என் மலர்
நீங்கள் தேடியது "DMK struggle"
சென்னை:
சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அலுவலர்கள் முன்பு தி.மு.க. சார்பில் 27-ந்தேதி (இன்று) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் முன்பு தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது உயர்த்தப்பட்ட சொத்து வரியை ரத்து செய்ய கோரி முழக்கமிட்டனர்.
சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் அடையாறில் உள்ள சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ., எஸ்.அரவிந்த்ரமேஷ் எம்.எல்.ஏ., பாலவாக்கம் க.சோமு, க.தனசேகரன், வேளச்சேரி பி.மணிமாறன், மு.மகேஷ்குமார், எஸ்.குண சேகரன், பாலவாக்கம் த.விஸ்வநாதன், எம்.எஸ்.கே.இப்ரஹிம், வாசுகி பாண் டியன், இந்திராநகர் மு.ரவி, எம்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ், பி.குணாளன், என்.சந்திரன், கே.கண்ணன், மு.ராஜா, எஸ்.ரவிச்சந்திரன், சு.சேகர், வி.இ.மதியழகன், சைதை சம்பத், சைதை மா.அன்பரசன், வழக்கறிஞர் எம்.ஸ்ரீதரன், எம்.கே.ஏழுமலை, உ.துரைராஜ், ஆர்.டி.பூபாலன், எஸ்.பாஸ்கரன், கீதாஆனந்த் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமையில், அயனாவரம் ஆன்டர்சன் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி 6-வது மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் எம்.எல்.ஏ.க்கள் ப.ரங்கநாதன், தாயகம் ரவி, மாவட்ட துணை செயலாளர் தேவஜவகர் நிர்வாகிகள் கிரிராஜன், ஐ.சி.எப் முரளிதரன், தமிழ்வேந்தன், வில்லிவாக்கம் வாசு, புஷ்பராஜ், சாமிகண்ணு ஜெ.பி.ஜெயின் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுதர்சனம் தலைமையில் மாதவரம் மண்டல அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பகுதி செயலாளர் துக்காராம், புழல் நாராயணன், கவிதா நாராயணன் வாழையடி தோப்பு கார்த்திக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சொத்து வரியை குறைக்க கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.
தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் முன்பு வடசென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர்கள் ஜெபதாஸ் பாண்டியன், வே.சுந்தர்ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பிரச்சாரக்குழு செயலாளர் சிம்லா முத்துச் சோழன் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.பி.சேகர், பொறியாளர் அணி அமைப்பாளர் நரேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #DMKstruggle #Propertytax
ராமநாதபுரம்:
தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி அலுவலகங்கள் முன்பாக இன்று (27-ந்தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதைத் தொடாந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி அலுவலகங்கள் முன்பு இன்று காலை மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில், தி.மு.க. உயர் நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் சுப.தங்கவேலன் முன்னிலையில் ஆர்ப்பாட் டம் நடந்தது. மாநில மகளிர் அணி துணை தலைவர் பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்எல்.ஏ. முருகவேல், மாநில சார்பு அணி நிர்வாகிகள் போஸ், கிருபானந்தம், ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமேசுவரத்தில் நகர் பொறுப்பாளர் நாசர் கான் தலைமையிலும், தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி முன்னிலையிலும், கீழக்கரை நகர் பொறுப்பாளர் பசீர் அகமது தலைமையிலும், மாவட்ட துணை செயலாளர் சங்கு முத்துராமலிங்கம் முன்னிலையிலும், பரமக்குடியில் நகர் செயலாளர் சேது கருணாநிதி தலைமையிலும், முன்னாள் எம்.எல்.ஏ. திசைவீரன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். #Propertytax #DMK