என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோல் அடித்த மகிழ்ச்சியில் சென்னை அணி
    X
    கோல் அடித்த மகிழ்ச்சியில் சென்னை அணி

    ஐஎஸ்எல் கால்பந்து - ஐதராபாத்தை வென்றது சென்னை

    ஐ.எஸ்.எல். காலபந்து தொடரில் சென்னையின் எப்.சி. அணி தனது முதல் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 4-ம் இடம் பெற்றுள்ளது.
    கோவா:

    8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், ஐதராபாத் எப்.சி அணியும் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. 

    ஆட்டத்தின் இரண்டாம் பாதியின் 66-வது நிமிடத்தில் சென்னை அணி வீரரான விளாடிமிர் கோமர் ஒரு கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலைப் படுத்தினார். அதன்பின், ஐதராபாத் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

    இறுதியில், சென்னை அணி 1-0 என்ற கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தியது. 
    Next Story
    ×