search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Keelapavoor"

    • கீழப்பாவூர் குளத்தில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை
    • கால்வாய் அருகில் ராட்சத ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் அதிக அளவில் துள்ளி விளையாடின.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் குளம் சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்துக்கு சிற்றாற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. மேலப்பாவூர் குளம், கீழப்பாவூர் குளம் ஆகியவை நிரம்பிய பின்னர் அருணாப்பேரி குளம், நாகல்குளம், ஆலங்குளம் தொட்டியான்குளம் உட்பட பல்வேறு குளங்களுக்கு தண்ணீர் செல்லும்.

    இந்த நிலையில் தென்காசி, குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் கீழப்பாவூர் பெரிய குளத்துக்கு தண்ணீர் வந்தது.

    இந்நிலையில், பாவூர்சத்திரம்- சுரண்டை சாலையில் கீழப்பாவூர் குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாய் அருகில் ராட்சத ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் அதிக அளவில் துள்ளி விளையாடின. இதை ஏராளமான மக்கள் அங்கு உள்ள பாலத்தின் மீது அமர்ந்து வேடிக்கை பார்த்தனர்.

    வழக்கமாக குளத்தில் இருக்கும் கெளுத்தி மீன்கள் ஒல்லியான உடல்வாக்குடன் நீளமாக காணப்படும். ஆனால் மிகப்பெரிய அளவில் 10 கிலோவுக்கு மேல் எடை இருக்கக்கூடிய அளவுக்கு இருந்த இந்த மீன்களை பார்த்த மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

    இந்த மீன்கள் இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அந்த மீன்களை வீடியோ எடுத்து மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலருக்கு பொதுமக்கள் அனுப்பி விசாரித்தபோது அவை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து மீனை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • படகு குழாம் அமைப்பதால் சுற்றுலாத்துறை மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்கும்.
    • கீழப்பாவூர் - நாகல்குளம் இணைப்பு பாலம் கட்டுமான பணிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் பேரூராட்சியின் மையப்பகுதியில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய குளமான கீழப்பாவூர் பெரியகுளத்தில் சுற்றுலாத்துறை மூலமாக புதியதாக படகு குழாம் அமைப்பது குறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், சுற்றுலாதுறை வளர்ச்சி அலுவலர் சீதாராமன் ஆகியோர் முன்ஆய்வு பணி மேற்கொண்டனர்.

    இதில் கீழப்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது, கீழப்பாவூரில் படகு குழாம் அமைப்பதால் கீழப்பாவூர் பேரூராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் பயன் அடைவது மட்டுமின்றி தென்காசியில் சுற்றுலாத்துறை மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்கும் என அவர்கள் கூறினர்.

    தொடர்ந்து கீழப்பாவூர் பெரியகுளத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டு வரும் கீழப்பாவூர் - நாகல்குளம் இணைப்பு பாலம் கட்டுமான பணிகளையும் அவர்கள் பார்வையிட்டனர். 

    • கூட்டத்தில் ரூ. 71 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டது.
    • யூனியன் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    தென்காசி:

    கீழப்பாவூர் யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் காவிரி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆணையாளர் கண்ணன்,மேலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கீழப்பாவூர் யூனியனுக்கு உட்பட்ட தொடக்கப் பள்ளிகளில் பழுதடைந்த 10 பள்ளி கட்டிடங்களை முதற்கட்டமாக பழுது நீக்குவதற்காக ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.32 லட்சத்து 76 ஆயிரமும், பழுதடைந்துள்ள 18 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் பழுது நீக்குவதற்கு ரூ.39 லட்சம் என மொத்தம் ரூ. 71 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டது.

    கூட்டத்தில் யூனியன் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது கவுன்சிலர் முருகேசன் கூறும் போது, குறும்பலாபேரி கோவில் மைதானம் தற்போது பெய்த மழையால் சேரும் சகதியுமாக உள்ளது. எனவே அதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும், அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அதற்கு பதிலளித்து பேசிய யூனியன் தலைவி காவேரி, இது தொடர்பாக அந்த இடங்களை பார்வையிட்டும் பஞ்சாயத்து மூலம் கொசு மருந்து தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றார். கவுன்சிலர் சரவணன் கூறும் பொழுது பூலாங்குளம் பஞ்சாயத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார். அதற்கு ஆணையாளர் கண்ணன் இதற்கு மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    • 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக வீடுகள் தோறும் தேசிய கொடி வழங்கப்பட்டது.
    • ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர்,ஊராட்சி செயலர் உள்ளிட்டோர் வீடுகள் தோறும் தேசிய கொடிகளை வழங்கினர்

    தென்காசி:

    கீழப்பாவூர் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி யில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக வீடுகள் தோறும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்கராஜன் என்ற கோபி, துணைத்தலைவர் மகேஷ்வரி மற்றும் ஊராட்சி செயலர் சவுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஊராட்சி பணியாளர்களுடன் இணைந்து வீடுகள் தோறும் தேசிய கொடிகளை வழங்கி னர். இதில் ஆவுடையானூர் ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.  

    • மானியத்தில் வழங்கிய ஆடு,மாடு மற்றும் கோழிகள், ஊட்டச்சத்து காய்கறி விதைகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.
    • பெத்தநாடார்பட்டி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட தரிசு நில தொகுப்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றை பார்வையிட்டார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் வெள்ளக்கால் கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் தலா 45,000 வீதம் மானியத்தில் வழங்கிய ஆடு,மாடு மற்றும் கோழிகள், ஊட்டச்சத்து காய்கறி விதைகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.தொடர்ந்து பெத்தநாடார்பட்டி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட தரிசு நில தொகுப்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்மலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை பாலசுப்பிரமணியன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சேதுராமலிங்கம், துணை அலுவலர் முருகன் உட்பட பலர் உடனிருந்தனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் தாமஸ், மாரியம்மாள், ரமேஷ், செய்யது அலி பாத்திமா, குமார் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சந்திரன், முத்துராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • காலை 7 மணி முதல் ஹோமம், 108 இளநீர், 108 லிட்டர் பால் அபிஷேகம், பரமபுருஷ ஆராதனை நடைபெற்றது.
    • விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

    காலை 7 மணி முதல் பஞ்சஸூக்த ஹோமம், 108 இளநீர், 108 லிட்டர் பால் அபிஷேகம், பரமபுருஷ ஆராதனை வருசாபிஷேகத்திற்கான கும்பாபிஷேகம், விமானம், மூலவர் மற்றும் உத்ஸவ மூர்த்திகளுக்கு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு கருடசேவை, நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது.

    ஏற்பாடுகளை ரவி பட்டாச்சாரியார் தலை மையில் விழா குழுவினர் செய்தனர்.வருசாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    ×