என் மலர்
செய்திகள்

100 கோடி கிரிக்கெட் ரசிகர்களில் 90 சதவிதம் பேர் இந்தியாவில் உள்ளனர் - ஆய்வில் தகவல்
உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டிற்கு 100 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் இருப்பதாகவும், அதில் 90 சதவிதம் பேர் இந்தியாவில் இருப்பதாகவும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #IndiaCricketFans #ICC #BCCI #IPL
புதுடெல்லி:
உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டு ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது. சொல்லப்போனால் கால்பந்து விளையாட்டை தொடர்ந்து அதிக ரசிகர்கள் கிரிக்கெட் விளையாட்டிற்கு தான் இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். இந்திய அணியின் நட்சத்திர வீரர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
கிரிக்கெட் விளையாட்டில் டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து விட்டது. டி20 போட்டிகள் அறிமுகமான பின் டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்களின் ஆதரவு குறைந்து வருகிறது. இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடர் தான் உலகில் மிக பிரபலமான கிரிக்கெட் லீக் போட்டியாகும்.
இந்நிலையில் உலகம் முழுவதும் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது என்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஐசிசியில் இடம்பிடித்துள்ள 12 முக்கிய கிரிக்கெட் விளையாடும் நாடுகள், சீனா மற்றும் அமெரிக்காவில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு 100 கோடிக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில் குறிப்பாக 90 சதவிதம் பேர் இந்தியாவில் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு பெண் ரசிகர்களும் அதிகளவில் உள்ளனர். இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் அறிமுகப்படுத்தப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாகும். #IndiaCricketFans #ICC #BCCI #IPL
Next Story






