search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "permission denied"

    • புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவி உள்பட 217 காலியிடங்களுக்கு இன்று தேர்வு நடைபெற்றது.
    • நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 மையங்கள் இந்த தேர்வுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    தமிழக ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவியில் 211 பேர், கணக்காளர் 5 பேர், புள்ளியியல் கோர்ப்பாளர் ஒருவர் என மொத்தம் 217 காலியிடங்களுக்கு இன்று தேர்வு நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வு இன்று காலை மற்றும் மாலை என 2 வேளைகளில் நடந்தது. இந்த தேர்வையொட்டி நெல்லையில் தேர்வு மையங்கள் நேற்றே தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 மையங்கள் இந்த தேர்வுக்காக ஒதுக்கப் பட்டிருந்தது. மாவட்ட அளவில் 2 கல்லூரிகளில் 4 மையங்களும் மாநகரப் பகுதியில் 5 பள்ளிகளில் 6 மையங்களிலும் தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வுக்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 2,773 பேர் விண்ணப்பித்திருந்தனர். காலையில் நடந்த தேர்வை 1,482 பேர் மட்டுமே எழுதினர். இது 53.44 சதவீதம் ஆகும். 1,296 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    தேர்வு எழுதுவதற்காக தேர்வர்கள் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வர தொடங்கினர். பின்னர் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு எழுதும் அறைக்கு சென்றனர். முன்னதாக அவர்களது நுழைவு சீட்டை அதிகாரிகள் சரி பார்த்தனர்.

    இதில் ஹால்டிக்கெட், அடையாள அட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேலும் குறிப்பிட்ட நேரத்தி ற்குள் தேர்வு மையங்களுக்கு வராத வர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

    சங்கரன்கோவிலை சேர்ந்த ஒரு பெண் டவுன் சாப்டர் பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக வந்திருந்தார். ஆனால் அவர் 5 நிமிடம் தாமதமாக வந்ததாக அவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக அவர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டார். ஆனாலும் அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.இதனால் அந்த பெண் தேர்வு மையம் முன்பு நின்று அழுது கொண்டிருந்தார். இது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    • ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம் நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டில் அனுமதி–கோரி இருந்தனர். இதற்கு அனுமதி அளிக்கப் பட்டது.
    • விழுப்புரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்து இருந்தனர்

    விழுப்புரம்:

    இந்திய சுதந்திரதினத்தில் 75-வது ஆண்டுவிழா, அம்பேத் கார் நூற்றாண்டு விழா, விஜயதசமி ஆகிய–வற்றை முன்னிட்டு அக்டோபர் 2-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம் நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டில் அனுமதி–கோரி இருந்தனர். இதற்கு அனுமதி அளிக்கப் பட்டது.இதனைத்தொடர்ந்து ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மனு அளித்தனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்தில் மனு அளித்து இருந்தனர். இந்த ஊர்வலத்துக்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுஉ ள்ளது. இதற்கான உத்தரவினை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதா பிறப்பித்து உள்ளார். 

    • திண்டிவனம் மற்றும் திண்டிவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 26 விநாயகர் சிலைகளை பல்வேறு இடங்களில் வைத்துள்ளார்.
    • இந்து முன்னணி மாவட்ட தலைவர் பிரபு விநாயகர் சிலை வைப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    விழுப்புரம் :

    திண்டிவனத்தை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட தலைவர் பிரபு. இவர் திண்டிவனம் மற்றும் திண்டிவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 26 விநாயகர் சிலைகளை பல்வேறு இடங்களில் வைத்துள்ளார். இந்நிலையில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் பிரபு தலைமையிலான குழுவினர் தற்போது திண்டிவனம் நேரு வீதியில் உள்ள காய்கறி மார்க்கெட் அருகே விநாயகர் சிலை வைக்க வேண்டி திண்டிவனம் சார் ஆட்சியரிடம் சென்று அனுமதி கேட்டார். இதற்கு சார் ஆட்சியர் அனுமதி மறுத்துவிட்டார். இதற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் பிரபு விநாயகர் சிலை வைப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் திண்டிவனம் ஏ.எஸ்பி. அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார் நேரு வீதி பகுதியில் போலீசார்கள் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி பெரும் பரபரப்பாக உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் ஆறுகட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து இறுதிக்கட்ட பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் பாஜக தலைவர் அமித் ஷாவின் பேரணிக்கு மேற்கு வங்காளம் அரசு அனுமதி மறுத்துள்ளது.
    கொல்கத்தா:

    ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி பாராளுமன்றத்துக்கு ஆறுகட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலில்  வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான மோதல்கள் நடந்தன.

    பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர்.



    இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷாவின் மிக பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணிக்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர். இந்த பேரணியில் பங்கேற்பதற்காக அமித் ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டதால் அம்மாநில பாஜகவினர் கொதிப்படைந்துள்ளனர்.

    சோமனூர் பஸ் நிலையத்தில் விபத்து நடந்து ஓராண்டான நிலையில் அந்த இடத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.
    கோவை:

    கோவை மாவட்டம் சோமனூர் பஸ் நிலையத்தின் மேற்கூரை கடந்த ஆண்டு செப்டம்பர் 7 -ந் தேதி இடிந்து விழுந்தது.

    இதில் அரசு பஸ் கண்டக்டர் சிவக்குமார்(வயது 43), சோமனூரை சேர்ந்த கல்லூரி மாணவி தாரணி(20), பல்லடம் அய்யம்பாளையத்தை ஈஸ்வரி(40) உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது.

    சோமனூர் பஸ் நிலையத்தில் விபத்து நடந்து ஓராண்டான நிலையில் உயிரிழந்த 5 பேருக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் அஞ்சலி கூட்டத்துக்கு கருமத்தம்பட்டி போலீசார் அனுமதி மறுத்தனர்.

    இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நள்ளிரவில் பஸ் நிலைய வளாகத்தில் இறந்தவர்களின் உருவபடங்கள் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது அஞ்சலி நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதி மறுத்துவிட்டதால் வேறுவழியின்றி இரவோடு இரவாக  நிகழ்ச்சி நடத்துவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். #tamilnews
    நாகர்கோவிலில் தி.மு.க. போராட்டத்திற்கு மட்டுமே அனுமதி மறுக்கப்படுகிறது என்று ஆர்ப்பாட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ பேசினார். #propertytaxhike
    நாகர்கோவில்:

    சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், வரி உயர்வை திரும்ப பெற கோரியும் இன்று தி.மு.க.வினர் கண்டன போராட்டம் நடத்தினர். நாகர்கோவில் நகராட்சி முன்பு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட் டம் நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சுரேஷ் ராஜன் தலைமை தாங்கினார். ஆஸ்டின் எம்.எல்.ஏ., பெர்னார்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். இதற்காகவே தி.மு.க. போராட்டம் நடத்துகிறது. குமரி மாவட்ட தி.மு.க. சார்பில் இங்கு போராட்டம் நடத்த போலீசாரிடம் முன்கூட்டியே அனுமதி கேட்டோம். அவர்கள் நேற்று அனுமதி மறுப்பதாக தெரிவித்தனர்.

    குமரி மாவட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி பைக் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. ஆளும் கட்சியினர் சாலை எங்கும் பேனர்கள் வைக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் தி.மு.க.வினரின் போராட்டத்திற்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. நாங்கள் இனி அனுமதி கேட்காமலேயே போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. தேர்தல் நடத்தப்படுமானால் தி.மு.க. வெற்றிபெறும். அடுத்து தமிழகத்தில் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சர் ஆவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆஸ்டின் எம்.எல்.ஏ. பேசியதாவது:- ஆளும் அ.தி.மு.க. ஆட்சியில் முட்டை கொள்முதலில் தொடங்கி பல்வேறு திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அ.தி.மு.க. அரசு மத்திய அரசின் அடிமையாகவே செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் மத்திய அரசின் ரூ.3,500 கோடி நிதி கிடைத்திருக்கும். இப்போது அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் கேட்சன், கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு செயலாளர் தில்லை செல்வம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், தாமரைபாரதி, சற்குரு கண்ணன், அணி அமைப் பாளர்கள் ஆர்.எஸ்.பார்த்த சாரதி, சிவராஜ், சதாசிவம், எம்.ஜே.ராஜன், பாலஜனாதி பதி, சி.என்.செல்வன், ஷேக் தாவூது, செயற்குழு உறுப்பினர் சாய்ராம், சைமன் ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்கள் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய கேட்டு கோஷங்கள் எழுப்பினர். #propertytaxhike
    ×