search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "30 பேர் பலி"

    வேலூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர். பெயர் சேர்த்தல், நீக்கம் செய்து கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 1-ந் தேதியை அடிப்படையாக கொண்டு தீவிர சிறப்பு சுருக்க திருத்தம், வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர். மொத்த ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 86 ஆயிரத்து 758 பேரும், பெண் வாக்காளர்கள் 15 லட்சத்து 37 ஆயிரத்து 103 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 118 பேரும் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

    வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக 1,681 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும். பொதுமக்கள் அனைவரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்று சரிபார்க்கலாம்.

    பெயர் சேர்க்க படிவம்-6, பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, திருத்தம் மேற்கொள்ள படிவம்-8, சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம்-8ஏ ஆகிய விண்ணப்பங்களை பெற்று திருத்தங்களை சரி செய்து கொள்ளலாம்.

    இந்த விண்ணப்பங்களை பெறும் வாக்காளர்கள் சமீபத்தில் எடுத்த வண்ண புகைப்படத்தை மட்டுமே ஒட்ட வேண்டும். கருப்பு- வெள்ளை புகைப்படம் ஏற்று கொள்ளப்படாது எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வருகிற 9-ந் தேதி, 23-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 7-ந் தேதி, 14-ந் தேதி ஆகிய நாட்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து கொள்ளலாம்.

    அதேபோல் வேலூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தி வாக்காளர் பட்டியலை வாசித்து காண்பிக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, அனைத்து கிராமங்களிலும் வருகிற 8-ந் தேதி, 22-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 6-ந் தேதி, 13-ந் தேதி ஆகிய நாளில் சுருக்க திருத்தம்-2019 வரைவு வாக்காளர் பட்டியலை பார்வைக்கு வைத்தல் என்ற பொருளுடன் கிராம சபை கூட்டம் நடத்த உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் www.nvsp.in என்ற இணையதளத்தின் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம்.

    கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் 30 லட்சத்து 51 ஆயிரத்து 171 பேர் இடம் பிடித்திருந்தனர். அதையடுத்து நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 10 ஆயிரத்து 883 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். 38 ஆயிரத்து 75 பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் தேர்தல் தாசில்தார் பாலாஜி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 
    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வான் தாக்குதலில் அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. #SyriaBombing #SyriaRebel
    பெய்ரூட்:

    சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படையும் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவின் வடமேற்கில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அரசுப் படைகள் சமீபகாலமாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன.

    இட்லிப் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் கடந்த வியாழக்கிழமை ராக்கெட் வெடிகுண்டுகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்த நாளான நேற்றும் சற்று கிழக்கை நோக்கி முன்னேறி சென்று வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.



    அலெப்போவிற்கு அருகில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த  தாக்குதல்களில் பொதுமக்கள் சுமார் 30 பேர் பலியானதாக சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.

    கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இட்லிப் மாகாணம்தான் தனது அடுத்த இலக்கு என அதிபர் பஷார் அல் ஆசாத் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த உக்கிரமான தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. #SyriaBombing #SyriaRebel

    தமிழகத்தில் 30 மாவட்டங்கள் 100 சதவீத சுகாதார நிலையை எட்டியுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்க விழா, தூய்மை கணக்கெடுப்பு இலச்சினை அறிமுக விழா, தூய்மை வாகனம் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி இயக்குனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு தூய்மை ரதத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தை முழு சுகாதாரம் அடைந்த மாநிலமாகவும், திறந்த வெளியில் மலம் கழிக்கும் சூழ்நிலை இல்லாத மாநிலமாகவும் உருவாக்கும் வகையில் கடந்த 2013-14-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ. 4639 கோடி செலவில் 49.63 லட்சம் தனி நபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 30 மாவட்டங்கள் 100 சதவீத சுகாதார நிலையை எட்டி உள்ளது.12,040 கிராம ஊராட்சிகள் திறந்த வெளியில் மலம் கழித்தல் அல்லாத ஊராட்சிகள் என கிராம சபை கூட்டங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மீதமுள்ள 484 கிராம ஊராட்சிகளும் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

    2014-15-ம் ஆண்டு ரூ. 610 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டம், 12,524 ஊராட்சிகளில் செயல்படுத்தபட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் 66,025 தூய்மை காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்காக நடப்பு ஆண்டில் ரூ. 206 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    மேலும் கிராமங்களில் குப்பையை எளிதாக அப்புறப்படுத்தும் வகையில் 93000 குப்பை தொட்டிகளும், 43000 மிதி வண்டிகளும் வழங்கப்பட்டுள்ளது.

    மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை தர வரிசைப்படுத்த மத்திய அரசு தூய்மை கணக்கெடுப்பு-2018 திட்டம் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தூய்மை ரதம் அனுப்பப்பட்டு கணக்கெடுத்து தரவரிசைப் படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதன் மூலம் பொது இடங்களான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார வளாகங்கள், கிராம சந்தை, வழிபாட்டு தலங்கள் ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர்கள் ஹரிஹரன் (கோவை), பழனிசாமி (திருப்பூர்), இன்னசென்ட் திவ்யா (நீலகிரி),பிரபாகரன் (ஈரோடு), நாகராஜன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம், கனகராஜ், ஓ.கே. சின்னராஜ், ராமு, மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் இயக்குனர்கள் லட்சுமிபதி, ராதா, ராஜஸ்ரீ, விஜய முத்து மீனாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், மற்றும் அரசு துறை அலுவலர்க்ள, மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த தூய்மை பாரத இயக்க ஊக்குவிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
    சவுதி அரேபியாவில் 70 வயது முதியவர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்காமல் அவதிப்பட்டு வருகிறார்.

    ரியாத், ஜூலை, 20-

    சவுதி அரேபியாவில் 70 வயது முதியவர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்காமல் அவதிப்பட்டு வருகிறார். தொடக்கத்தில் அவர் சவுதி அரேபியா ராணுவத்தில் பணிபுரிந்தார்.

    அப்போது தொடர்ந்து 20 நாட்கள் தூங்காமல் கண்விழித்து இருந்தார். பணி முடிந்ததும் ஆஸ்பத்திரிக்கு சென்று அதற்கான சிகிச்சை பெற்றார். இருந்தும் அவருக்கு தூக்கம் வரவில்லை. எனவே 4 நாடுகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் குழு ஒன்று பரிசோதித்தது.

    இருந்தும் அவரால் 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்க முடியவில்லை. தூங்குவதற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தாலும் அவருக்கு தூக்கம் வரவில்லை.

    இதனால் ஆச்சரியம் அடைந்த டாக்டர்கள் குழு அதற்கான காரணத்தை ஆய்வு செய்தனர். சரியான காரணம் தெரியாவிட்டாலும் அவரின் மனஅழுத்தமே இதற்கு காரணமாக இருக் கலாம் என தெரிவித்துள் ளனர்.

    இதற்கிடையே அல் பகா பகுதி நிர்வாகி இவரது நிலை குறித்து அறிந்து அவரிடம் விசாரித்தார். மேலும் அவருக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்தார். மேலும் அவரது எஞ்சிய காலம் முழுவதும் அவரது அனைத்து தேவைகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.

    30 லட்சம் பாம்புகளுக்கு இடையில் சுமார் 600 மக்கள் மட்டுமே வாழும் கிராமம் ஒன்று சீனாவில் உள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்வோமா?
    பீஜிங்:

    சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள செஜியாங் மாகாணத்தின் கடைக்கோடியில் இருக்கும் குக்கிராமம் சிசிகியாவ். சுமார் 600 மக்கள் மட்டுமே வாழும் இந்த கிராமத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது உடல்களின் பல பகுதிகளில் பாம்புக்கடி அடையாளங்களுடன்தான் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஏன் இந்த நிலை?

    சீனர்களின் அசைவ உணவில் பாம்புக்கறிக்கு முதலிடம் உண்டு. மிகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட இந்த கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. நிலப்பரப்பில் மட்டுமின்றி, இங்குள்ள நீர்நிலைகளிலும் மீன்களைவிட பாம்புகளின் ஆதிக்கம்தான்.

    பசிக்கு உணவாக பயன்படுத்தப்பட்ட பாம்புகள் இங்குள்ள மக்களுக்கு செல்வத்தை அள்ளித்தரும் அமுதசுரபியாக பிற்காலத்தில் மாறின. இதனால், பிறபகுதிகளில் உள்ள மக்கள் இந்த கிராமத்தை ‘பாம்பு கிராமம்’ என்றே பிற்காலத்தில் அழைக்க தொடங்கி விட்டனர்.

    இறைச்சியாக மட்டுமின்றி, பல்வேறு கொடிய நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் பாம்புகள் பயன்படுவதால் பாம்புப் பண்ணைகளும், பாம்பு வர்த்தகமும் இங்கு நாளடைவில் பல்கிப் பெருகியது.

    குறிப்பாக, கொடிய நச்சுத்தன்மை உள்ள பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷம், அதிகமான விலைக்கு வெளிநாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுவதால், இங்கு வீட்டுக்குவீடு பெரியதும், சிறியதுமாக பாம்பு வளர்ப்பு தொழில் குடிசைத்தொழிலாகவே மாறிப்போனது.


    இந்த தொழிலுக்கு ஆரம்பத்தில் பிள்ளையார் சுழி போட்டவர் யாங் ஹாங்சாங். இவரை உள்ளூர் மக்கள் “பாம்புகளின் ராஜா” (snake king) என்று அன்புடன் அழைத்து மகிழ்கின்றனர்.

    1970-ம் ஆண்டுவாக்கில் முதன்முதலாக பாம்பு பண்ணையை ஏற்படுத்தி, பாம்பு முட்டைகளை சேகரித்து, அடைகாத்து, குஞ்சுகளை பொறிக்கவைக்க யாங் ஹாங்சாங் முயன்றபோது அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. வெறும் பத்து சதவீதம் முட்டைகள் மட்டுமே பொறித்தன.

    ஆனால், மனம்  தளராமல் இவர் எடுத்த பெருமுயற்சிகளின் பலனாக அடுத்த ஆண்டிலேயே சுமார் 30 ஆயிரம் முட்டைகள் குஞ்சு பொறித்திருந்ததால் அந்நாட்களில் மிகப்பெரிய பாம்பு பண்ணையின் அதிபராக மாறினார் யாங்.

    1983-ம் ஆண்டுவாக்கில் சீனாவில் வாழ்ந்த மக்களின் சராசரி ஆண்டு வருமானம் வெறும் 10 ஆயிரம் யுவான்களாக மட்டுமே இருந்தபோது, யாங் ஹாங்சாங்-கின் ஆண்டு வருமானம் சுமார் ஒன்றரை லட்சம் யுவான்களாக இருந்தது. இதை வைத்தே இவரது வளர்ச்சியையும், பாம்பு பண்ணை தொழிலில் கிடைத்த லாபத்தையும் யூகித்து கொள்ள முடியும்.

    மருத்துவ தேவைகளும் பெருகப்பெருக சிவப்பு கட்டுவிரியன், கருநாகம் உள்ளிட்ட பாம்பு விஷத்துக்கான மருந்து நிறுவனங்களின் தேவைகளும் பெருகின. விளைவு? ஒரு கிராம் பாம்பு விஷம் சுமார் 5 ஆயிரம் யுவான்கள் வரை விலைபோவதால் அன்று வறட்சியால் நொடிந்துக் கிடந்த சிசிகியாவ் கிராமம் இன்று செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கிறது.

    ஆண், பெண், குழந்தைகள் என ஒட்டுமொத்த கிராம மக்களும் இதே தொழிலில் ஊறிப்போய் கிடக்கின்றனர். கூடவே உடல் முழுவதும் பாம்புகளின் பாசத்தீண்டல்களின் அடையாளமாக கடிபட்ட காயங்களும் அனைவரிடமும் காணப்படுகிறது.

    காலப்போக்கில் மீன் பண்ணை, பட்டு நெசவு என்று வேறு தொழில் தேடி சில இளையதலைமுறையினர் வெளியூர்களுக்கு சென்று விட்டாலும் ஆண்டுக்கு சுமார் 2 டன் எடைக்கு பாம்பு விற்றால் போதும் 4 லட்சம் யுவான்கள் வரை பணம் சம்பாதிக்க முடியும் என்பதால் இங்குள்ள சுமார் 600 மக்கள் சுமார் 30 லட்சம் பாம்புகளுடன் இரவும், பகலும் வாழ்ந்து வருகின்றனர்.


    இங்குள்ள பண்ணைகளில் சேகரிக்கப்படும் கொடிய பாம்புகளின் விஷம் உறைய வைக்கப்பட்டு, பொடியாக்கி தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், பாம்புகளின் கல்லீரல் மற்றும் பித்தப்பை போன்றவை சில கொடிய நோய்களை தீர்க்கும் அருமருந்தாக பயன்படுகிறது. பாம்புத்தோலுக்கும் சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைக்கின்றது.

    பாம்புகளை போட்டு ஊற வைத்த ஒயின் மற்றும் பாம்புக்கறி உணவுக்கும் சீன மக்களிடையே கடும் கிராக்கியும் தேவையும் இருப்பதால் பல உணவகங்களில் ‘மெயின் டிஷ்’ ஆகவும் பாம்புக்கறி சக்கைப்போடு போடுகிறது.

    இதனால், வேறு எந்த தொழில் செய்வதையும்விட பாம்புப் பண்ணை தொழில்தான் சிறப்பானது - லாபகரமானதும்கூட. எனவே, இந்த தொழிலை ஒருநாளும் கைவிடப் போவதில்லை என்று  இந்த கிராமத்து மக்கள் உறுதியுடன் கூறுகின்றனர். #Chinesevillage #3millionsnakes
    ஆப்கானிஸ்தானில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டுவீழ்த்தப்பட்ட ரஷ்ய போர் விமானத்தின் பைலட் தற்போது 60 வயதில் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். #RussianPilot
    மாஸ்கோ:

    ஆப்கானிஸ்தானுக்கும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவுக்கும் இடையே கடந்த 1979 முதல் 1989-ம் ஆண்டு வரை போர் நடந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1989-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது.

    சோவியத் ரஷிய படைகள் வாபஸ் பெறப்பட்டன. அப்போது 300 வீரர்கள் மாயமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 30 வீரர்கள் மட்டும் தங்களது நாட்டுக்கு திரும்பிவிட்டனர். மற்றவர்கள் கதி என்ன என்று தெரியாமல் இருந்தது. அவர்கள் போரில் இறந்து இருக்கலாம் என கருதப்பட்டது.

    இதற்கிடையே 30 ஆண்டுகளுக்கு பிறகு விமானி ஒருவர் ரஷியா திரும்பினார். அவரது பெயர் செர்ஜி பேன்டலிக். தெற்கு ரஷியாவின் ரோஸ்டல் மாகாணத்தை சேர்ந்த இவர் வடக்கு காபூலில் பக்ராம் விமான படை தளத்தில் முகாமிட்டிருந்தார். அங்கிருந்து புறப்பட்ட போது அவரது போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே அவர் இறந்து இருக்கலாம் என கருதப்பட்டது.

    ஆனால், அவர் மரணம் அடையவில்லை. தற்போது உயிருடன் திரும்பிவிட்டார். மாயமான போது அவரது வயது 30. தற்போது இவருக்கு 60 வயதாகிறது.

    இவருக்கு 31 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் காணாமல் போன சில மாதங்களுக்கு முன்பு தான் பிறந்தாள். இவரது தாயாரும், தங்கையும் இன்னும் உயிருடன் உள்ளனர். அவரை பார்த்ததும் குடும்பத்தினர் கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் விட்டனர்.

    தனது இறுதி காலத்தை ஆப்கானிஸ்தானில் தங்கி கழிக்க போவதாக விமானி பான்டலுக் தெரிவித்தார். ஏனெனில் ஆப்கானிஸ்தான் மக்கள் மிகவும் அன்பானவர்கள். உபசரிப்பதில் சிறந்தவர்கள் என்றார். #RussianPilot
    சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடலுக்கடியில் வாழும் 30 வகையான புதிய உயிரினங்களை கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.
    பீஜிங்:

    சீன விஞ்ஞானிகள் ஆழ்கடலில் தூண்டில் இரையுடன்,கேமிரா பொருத்தி ஆய்வு நடத்தினர். அப்போது தூண்டிலில் இருந்த இரையை உண்பதற்காக வந்த உயிரினங்கள் கேமிராவில் பதிவாகின. அவற்றில் 30 உயிரினங்கள் புதிய உயிரினங்கள் என்பது  ஆய்வில் தெரிய வந்தது.


    இதனைத் தொடர்ந்து, கிழக்கு சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் சர்வதேச கடல் ஆணைய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சீனா விஞ்ஞானிகள் ஆழ்கடல் ஆய்வில் புதிதாக கண்டறியப்பட்ட 30 புதிய உயிரினங்கள் தொடர்பான வீடியோவை வெளியிட்டனர். அந்த வீடியோவில் பலவகை மீன்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் செந்நிற இறால்கள், பாம்பு வடிவ ஈல் மீன்கள், பெரிய கண்களுடன் விமானம் போன்று காட்சித் தரும் அரிய வகை மீன் உள்ளிட்ட மீன்கள் முக்கியமானவை ஆகும்.


    இதுகுறித்து பேசிய சீன ஆராய்ச்சியாளர் வாங் சன்செங் பேசுகையில், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 30 வகையான உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் அவற்றின் வாழ்வு முறை போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிற்கு இது உதவியாக இருக்கும்.

    ×