search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto Driver"

    • ஆட்டோ ஓட்டுநர் அரிவாளை காட்டும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
    • பேருந்து ஓட்டுநர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆட்டோ ஓட்டுநர் சம்சுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கேரள மாநிலம் கொண்டோட்டி பகுதியில் சாலையில் முந்திச் செல்வதற்காக தொடர்ந்து ஹாரன் அடித்த பேருந்து ஓட்டுநருக்கு, அரிவாளை எடுத்துக் காட்டிய ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    கோழிக்கோட்டில் இருந்து மஞ்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து கொண்டோட்டி பகுதியை நெருங்கியது. அப்போது ஒரு ஆட்டோ நீண்ட நேரமாக வழிவிடாமல் சென்றதால் பேருந்து ஓட்டுநர் பலமுறை ஹாரன் அடித்துள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் அரிவாளை எடுத்து வெளியே நீட்டியுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் அரிவாளை காட்டும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆட்டோ ஓட்டுநர் சம்சுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்ட சம்சுதீன், அரிவாளை கூர்படுத்துவதற்காக கொண்டு சென்றுள்ளார். அப்போது பேருந்து ஓட்டுநர் தொடர்ந்து பலமுறை ஹாரன் அடித்ததால் கோவமான சம்சுதீன் அரிவாளை எடுத்து காட்டியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போக்குவரத்து நெரிசலால், வழிவிட இயலவில்லை என ஆட்டோ ஓட்டுநர் விளக்கம்.
    • தாக்குதல் நடத்திய இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு.

    டெல்லியில் வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநரை சாலையில் வைத்து இளம்பெண் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புல்லட்டில் சென்ற இளம்பெண்ணிற்கு ஓட்டுநர் வழிவிடவில்லை என்ற ஆத்திரத்தில் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண் திடீரென ஓட்டுநரைத் தாக்க ஆரம்பித்தார். இளம்பெண் தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.

    வீடியோ வைரலானதை அடுத்து, தாக்குதல் நடத்திய இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    போக்குவரத்து நெரிசலால், வழிவிட இயலவில்லை என இந்த சம்பவத்திற்கு அடுத்து ஆட்டோ ஓட்டுநர் விளக்கம் அளித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமேதா, அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவை வீடியோ எடுத்து பதிவிட அது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளுடன் வைரலாகியது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பரவசமடைந்தனர்.

    சிலர் தங்களது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடுவதை காண முடியும். அதே நேரம் தனது மகளின் பிறந்தநாளையொட்டி ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவை பலூன்களால் அலங்கரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பெங்களூருவை சேர்ந்த சுமேதா உப்பல் என்ற பயனர் எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோ முழுவதும் இளஞ்சிவப்பு நிற பலூனால் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள் உள்ளது. இதுதொடர்பாக அவர் ஆட்டோ டிரைவரிடம் கேட்ட போது, இன்று எனது மகளின் பிறந்தநாள் என்பதால் ஆட்டோவை அலங்கரித்துள்ளேன் என கூறி உள்ளார். இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சுமேதா, அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவை வீடியோ எடுத்து பதிவிட அது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளுடன் வைரலாகியது.

    வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பரவசமடைந்தனர். இதுபோன்ற செயல்கள் கொண்டாட்டங்களை விட பெரியது என பயனர்கள் பதிவிட்டனர்.


    • தற்போது எக்ஸ் தளத்தில் நயா என்ற பயனர் பகிர்ந்த பதிவு வைரலாகி வருகிறது.
    • டிரைவரின் அணுகுமுறையை பயனர்கள் பலரும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ஆட்டோக்களில் இடம்பெறும் வித்தியாசமான வாசகங்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில், ஜிபே பயன்பாடு இல்லை. மேலும் ஏ.டி.எம். மையம் முன்பு ஆட்டோ நிற்காது என குறிப்பிட்டிருந்த வாசகம் இணையத்தில் பரவி இருந்தது.

    இந்நிலையில் தற்போது எக்ஸ் தளத்தில் நயா என்ற பயனர் பகிர்ந்த பதிவு வைரலாகி வருகிறது. அதில், ஆட்டோ ரிக்ஷாவில் வைக்கப்பட்டிருந்த நோட்டீசின் புகைப்படம் இருந்தது. அதில், டிரைவரை 'பய்யா' என்று அழைப்பதை தவிர்க்குமாறும், அதற்கு பதிலாக பாய், தாதா, பாஸ் அல்லது சகோதரர் என மாற்று மரியாதைக்குரிய சொற்களை பயன்படுத்துமாறும் பயணிகளை கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டிருந்தது.

    டிரைவரின் இந்த அணுகுமுறையை பயனர்கள் பலரும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


    • போலீசார் பணத்தின் உரிமையாளர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • பணத்தை நேர்மையாக போலீஸ் நிலையத்திற்கு வந்து ஒப்படைத்த ஆனந்தனை பொதுமக்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன்(40). ஆட்டோ ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு மாணவர்களின் பெற்றோர்களை ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார்.

    அப்போது ஆட்டோவில் வந்த பயணி ஒருவர் அவரது ஏ.டி.எம்., கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க ஆனந்தன் சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம்., எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் பணம் கிடந்தது. இதைப் பார்த்த அவர் உடனே வெளியே வந்து அங்கிருந்த பொது மக்களிடம் விசாரித்துள்ளார். அங்கிருந்த யாரும் சரியான தகவல் தெரிவிக்கவில்லை.

    பணத்தின் உரிமையாளர் யார் என்றும் தெரியவில்லை. இதனால் ஆனந்தன் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு சங்கராபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரனிடம் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் பணத்தின் உரிமையாளர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பணத்தை நேர்மையாக போலீஸ் நிலையத்திற்கு வந்து ஒப்படைத்த ஆனந்தனை போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

    • பொன்னம்மாப்பேட்டை வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (44) ஆட்டோ டிரைவர்.
    • கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி சங்கீதா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

    சேலம்:

    சேலம் பொன்னம்மாப்பேட்டை வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (44) ஆட்டோ டிரைவர். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், கல்லூரி 2-ம் ஆண்டு படிக்கும் மகளும், பிளஸ் 2 படிக்கும் மற்றொரு மகளும் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி சங்கீதா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சுரேஷ் இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த சுரேஷ் நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை இதை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டில் சுரேஷ் கைப்பட எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு தானமாக கொடுத்து விடுங்கள் என எழுதப்பட்டு இருந்தது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாய், தந்தை இருவரும் இறந்த நிலையில் 2 மகள்களும் பரிதவிப்பில் உள்ளனர்.

    • பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணம் மற்றும் 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து ஹவாலா பணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் ஆட்டோ டிரைவரான இவர் மாதவரம் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் இன்று காலை 4.30 மணிக்கு 3 வாலிபர்கள் செங்குன்றம் எட்டயபாளையத்திற்கு செல்வதற்காக இவரது ஆட்டோவில் பயணம் செய்தனர்.

    இதையடுத்து அவர்கள் மீது ஆட்டோ டிரைவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. வால்டாக்ஸ் ரோட்டில் ஆட்டோவை நிறுத்திவிட்டு எதிரே உள்ள யானைக்கவுனி போலீஸ் நிலையத்துக்கு சென்று எனது ஆட்டோவில் சந்தேகம் படும்படி 3 பேர் உள்ளனர் என்று தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்களது பெயர் யாசின், தாவூத், பைசூலா என்பது தெரியவந்தது. 3 பேரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை மாதவரம் பஸ் நிலையத்துக்கு காரில் வந்துள்ளனர்.

    அவர்கள் கொண்டு வந்த பைகளை சோதனையிட்ட போது ரூ. 1 கோடி பணம் இருந்தது. இது பற்றி விசாரித்த போது இவர்கள் முதலாளியான முகமத் என்பவர் எட்டயப்பாளையத்தில் உள்ள தத்தா என்பவரி டம் கொடுக்குமாறு கூறியதாக தெரிவித்தார்.

    இந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணம் மற்றும் 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ஹவாலா பணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆட்டோவில் இருந்து கீழே சட்டையை பிடித்து வெளியே இழுத்து போட்டு செருப்பால் சரமாரியாக தாக்கினார்.
    • அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

    ராயபுரம்:

    புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 36 வயது திருமணமான இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக வண்ணாரப்பேட்டையில் இருந்து ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தார்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் இளம்பெண் டிரைவர் இருக்கை அருகே அமர்ந்து இருந்தார். அப்போது ஷேர் ஆட்டோ டிரைவர் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனை இளம்பெண் கண்டித்தும் ஆட்டோ டிரைவர் தனது சில்மிஷத்தை தொடர்ந்தார்.

    இதனால் பொறுமை இழந்த இளம்பெண் புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி கோயில் பஸ் நிறுத்தத்தில் இறங்கியதும் அந்த டிரைவரை ஷேர் ஆட்டோவில் இருந்து கீழே சட்டையை பிடித்து வெளியே இழுத்து போட்டு செருப்பால் சரமாரியாக தாக்கினார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த பெண் டிரைவரை கடுமையாக எச்சரித்து அங்கிருந்து சென்றார். சில்மிஷம் செய்த ஆட்டோ டிரைவரை இளம்பெண் இழுத்துபோட்டு செருப்பால் தாக்கும் காட்சியை ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

    • பெரியார் பஸ் நிலையம் அருகே ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வாளை காட்டி கண்ணனை மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்துச்சென்றனர்.

    மதுரை

    மதுரை திடீர்நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது45), ஆட்டோ டிரைவர். பெரியார் பஸ் நிலையம் அருகே இவர் நின்றிருந்தபோது சிறுவன் உள்பட 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் வாளை காட்டி கண்ணனை மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்துச்சென்றனர். இதுகுறித்து திடீர் நகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி பணத்தை பறித்துச்சென்ற திடீர் நகர் சதீஷ்குமார் (21), குடிசை மாற்று வாரிய குடியிருப்புசேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (21) ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர் பத்ரு ஹரி (20), 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • டிரைவரிடம் செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடிய 2 பெண்களையும் தேடி வருகிறார்கள்.

    சென்னை:

    நகைச்சுவை நடிகர் வடிவேலு திரைப்படம் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் முன்பு போய் தனது ஆட்களை விழச்செய்து மோட்டார் சைக்கிளை ஏற்றிவிட்டதாக கூறி பணம் பறிப்பார். இந்த காட்சி வயிறு குலுங்க சிரிக்க வைப்பதாக அமைந்து இருக்கும்.

    இந்த நிலையில் அதே பாணியில் சென்னை புரசை வாக்கத்தில் 2 பெண்கள் ஆட்டோ மீது போய் விழுந்து டிரைவரிடம் செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர் பால செல்வ விநாயகம். இவர் புரசைவாக்கம் சுந்தரம் வேன் சந்திப்பு மேனாட் தெருவில் தனது ஆட் டோவை ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். அப் போது அந்த வழியாக சென்ற 2 பெண்கள் திடீரென ஆட்டோவின் முன்னால் பாய்ந்தனர்.

    பின்னர் அவர்கள் தங்கள் மீது ஆட்டோவை ஏற்றிவிட்டதாக கூறி உறவினர்களை வரவழைத்து உள்ளனர். ஆட்டோ டிரைவர் பால செல்வ விநாயகத்தை தாக்கி ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு 2 பெண்களும் தப்பிஓடி தலைமறைவானார்கள்.

    இதுபற்றி பால செல்வ விநாயகம் வேப்பேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடிய 2 பெண்களையும் தேடி வருகிறார்கள்.

    • பொன்னையா சொந்தமாக ஆட்டோ வைத்து ஸ்பிக் நகர் பஸ் நிறுத்த பகுதியில் இருந்து ஆட்டோ ஓட்டி வருகிறார்.
    • தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையை கடந்து நடந்து செல்லும் போது அந்த வழியாக அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் அவர் மீது பயங்கரமாக மோதிவிபத்து ஏற்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே குமாரசாமிநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பொன்னையா (வயது 60)சொந்தமாக ஆட்டோ வைத்து ஸ்பிக் நகர் பஸ் நிறுத்த பகுதியில் இருந்து ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று இரவு 10 மணி அளவில் ஸ்பிக் நகர் பஜார் வழியாக தூத்துக்குடி திருச்செந்தூர் பிரதான சாலையை கடந்து நடந்து செல்லும் போது அந்த வழியாக அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் அவர் மீது பயங்கரமாக மோதிவிபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோ டிரைவர் பொன்னையா தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன ளிக்காமல் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்,

    இது குறித்து முத்தையா புரம் இன்ஸ்பெக்டர் (பொ றுப்பு)மூக்கண் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இந்திய கலாச்சாரம் மற்றும் இசை மீது ஜெர்மனியின் காஸ்மியின் ஆர்வத்தை நான் முழுமனதுடன் பாராட்டுகிறேன்.
    • நீங்களும் உங்கள் நேரத்தை ஒதுக்கி, தூய்மை தொடர்பான இந்த பிரசாரத்தில் உதவுங்கள்.

    சென்னை:

    பிரதமர் மோடி இன்று மான் கி பாத் 105-வது நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது சென்னை ஆட்டோ டிரைவர் ராஜேந்திரபிரசாத் புறாக்களை பராமரிக்க, பாதுகாக்க ஆற்றி வரும் பணிகளை பாராட்டினார். இது தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்திய கலாசாரமும், இந்திய இசையும் தற்போது உலகமயமாகிவிட்டது.

    அவர்கள் மீது உலகம் முழுவதும் உள்ள மக்களின் பற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 21 வயதான காஸ்மி இன்ஸ்டாகிராமில் இன்று மிகவும் பிரபலமானவர். ஜெர்மனியை சேர்ந்த காஸ்மி இதுவரை இந்தியா வந்ததில்லை.

    ஆனால் இந்தியாவை பார்த்திராத இந்திய இசையின் ரசிகை, இந்திய இசையில் அவருக்கு இருக்கும் ஆர்வம் மிகவும் ஊக்கமளிக்கிறது. இந்திய கலாச்சாரம் மற்றும் இசை மீது ஜெர்மனியின் காஸ்மியின் ஆர்வத்தை நான் முழு மனதுடன் பாராட்டுகிறேன். அவரது முயற்சிகள் ஒவ்வொரு இந்தியரையும் மூழ்கடிக்கப் போகிறது.

    ஜீவேஷு கருணா சாபி, மைத்ரி தேஷு விதியாதம் என்றால், உயிரினங்கள் மீது கருணை காட்டுங்கள், அவர்களை உங்கள் நண்பர்களாக்குங்கள். எல்லா வழிகளிலும் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில், நாட்டில் சிங்கம், புலிகள், சிறுத்தைகள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    உயிர்களிடம் கருணை காட்டுங்கள், அவற்றை உங்கள் நண்பர்களாக ஆக்குங்கள். தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் வாகனங்களில் பெரும்பாலானவை விலங்குகள் மற்றும் உயிரினங்கள். ராஜஸ்தானில் சுக்தேவ்பாம்பு களை பராமரிப்பதிலும், சென்னையில் ஆட்டோ டிரைவர் ராஜேந்திரபிரசாத் புறாக்களை பாதுகாப்பதிலும் சிறந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்களது பணிகளை பாராட்டுகிறேன். ஐதராபாத்தை சேர்ந்த 11 வயது அக்சரா குழந்தைகளுக்கான 7 நூலகங்களை நிர்வகிக்கிறார். குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர் பங்களிக்கும் விதம் ஊக்கமளிக்கிறது.

    இன்று 'மான் கி பாத்' மூலம் அனைத்து நாட்டு மக்களுக்கும் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். அக்டோபர் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தூய்மை குறித்த பெரிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நீங்களும் உங்கள் நேரத்தை ஒதுக்கி, தூய்மை தொடர்பான இந்த பிரசாரத்தில் உதவுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×