search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக போராட்டத்திற்கு மட்டுமே அனுமதி மறுக்கப்படுகிறது- ஆர்ப்பாட்டத்தில் சுரேஷ்ராஜன் ஆவேசம்
    X

    திமுக போராட்டத்திற்கு மட்டுமே அனுமதி மறுக்கப்படுகிறது- ஆர்ப்பாட்டத்தில் சுரேஷ்ராஜன் ஆவேசம்

    நாகர்கோவிலில் தி.மு.க. போராட்டத்திற்கு மட்டுமே அனுமதி மறுக்கப்படுகிறது என்று ஆர்ப்பாட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ பேசினார். #propertytaxhike
    நாகர்கோவில்:

    சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், வரி உயர்வை திரும்ப பெற கோரியும் இன்று தி.மு.க.வினர் கண்டன போராட்டம் நடத்தினர். நாகர்கோவில் நகராட்சி முன்பு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட் டம் நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சுரேஷ் ராஜன் தலைமை தாங்கினார். ஆஸ்டின் எம்.எல்.ஏ., பெர்னார்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். இதற்காகவே தி.மு.க. போராட்டம் நடத்துகிறது. குமரி மாவட்ட தி.மு.க. சார்பில் இங்கு போராட்டம் நடத்த போலீசாரிடம் முன்கூட்டியே அனுமதி கேட்டோம். அவர்கள் நேற்று அனுமதி மறுப்பதாக தெரிவித்தனர்.

    குமரி மாவட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி பைக் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. ஆளும் கட்சியினர் சாலை எங்கும் பேனர்கள் வைக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் தி.மு.க.வினரின் போராட்டத்திற்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. நாங்கள் இனி அனுமதி கேட்காமலேயே போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. தேர்தல் நடத்தப்படுமானால் தி.மு.க. வெற்றிபெறும். அடுத்து தமிழகத்தில் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சர் ஆவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆஸ்டின் எம்.எல்.ஏ. பேசியதாவது:- ஆளும் அ.தி.மு.க. ஆட்சியில் முட்டை கொள்முதலில் தொடங்கி பல்வேறு திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அ.தி.மு.க. அரசு மத்திய அரசின் அடிமையாகவே செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் மத்திய அரசின் ரூ.3,500 கோடி நிதி கிடைத்திருக்கும். இப்போது அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் கேட்சன், கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு செயலாளர் தில்லை செல்வம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், தாமரைபாரதி, சற்குரு கண்ணன், அணி அமைப் பாளர்கள் ஆர்.எஸ்.பார்த்த சாரதி, சிவராஜ், சதாசிவம், எம்.ஜே.ராஜன், பாலஜனாதி பதி, சி.என்.செல்வன், ஷேக் தாவூது, செயற்குழு உறுப்பினர் சாய்ராம், சைமன் ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்கள் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய கேட்டு கோஷங்கள் எழுப்பினர். #propertytaxhike
    Next Story
    ×