search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அசினுக்கு குழந்தை பிறக்கும்போது அக்ஷய் குமார் செய்த செயல்.. நெகிழ்ச்சி சம்பவம்!
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அசினுக்கு குழந்தை பிறக்கும்போது அக்ஷய் குமார் செய்த செயல்.. நெகிழ்ச்சி சம்பவம்!

    • பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் தொடர்பான சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது.
    • அசினை ராகுல் ஷர்மாவுக்கு ஹவுஸ்புல் 2 படப்பிடிப்பு தளத்தில் வைத்து அக்ஷய் குமார் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

    பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் தொடர்பான சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று தற்போது தெரியவந்துள்ளது. கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபல நடிகை அசினுடன் அக்ஷய் குமார் நடித்த கில்லாடி 786 திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் படமாக அமைந்தது.

    பின் ஹவுஸ்புல் 2 படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இதற்கிடையே அசின், அக்ஷய் குமாரின் நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான ராகுல் சர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு மணந்து கொண்டார். அசினை ராகுல் சர்மாவுக்கு ஹவுஸ்புல் 2 படப்பிடிப்பு தளத்தில் வைத்து அக்ஷய் குமார் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். ராகுல்- அசின் தம்பதிக்குக் கடந்த 2017 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. பெண்ணுக்கு ஆரின் என தம்பதி பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் சமீபத்தில், பேட்டி ஒன்றில் அசினின் கணவர் ராகுல் சர்மா பேசுகையில், அசினுக்கு குழந்தை பிறக்க இருக்கும் போது, அக்ஷய் போன் செய்து குழந்தை பிறந்த உடனே தெரிவிக்க வேண்டும் என்றார். நாள் முழுவதும் அக்ஷய் பரபரப்பாக இருந்தார்.மேலும் குழந்தை பிறந்த செய்தி கிடைத்தவுடன் கிளம்பி வருவதற்குத் தனது தனி விமானத்தைத் தயார் நிலையில் வைத்திருந்தார் என்றும் தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்தவுடன் தனது குடும்பத்தினர் வருவதற்கு முன்னரே முதல் ஆளாக வந்தவர் அக்ஷய் தான் என ராகுல் சர்மா நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    தனது வாழ்நாள் முழுவதும் மிகுந்த நட்புடன் பக்கபலமாக அக்ஷய் இருந்து வந்துள்ளார் என்றும் ராகுல் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ராகுல்- அசின் தம்பதியின் மகள் ஆரினுக்கு அக்ஷய் குமார் காட்பாதராக இருக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×