search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cricket World Cup 2019"

    உலகக்கோப்பைக்கான அதிகாரப்பூர்வமற்ற 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா நாளை வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்கி, ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 நாடுகளும் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

    தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான்-  வங்காளதேசம் அணிகள் மோதிய நேற்றைய பயிற்சி ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. அதன்படி கடந்த 25-ந்தேதி நடந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோற்றது.

    நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. ஜடேஜா, ஹர்திக் பாண்டியா மட்டுமே நேர்த்தியாக விளையாடினார்கள். இந்த மோசமான ஆட்டத்தால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.



    இந்திய அணி 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசத்தை நாளை (28-ந்தேதி) எதிர் கொள்கிறது. இதனால் வங்காள தேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கையை அதிகரிக்க செய்வது அவசியமாகும். இதில் திறமையாக ஆடினால்தான் உலகக்கோப்பையில் நம்பிக்கையுடன் விளையாட முடியும். இதனால் இந்திய வீரர்கள் உத்வேகத்துடன் விளையாடுவார்கள்.

    நாளை நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய ஆட்டங்களில் ஆஸ்திரேலியா- இலங்கை, இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    அம்பதி ராயுடுவின் சர்ச்சைக்குரிய வகையிலான ‘ட்வீட்’டுக்கு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் சிறப்பான வகையில் பதில் அளித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வியாழக்கிழமை (மே 30-ந்தேதி) தொடங்குகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் அம்பதி ராயுடுக்குப் பதில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார்.

    இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ‘‘பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் (3 dimensions) சிறந்து விளங்கக்கூடியவர் என்பதால் விஜய் சங்கரை தேர்வு செய்தோம்’’ என இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்திருந்தார்.

    மேலும், ‘‘அம்பதி ராயுடுக்கு போதிய போட்டிகள் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் சரியாக விளையாடவில்லை’’ என்றார். இதை மேற்கோள்காட்டி த்ரீ டைமன்சன் வார்த்தையை சுட்டிக்காட்டும் வகையில் ``உலகக்கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்காகப் புதிதாக ‘3டி கிளாஸ்’ ஒரு செட் ஆர்டர் செய்துள்ளேன்" எனக் கிண்டலாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் அம்பதி ராயுடு.



    அம்பதி ராயுடுவின் இந்தப் பதிவு குறித்து தற்போது விஜய் சங்கர் பேசியுள்ளார். தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர்  இதுகுறித்து கூறுகையில் ‘‘ஒரு கிரிக்கெட்டர் உலகக்கோப்பை போன்ற ஒரு தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை என்றால் எப்படி உணருவார்கள் என்பது எனக்குத் தெரியும்.

    ஒரு வீரரின் பார்வையில் அந்த வலி எனக்குப் புரியும். அதே நேரம் ராயுடு என்னைக் குறிவைத்து அப்படி டுவீட் செய்யவில்லை என்பதும் தெரியும். அந்த நேரத்தில் அவரின் உணர்ச்சியை வெளிப்படுத்த அந்த டுவீட்டை போட்டிருப்பார். அப்போது அவர் என்ன சூழ்நிலையில் இருந்திருப்பார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது’’ என்றார்.
    பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் மோடிக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் மோடி தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார்.

    இவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    விராட் கோலி தனது டுவிட்டரில் ‘‘பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். உங்களுடைய தொலைநோக்கு பார்வையால் இந்தியா மிகப்பெரிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று நாங்கள் நம்புகின்றோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசாக வழங்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
    துபாய்:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. 46 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்த போட்டிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அறிவித்தது. உலக கோப்பை போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.70 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.14 கோடியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



    சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு கடந்த முறை (2015) ரூ.26 கோடியும், 2-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.12 கோடியும் வழங்கப்பட்டது. தற்போது இந்த இரண்டு தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அரைஇறுதியில் தோல்வி பெறும் அணிகளுக்கு ரூ.5 கோடியே 61 லட்சம் பரிசாக கிடைக்கும். இந்த தொகையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியில் தோல்வி கண்ட அணிகளுக்கு ரூ.4 கோடியே 20 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

    லீக் சுற்றில் அணிகளின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.28 லட்சம் கிடைக்கும். லீக் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூ.70 லட்சம் வழங்கப்படும். 
    ×