search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISL"

    • விக்டர் மோங்கில் இதற்கு முன் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் ஒடிசா அணிக்காக விளையாடி வந்தார்.
    • மேலும் விக்டர் மோங்கில் ஸ்பெயினை சேர்ந்த அட்லெடிகோ மாட்ரிட் பி போன்ற பல்வேறு கிளப் அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

    சென்னை:

    இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து அணியை வலுவாக கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

    அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த அணி கிரேக்க-ஆஸ்திரேலியாவை சேர்ந்த அப்போஸ் டோலோஸ் கியானோவை ஒப்பந்தம் செய்தது. இவர் கவாலா, எத்னிகோஸ் போன்ற பல கிரேக்க முதல்-பிரிவு அணிகளுக்காக சிறப்பான பங்களிப்பை அளித்தவர்.

    இந்த நிலையில் தற்போது அந்த அணி ஸ்பெயின் வீரர் விக்டர் மோங்கிலை ஒப்பந்தம் செய்வதாக அறிவித்துள்ளது. இவர் இதற்கு முன் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் ஒடிசா அணிக்காக விளையாடி வந்தார்.

    மேலும் இவர் ஸ்பெயினை சேர்ந்த அட்லெடிகோ மாட்ரிட் பி போன்ற பல்வேறு கிளப் அணிகளுக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐ.எஸ்.எல். காலபந்து தொடரில் சென்னையின் எப்.சி. அணி தனது முதல் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 4-ம் இடம் பெற்றுள்ளது.
    கோவா:

    8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், ஐதராபாத் எப்.சி அணியும் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. 

    ஆட்டத்தின் இரண்டாம் பாதியின் 66-வது நிமிடத்தில் சென்னை அணி வீரரான விளாடிமிர் கோமர் ஒரு கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலைப் படுத்தினார். அதன்பின், ஐதராபாத் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

    இறுதியில், சென்னை அணி 1-0 என்ற கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தியது. 
    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கோவாவில் நேற்று நடைபெற்ற கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவா அணி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு 2-வது அணியாக முன்னேறியது. #ISL #Goa #Kerala
    கோவா:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவாவில் நேற்று இரவு நடந்த 80-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தன. 22-வது நிமிடத்தில் கோவா அணியின் பெர்ரான் கொராமினாஸ் முதல் கோல் அடித்தார். 25-வது நிமிடத்தில் கோவா அணி வீரர் எடு பெடியா கோல் திணித்தார். முதல் பாதியில் கோவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

    78-வது நிமிடத்தில் கோவா அணி வீரர் ஹீகோ கோல் அடித்தார். பதில் கோல் திருப்ப கேரளா அணியினர் எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தியது. 16-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 9 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் 31 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்ததுடன் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு 2-வது அணியாக முன்னேறியது. ஏற்கனவே பெங்களூரு எப்.சி. அணி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தது. 17-வது ஆட்டத்தில் ஆடிய கேரளா அணி சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும்.

    நாளை (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் 81-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.(கவுகாத்தி)-எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்றிரவு கவுகாத்தியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 6-வது வெற்றியை பெற்றது. #ISL #NorthEast #ChennaiyinFC
    கவுகாத்தி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் நேற்றிரவு கவுகாத்தியில் நடந்த 61-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி (கவுகாத்தி) 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது. கவுகாத்தி அணியில் வெற்றிக்குரிய கோலை 87-வது நிமிடத்தில் பார்த்தோலோம் ஒக்பேச் அடித்தார். ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட சென்னை அணி 13-வது லீக்கில் ஆடி சந்தித்த 10-வது தோல்வி இதுவாகும். இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி- பெங்களூரு எப்.சி. அணிகள் (இரவு 7.30 மணி) சந்திக்கின்றன.
    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கோவாவில் நேற்றிரவு நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவா எப்.சி.யை வீழ்த்தியது. #ISL2018 #BengalureFC #GoaFC
    கோவா:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவாவில் நேற்றிரவு நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவா எப்.சி.யை வீழ்த்தியது. பெங்களூரு அணியில் ராகுல் பெகே (34-வது நிமிடம்), சுனில் சேத்ரி (77-வது நிமிடம்) கோல் போட்டனர்.

    6-வது லீக்கில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 5-வது வெற்றியாகும். இன்றைய ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் (இரவு 7.30 மணி) சந்திக்கின்றன. 
    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் புனேவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னையின் எப்.சி. அணி. #ISL2018 #FCPuneCity #ChennaiyinFC
    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி மற்றும் எப்.சி புனே சிட்டி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் புனே அணியை சேர்ந்த ஆஷ் குர்னியன் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சென்னை அணியை சேர்ந்த மாலிசன் ஆல்வ்ஸ் 54-வது நிமிடத்திலும், கிரிகோரி நெல்சன் 56-வது நிமிடத்திலும், இனிகோ கால்டெரின் 69-வது நிமிடத்திலும், தோய் சிங் 72வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வலு சேர்த்தனர்.

    ஆட்டத்தின் இறுதியில் புனே அணியை சேர்ந்த ஜோனாதன் 90-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இதன்மூலம், சென்னையின் எப்.சி அணி 4- 2 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. #ISL2018 #FCPuneCity #ChennaiyinFC
    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டரை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பெங்களூரு எப்.சி. அணி வெற்றி பெற்றது. #ISL2018 #BengaluruFC #KeralaBlasters
    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் பெங்களூரு அணியை சேர்ந்த சுனில் சேத்ரி முதல் கோலை அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை சேர்ந்த ஸ்லாவியா ஸ்டோஜனோவிக் 30வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன்பின் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1 - 1 என்ற கணக்கில் சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 80-வது நிமிடத்தில் பெங்களூரு அணியை சேர்ந்த நிகோலா கிரெம்விரிக் ஒரு கோல் அடித்தார். இதனால் பெங்களூரு அணி 2- 1 என முன்னிலை பெற்றது.

    இறுதியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெங்களூரு எப் சி அணி வெற்றி பெற்றது.
    பெங்களூரு அணிக்கு இது 4-வது வெற்றி என்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தையும் தக்கவைத்துள்ளது. #ISL2018 #BengaluruFC #KeralaBlasters
    டெல்லியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் டெல்லி டைனமோஸ் மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகளுக்கு எதிரான போட்டி சமனில் முடிந்தது. #ISL2018 #DelhiDynamos #JamshedpurFC
    புதுடெல்லி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் டெல்லி டைனமோஸ் மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூரை சேர்ந்த செர்ஜியோ சிடோன்சா முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதையடுத்து, முதல் பாதி முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.

    இதேபோல், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், டெல்லி அணியின் லாலியன்ஜுவாலா சாங்கே 55-வது நிடத்திலும், அட்னா கமோனா 58-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினர்.

    இதற்கு பதிலடியாக, ஜாம்ஷெட்பூர் அணியின் ஜோஸ் லூயிஸ் 72வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், டெல்லி டைனமோஸ் மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2 - 2  என்ற கோல் கணக்கில் சமனிலை பெற்றது. இந்த ஆட்டத்தின் முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி புள்ளிப் பட்டியலில் ஜாம்ஷெட்பூர் அணி முதலிடம் பிடித்துள்ளது. #ISL2018 #DelhiDynamos #JamshedpurF
    சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணியை 1- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது. #ISL2018 #MumbaiCityFC #ChennaiyinFC
    சென்னை:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி அணியும், மும்பை சிட்டி எப்.சி அணியும் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் 20-வது நிமிடத்தில் மும்பை சிட்டி எப்.சி அணியின் மடாவ் சுகோவ் முதல் கோலை அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதல் பாதி முடிவில் மும்பை சிட்டி எப்.சி. அணி 1- 0 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், சென்னையின் எப்.சி அணியை 1- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மும்பை சிட்டி எப்.சி. அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை சிட்டி எப்.சி. அணி மூன்றாவது வெற்றி பெற்றது. #ISL2018 #MumbaiCityFC #ChennaiyinFC
    புனேவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் புனே சிட்டி அணிகளுக்கு எதிரான போட்டி சமனில் முடிந்தது. #ISL2018 #KeralaBlasters #FCPunecity
    புனே:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் புனேவில் நேற்று நடைபெற்ற போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் எப்.சி. புனே சிட்டி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் புனே அணியின் மார்கோ ஸ்டன்கோவிக் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதையடுத்து, முதல் பாதி முடிவில் புனே அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.

    இதேபோல், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் நிகோலா கிரெம்வரிக் ஒரு கோல் அடித்து 1-1 என ஆட்டத்தை சமனிலைப்படுத்தினார். 

    இறுதியில், எப்.சி. புனே சிட்டி அணி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1- 1 என்ற கோல் கணக்கில் சமனிலை பெற்றது. இந்த ஆட்டத்தின் முடிவில் புள்ளிப் பட்டியலில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. #ISL2018 #KeralaBlasters #FCPunecity
    ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #JamshedpurFC #FCGoa
    ஜாம்ஷெட்பூர்:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற போட்டியில் ஜாம்ஷெட்பூர் எப்.சி, கோவா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மைக்கேல் சூசைராஜ் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

    இதையடுத்து, கோவா அணியின் சார்பில் மூர்ததா பால் 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன் பின்னர், முதல் பாதி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனிலை வகித்தன.

    இரண்டாவது பாதியில், மைக்கேல் சூசைராஜ் மீண்டும் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து, மெமோ 77-வது நிமிடத்திலும், சுமித் பாசி 78-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர்.

    இறுதியில், ஜாம்ஷெட்பூர் அணி 4- 1 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த  வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. #ISL2018 #JamshedpurFC #FCGoa
    கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #BengaluruFC #ATK
    கொல்கத்தா:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு எப்.சி, கொல்கத்தா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் கோமல் தடால் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

    முதல் பாதியின் முடிவில் பெங்களூரு அணியின் மிக்கு ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, முதல் பாதி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எரிக் பர்தாலு 47-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 2-1 என்ற பெங்களூரு அணி முன்னிலை பெற்றது. அதன்பின்னர் ஆட்டம் முடியும்வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், பெங்களூரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது பெங்களூரு அணி பெற்ற மூன்றாவது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. #ISL2018 #BengaluruFC #ATK
    ×