search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Asin"

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் தொடர்பான சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது.
  • அசினை ராகுல் ஷர்மாவுக்கு ஹவுஸ்புல் 2 படப்பிடிப்பு தளத்தில் வைத்து அக்ஷய் குமார் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

  பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் தொடர்பான சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று தற்போது தெரியவந்துள்ளது. கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபல நடிகை அசினுடன் அக்ஷய் குமார் நடித்த கில்லாடி 786 திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் படமாக அமைந்தது.

  பின் ஹவுஸ்புல் 2 படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இதற்கிடையே அசின், அக்ஷய் குமாரின் நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான ராகுல் சர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு மணந்து கொண்டார். அசினை ராகுல் சர்மாவுக்கு ஹவுஸ்புல் 2 படப்பிடிப்பு தளத்தில் வைத்து அக்ஷய் குமார் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். ராகுல்- அசின் தம்பதிக்குக் கடந்த 2017 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. பெண்ணுக்கு ஆரின் என தம்பதி பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

   

  இந்நிலையில் சமீபத்தில், பேட்டி ஒன்றில் அசினின் கணவர் ராகுல் சர்மா பேசுகையில், அசினுக்கு குழந்தை பிறக்க இருக்கும் போது, அக்ஷய் போன் செய்து குழந்தை பிறந்த உடனே தெரிவிக்க வேண்டும் என்றார். நாள் முழுவதும் அக்ஷய் பரபரப்பாக இருந்தார்.மேலும் குழந்தை பிறந்த செய்தி கிடைத்தவுடன் கிளம்பி வருவதற்குத் தனது தனி விமானத்தைத் தயார் நிலையில் வைத்திருந்தார் என்றும் தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்தவுடன் தனது குடும்பத்தினர் வருவதற்கு முன்னரே முதல் ஆளாக வந்தவர் அக்ஷய் தான் என ராகுல் சர்மா நெகிழ்ச்சியுடன் கூறினார்.

   

  தனது வாழ்நாள் முழுவதும் மிகுந்த நட்புடன் பக்கபலமாக அக்ஷய் இருந்து வந்துள்ளார் என்றும் ராகுல் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ராகுல்- அசின் தம்பதியின் மகள் ஆரினுக்கு அக்ஷய் குமார் காட்பாதராக இருக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அசின்.
  • அசின், கடந்த 2016-ம் ஆண்டு ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டார்.

  ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அசின். அதன்பின்னர் விஜய்யுடன் சிவகாசி, சூர்யாவுடன் கஜினி, விக்ரமுடன் மஜா, உள்ளம் கேட்குமே என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தார். மேலும் வரலாறு, போக்கிரி, வேல், காவலன், தசாவதாரம் உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார்.  அசின், ஹவுஸ்புல்-2 படத்தில் நடித்தபோது அக்ஷய்குமாரின் நண்பரும், மைக்ரோ மேக்ஸ் நிறுவனருமான ராகுல் சர்மாவுடன் காதல் மலர்ந்தது. புகழின் உச்சத்தில் இருந்த அசின் கடந்த 2016-ம் ஆண்டு ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த கையோடு கணவருடன் செட்டில் ஆன அசின், சினிமாவை விட்டும் விலகினார்.

  இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு அசின் - ராகுல் சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அசின் - ராகுல் சர்மா தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  ராகுல் சர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனை அறிந்த அசின் அவரை எச்சரித்தும், அவர் கேட்காததால் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து உள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து இருவரும் எந்த தகவலும் வெளியிடவில்லை அசின், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியிருந்தார். இதை வைத்தே அவர் கனவருடன் விவாகரத்து என பேசப்பட்டது.  இந்த செய்தி நடிகை அசின் பார்வைக்கு சென்ற நிலையில், தற்போது அசின், சமூக வலைத்தளத்தின் வாயிலாக இது முற்றிலும் வதந்தி என பதிவிடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில், நாங்களே ஜாலியாக டூர் செய்துக் கொண்டு பிரேக்பாஸ்ட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இப்படியொரு கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத ஒரு செய்தி வருவதை பார்த்து வேடிக்கையாகத்தான் இருக்கு என்றும் உங்களுக்கு வேற வேலை இல்லையா? இன்னும் பெட்டரா ஏதாவது டிரை பண்ணுங்க என நடிகை அசின் பதிவிட்டு விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

  நடிகர் விஜய்யின் பிறந்த நாள் வருவதை முன்னிட்டு, திரையரங்குகளில் போக்கிரி படத்தை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Vijay #ThalapathyVijay
  மெர்சல் படத்தின் வெற்றியை விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் ராதாரவி, பழ கருப்பையா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்து வருகிறார்.

  இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஜூன் 22ம் தேதி விஜய் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இதற்காக இவரது ரசிகர்கள் தற்போதே தயாராகி வருகிறார்கள். விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘போக்கிரி’ படத்தை மீண்டும் திரையரங்கில் வெளியிட இருக்கிறார்கள்.  இப்படத்தை மீண்டும் திரையில் பார்க்க விஜய்யின் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ‘போக்கிரி’ படத்தை பிரபுதேவா இயக்கி இருந்தார். இதில் இடம் பெற்ற போக்கிரி பொங்கல் பாடல் ரசிகர்களை ஆட வைத்தது குறிப்பிடத்தக்கது.
  ×