என் மலர்

  சினிமா

  விஜய் பிறந்த நாளில் திரையரங்குகளில் போக்கிரி பொங்கல்
  X

  விஜய் பிறந்த நாளில் திரையரங்குகளில் போக்கிரி பொங்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் விஜய்யின் பிறந்த நாள் வருவதை முன்னிட்டு, திரையரங்குகளில் போக்கிரி படத்தை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Vijay #ThalapathyVijay
  மெர்சல் படத்தின் வெற்றியை விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் ராதாரவி, பழ கருப்பையா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்து வருகிறார்.

  இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஜூன் 22ம் தேதி விஜய் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இதற்காக இவரது ரசிகர்கள் தற்போதே தயாராகி வருகிறார்கள். விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘போக்கிரி’ படத்தை மீண்டும் திரையரங்கில் வெளியிட இருக்கிறார்கள்.  இப்படத்தை மீண்டும் திரையில் பார்க்க விஜய்யின் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ‘போக்கிரி’ படத்தை பிரபுதேவா இயக்கி இருந்தார். இதில் இடம் பெற்ற போக்கிரி பொங்கல் பாடல் ரசிகர்களை ஆட வைத்தது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×