என் மலர்

  செய்திகள்

  ‘3டி கண்ணாடி’: அம்பதி ராயுடுவின் சர்ச்சை ‘ட்வீட்’டுக்கு விஜய் சங்கர் ‘ஸ்மார்ட்’ பதில்
  X

  ‘3டி கண்ணாடி’: அம்பதி ராயுடுவின் சர்ச்சை ‘ட்வீட்’டுக்கு விஜய் சங்கர் ‘ஸ்மார்ட்’ பதில்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அம்பதி ராயுடுவின் சர்ச்சைக்குரிய வகையிலான ‘ட்வீட்’டுக்கு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் சிறப்பான வகையில் பதில் அளித்துள்ளார்.
  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வியாழக்கிழமை (மே 30-ந்தேதி) தொடங்குகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் அம்பதி ராயுடுக்குப் பதில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார்.

  இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ‘‘பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் (3 dimensions) சிறந்து விளங்கக்கூடியவர் என்பதால் விஜய் சங்கரை தேர்வு செய்தோம்’’ என இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்திருந்தார்.

  மேலும், ‘‘அம்பதி ராயுடுக்கு போதிய போட்டிகள் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் சரியாக விளையாடவில்லை’’ என்றார். இதை மேற்கோள்காட்டி த்ரீ டைமன்சன் வார்த்தையை சுட்டிக்காட்டும் வகையில் ``உலகக்கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்காகப் புதிதாக ‘3டி கிளாஸ்’ ஒரு செட் ஆர்டர் செய்துள்ளேன்" எனக் கிண்டலாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் அம்பதி ராயுடு.  அம்பதி ராயுடுவின் இந்தப் பதிவு குறித்து தற்போது விஜய் சங்கர் பேசியுள்ளார். தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர்  இதுகுறித்து கூறுகையில் ‘‘ஒரு கிரிக்கெட்டர் உலகக்கோப்பை போன்ற ஒரு தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை என்றால் எப்படி உணருவார்கள் என்பது எனக்குத் தெரியும்.

  ஒரு வீரரின் பார்வையில் அந்த வலி எனக்குப் புரியும். அதே நேரம் ராயுடு என்னைக் குறிவைத்து அப்படி டுவீட் செய்யவில்லை என்பதும் தெரியும். அந்த நேரத்தில் அவரின் உணர்ச்சியை வெளிப்படுத்த அந்த டுவீட்டை போட்டிருப்பார். அப்போது அவர் என்ன சூழ்நிலையில் இருந்திருப்பார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது’’ என்றார்.
  Next Story
  ×