என் மலர்

  செய்திகள்

  நாளை 2-வது பயிற்சி ஆட்டம்: டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விஸ்வரூபம் எடுப்பார்களா?
  X

  நாளை 2-வது பயிற்சி ஆட்டம்: டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விஸ்வரூபம் எடுப்பார்களா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகக்கோப்பைக்கான அதிகாரப்பூர்வமற்ற 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா நாளை வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது.
  உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்கி, ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 நாடுகளும் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

  தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான்-  வங்காளதேசம் அணிகள் மோதிய நேற்றைய பயிற்சி ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. அதன்படி கடந்த 25-ந்தேதி நடந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோற்றது.

  நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. ஜடேஜா, ஹர்திக் பாண்டியா மட்டுமே நேர்த்தியாக விளையாடினார்கள். இந்த மோசமான ஆட்டத்தால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.  இந்திய அணி 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசத்தை நாளை (28-ந்தேதி) எதிர் கொள்கிறது. இதனால் வங்காள தேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கையை அதிகரிக்க செய்வது அவசியமாகும். இதில் திறமையாக ஆடினால்தான் உலகக்கோப்பையில் நம்பிக்கையுடன் விளையாட முடியும். இதனால் இந்திய வீரர்கள் உத்வேகத்துடன் விளையாடுவார்கள்.

  நாளை நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய ஆட்டங்களில் ஆஸ்திரேலியா- இலங்கை, இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
  Next Story
  ×