கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு? விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அசின்

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அசின்.அசின், கடந்த 2016-ம் ஆண்டு ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டார்.
கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு? விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அசின்
Published on

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அசின். அதன்பின்னர் விஜய்யுடன் சிவகாசி, சூர்யாவுடன் கஜினி, விக்ரமுடன் மஜா, உள்ளம் கேட்குமே என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தார். மேலும் வரலாறு, போக்கிரி, வேல், காவலன், தசாவதாரம் உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார்.

அசின், ஹவுஸ்புல்-2 படத்தில் நடித்தபோது அக்ஷய்குமாரின் நண்பரும், மைக்ரோ மேக்ஸ் நிறுவனருமான ராகுல் சர்மாவுடன் காதல் மலர்ந்தது. புகழின் உச்சத்தில் இருந்த அசின் கடந்த 2016-ம் ஆண்டு ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த கையோடு கணவருடன் செட்டில் ஆன அசின், சினிமாவை விட்டும் விலகினார்.

இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு அசின் - ராகுல் சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அசின் - ராகுல் சர்மா தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ராகுல் சர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனை அறிந்த அசின் அவரை எச்சரித்தும், அவர் கேட்காததால் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து உள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து இருவரும் எந்த தகவலும் வெளியிடவில்லை அசின், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியிருந்தார். இதை வைத்தே அவர் கனவருடன் விவாகரத்து என பேசப்பட்டது.

இந்த செய்தி நடிகை அசின் பார்வைக்கு சென்ற நிலையில், தற்போது அசின், சமூக வலைத்தளத்தின் வாயிலாக இது முற்றிலும் வதந்தி என பதிவிடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில், நாங்களே ஜாலியாக டூர் செய்துக் கொண்டு பிரேக்பாஸ்ட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இப்படியொரு கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத ஒரு செய்தி வருவதை பார்த்து வேடிக்கையாகத்தான் இருக்கு என்றும் உங்களுக்கு வேற வேலை இல்லையா? இன்னும் பெட்டரா ஏதாவது டிரை பண்ணுங்க என நடிகை அசின் பதிவிட்டு விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com