search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cricket fans"

    • உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
    • கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹாட் ஸ்டார் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

    ஆசிய கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கிறது.

    இதனையடுத்து இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு தயாராக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹாட் ஸ்டார் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை மொபைல் பயனார்கள் இலவசமாக பார்க்கலாம் என அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனையின் போது கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #ChepaukStadium #CSKvsMI
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 7 லீக் போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இதில் 5 போட்டிகள் முடிந்து விட்டன.

    6-வது ஐ.பி.எல். லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் இடையே நாளை மறுநாள் (26-ந்தேதி) நடைபெறுகிறது.

    இதற்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் இன்று நடந்தது. குறைந்த டிக்கெட் ரூ.1300. இந்த டிக்கெட்டை வாங்குவதற்கு இன்று காலையிலேயே ரசிகர்கள் திரண்டு வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். அவர்களிடையே நெரிசல் ஏற்படாமல் இருக்க சவுக்கு கட்டைகள் மூலம் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தது.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் ரசிகர்கள் டிக்கெட் வாங்க முண்டியடித்தனர். இதில் தடுப்பு கட்டைகள் முறிந்து விழுந்தது. இதனால் ரசிகர்களும் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் போலீசார் அவர்களை தள்ளி விட்டனர்.

    ஒரு கட்டத்தில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை தள்ளி விட்டனர். ஆனாலும் கூட்டம் கலையவில்லை.

    இதற்கிடையில் சாலையிலும் ஏராளமானவர்கள் திரண்டு நின்றதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. அவர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தும் கலையவில்லை. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.

    இதனால் சேப்பாக்கம் ஸ்டேடியம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு போக்குவரத்து சீரானது. #ChepaukStadium #CSKvsMI
    உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டிற்கு 100 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் இருப்பதாகவும், அதில் 90 சதவிதம் பேர் இந்தியாவில் இருப்பதாகவும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #IndiaCricketFans #ICC #BCCI #IPL

    புதுடெல்லி: 

    உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டு ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது. சொல்லப்போனால் கால்பந்து விளையாட்டை தொடர்ந்து அதிக ரசிகர்கள் கிரிக்கெட் விளையாட்டிற்கு தான் இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். இந்திய அணியின் நட்சத்திர வீரர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 

    கிரிக்கெட் விளையாட்டில் டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து விட்டது. டி20 போட்டிகள் அறிமுகமான பின் டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்களின் ஆதரவு குறைந்து வருகிறது. இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடர் தான் உலகில் மிக பிரபலமான கிரிக்கெட் லீக் போட்டியாகும்.

    இந்நிலையில் உலகம் முழுவதும் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது என்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஐசிசியில் இடம்பிடித்துள்ள 12 முக்கிய கிரிக்கெட் விளையாடும் நாடுகள், சீனா மற்றும் அமெரிக்காவில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.



    இந்த ஆய்வின் முடிவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு 100 கோடிக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில் குறிப்பாக 90 சதவிதம் பேர் இந்தியாவில் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு பெண் ரசிகர்களும் அதிகளவில் உள்ளனர். இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் அறிமுகப்படுத்தப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாகும். #IndiaCricketFans #ICC #BCCI #IPL
    ×