காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரவுக்கும் நான் விசிறிதான். சினிமாவில் நண்பர்கள் கிடைப்பது அரிது. ஆனால், வெங்கட் பிரபு பெரிய நண்பர்கள் பட்டாளமே வைத்துள்ளார். அதை தொடர்ந்து மெயிண்டெயின் பண்ணிட்டு வருகிறார். என்னுடைய நண்பர்கள் குழுவும் இதை கடைப்பிடிக்க வலியுறுத்தி வருகிறேன். 

    இவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘ஆர்.கே.நகர்’ படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்’ என்றார்.
    வெங்கட் பிரபு தயாரிப்பில் பிரேம்ஜி இசையில் உருவாகி இருக்கும் ‘ஆர்.கே.நகர்’ படத்தின் சென்சார் ரிசல்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. #RKNagar #RKNagarMovie
    தமிழகத்தில் சமீபத்தில் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்ட தொகுதி ஆர்.கே.நகர். இந்த தொகுதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியாகும். அவருடைய மறைவுக்கு பிறகு இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா அதிகமாக இருந்ததால் இந்த தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர், தேர்தல் நடத்தப்பட்டது. 

    இந்த தொகுதியின் பெயரை தான் தயாரிக்கும் படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளார் வெங்கட் பிரபு. ‘சென்னை 600028’ படத்தின் இரண்டாம் பாகத்தை தன்னுடைய பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் சார்பில் தயாரித்த வெங்கட் பிரபு, தன்னுடைய தயாரிப்பில் இரண்டாவது படமாக வைபவ் நடிக்கும் படத்திற்கு ஆர்.கே.நகர் என்று பெயர் வைத்துள்ளார்.

    இப்படத்தை ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கியுள்ளார். வைபவுக்கு ஜோடியாக ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் நடித்த சானா அல்தாப் நடிக்கிறார். சம்பத் வில்லனாக நடிக்கிறார். பிரேம்ஜி இசையமைக்கிறார்.



    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுபப்பட்டது. படத்தை பார்த்த குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    ×