search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20"

    ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 2.0 படத்தில் செல்போன்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மனுதாக்கல் செய்துள்ளதால், 2.0 படத்திற்கு சிக்கல் வந்துள்ளது. #2Point0 #Rajinikanth
    ‌ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது ‘2.0’ திரைப்படம்.

    கடந்த 2010-ம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார் வில்லனாகவும், எமி ஜாக்சன் உள்ளிட்டோரும் நடித்துள்ளதால் இந்திய அளவில் படத்துக் கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    பலமுறை படத்தை வெளியிடத் திட்ட மிட்டு கிராபிக்ஸ் வேலைகள் முடிவடையாத நிலையில் படம் வெளியாகவில்லை. தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து நாளை (29-ந்தேதி) வெளியாக உள்ளது. ஏற் கெனவே படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.



    2.0 படத்தின் டீசர் மற்றும் டிரைலரில் செல்போன்கள் வைத்து அதிகமான காட்சிகள் இடம்பெற்றன. இந்நிலையில் செல்போன்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி 2.0 படத்தை மறுதணிக்கை செய்யக்கோரி தொலைத்தொடர்பு நிறுவனத்தினர் மத்திய தணிக்கைத்துறையிடம் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    எந்த வித ஆதாரமும் இன்றி 2.0 திரைப்பட டீசர் டிரைலரில் செல்போன்கள் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது என்று கூறி மத்திய தணிக்கைத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு இந்திய செல்போன் ஆபரேட்டர்கள் சங்கத்தினர் புகார் மனு அனுப்பியுள்ளனர். நாளை படம் வெளியாக உள்ள நிலையில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #2Point0 #Rajinikanth

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் - ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் `2.0' படத்தின் முன்னோட்டம். #2Point0 #Rajinikanth #AkshayKumar #AmyJackson
    லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ள படம் `2.0'.

    ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி இருக்கிறது. சுதன்சு பாண்டே, கலாபவன் ஷாஜான், ரியாஸ் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

    இசை - ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவு - நிரவ் ஷா, படத்தொகுப்பு - ஆண்டனி, பாடல்கள் - பாஸ்கர் பத்லா, மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், கலை - டி.முத்துராஜ், சண்டைபயிற்சி - ஸ்டண்ட் சில்வா, ஒலி வடிவமைப்பு - ரசூல் பூக்குட்டி, தயாரிப்பு - சுபாஸ்கரன், துணை இயக்குநர் - முகமது யூனஸ் இஸ்மாயில், திரைக்கதை, வசனம் - ஷங்கர், ஜெமோகன், கதை, இயக்கம் - ஷங்கர்.



    படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ‌ஷங்கர் பேசியதாவது:-

    எந்திரன் 2.0 படத்தின் பலமே ரஜினி தான். அவர் எது செய்தாலும் வித்தியாசமாகவும் கவர்ச்சியாகவும், மாஸாகவும் இருக்கும். இப்படத்தில் ரஜினியை பல வடிவத்தில் பார்க்கலாம். எந்திரன் முதல் பாகத்தில் ரஜினியை வசிகரன், சிட்டி ஆகிய 2 வேடத்தில் பார்த்தோம். இப்படத்தில் வசிகரன், சிட்டி, ஜெயின்ட் சிட்டி, எந்திரன் 2.0 உள்ளிட்ட பல வேடத்தில் அவரை பார்க்கலாம்.

    கண்களுக்கு 3டி டெக்னாலஜியும், காதுகளுக்கு 4டி ஒலி டெக்னாலஜியும் அருமையாக இருக்கும். கிராபிக்ஸ், சண்டை காட்சிகள், வி.எப்.எக்ஸ் ஆகியவைதான் சவாலாக இருந்தது.

    படம் நவம்பர் 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #2Point0 #Rajinikanth #AkshayKumar #AmyJackson

    2.0 படத்தின் டிரைலர்:

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 2.0 படம் உலகம் முழுக்க சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீசாகவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #2Point0 #Rajinikanth #AkshayKumar
    ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படம் வருகிற 29-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. மேலும் பல மொழிகளில் ‘டப்பிங்’ செய்தும் வெளியிடுகின்றனர். இந்த படம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 10 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தமிழ் திரையுலக வரலாற்றில் புதிய சாதனை என்கின்றனர். இதற்கு முன்பு எந்த தமிழ் படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானது இல்லை. ஏற்கனவே 1991-ல் வெளியான ரஜினியின் தளபதி படம் வெளிநாடுகளில் முதல் தடவையாக 100 தியேட்டர்களில் வந்தது. 2007-ல் வெளியான சிவாஜி படம் 1000 தியேட்டர்களில் வெளியானது சாதனையாக பேசப்பட்டது.

    ‘2.0’ இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.600 கோடி செலவில் தயாரான நேரடி தமிழ் படம். இந்திய திரையுலகில் முதல் முறையாக 3டி கேமராவில் முழு படத்தையும் எடுத்துள்ளனர். ஹாலிவுட் படங்களை போல் ஐமேக்ஸ் தியேட்டர்களில் 2.0 படத்தை திரையிட ஒப்பந்தம் செய்துள்ளனர்.



    முதன் முறையாக 4டி ஒலி தொழில்நுட்பத்தில் இதன் ஒலி அமைப்பை உருவாக்கி உள்ளனர். இந்திய படங்கள் அனைத்தையும் பாகுபலி, வசூலில் பின்னுக்கு தள்ளி உலக அளவில் பேசப்பட்டது. அதுபோல் 2.0 படமும் ஹாலிவுட் படங்களுக்கு இணையான இடத்தை எட்டிப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #2Point0 #Rajinikanth #AkshayKumar

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தின் நீக்கப்பட்ட வசனங்களின் விவரம் வெளியாகியுள்ளது. #2Point0 #Rajinikanth #AkshayKumar
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 மணிநேரம் 28 நிமிடங்கள் 52 நொடிகளுக்கு இப்படம் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    இதுவரை உருவான ‌ஷங்கர் படத்திலேயே இதுதான் மிகக்குறைந்த நேரம் ஓடும் திரைப்படமாக இருக்கும். தணிக்கைக் குழுவினர் காட்சிகளில் பெரிய அளவில் கத்திரி வைக்கவில்லை.

    ஆனால், வசனங்களில் தாராளமாகக் கைவைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. ‘யுனிசெல்’ என்ற நிறுவனத்தின் பெயரைத் திரைப்படத்தில் எங்கெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். அதுபோலவே, ‘புற்று நோய்,’ ‘கருச்சிதைவு’, ‘ஆண்மைக் குறைவு’, ‘லஞ்சம்’, ‘45 வருடம்’ ஆகிய வசனங்களை நீக்கச் சொல்லி உத்தரவிடப்பட்டிருக்கிறது.



    அத்துடன் ‘9’ என்ற வார்த்தையை நீக்கச் சொல்லியும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ‘9’ என்ற எண்ணை, ‘வார்த்தை’ என சென்சார் குழு குறிப்பிட்டிருப்பதன் காரணம் அது ஒரு தனி நபரைக் குறிப்பதாகவே இருக்க வேண்டும்.
    ஐதராபாத்தில் கட்டப்பட்டியிருக்கும் மகேஷ் பாபுவின் திரையரங்கை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைக்க இருப்பதாகவும், அந்த திரையரங்கில் முதல் படமாக 2.0 படத்தை திரையிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth #AMBCinemas
    தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனான மகேஷ்பாபு ஐதராபாத்தில் திரையரங்கு ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

    ஏசியன் சினிமாஸ் உடன் இணைந்து மிகப் பிரமாண்டமான திரையரங்க மால் ஒன்றை ஐதராபாத்தில் மகேஷ் பாபு நிறுவ உள்ளார். ஏஎம்பி சினிமாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரையரங்கில் முதல் படமாக அமீர்கான் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தானை வெளியிட்டு தொடக்க விழாவிற்கு அமீர் கானை வரவழைக்க ஏற்பாடு நடந்தது.



    ஆனால் அமீர் கான் பிசியாக இருக்கவே அந்த முயற்சி பின்னர் கைவிடப்பட்டது. அதன் பின்னர் பிரமாண்டமான ஒரு தொடக்கத்திற்காக சரியான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த அவர்களுக்கு ரஜினியின் 2.0 படம் தற்போது கையில் கிடைத்துள்ளது.



    அந்தவகையில் ரஜினியின் இந்தப் படமே அந்தத் திரையரங்கினில் முதல் படமாக வெளியிடப்படவுள்ளது. இந்த தொடக்க விழாவிற்கு ரஜினியை அழைத்திருக்கிறார்கள். 2.0 படத்திற்கான விளம்பரமாகவும் அமையும் என்பதால் ரஜினி இதில் கலந்துகொள்வார் என தெரிகிறது. #2Point0 #Rajinikanth #AMBCinemas #MaheshBabu

    சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.O’ படத்தின் சென்சார் ரிசல்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. #2Point0 #Rajinikanth
    ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது.

    இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பின் வெளியான டிரைலர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று உலகளவில் டிரெண்டானது.



    தற்போது இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதை படக்குழுவினர் வெளியிட்டு நவம்பர் 29ம் தேதி ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளனர். #2Point0 #Rajinikanth
    2.0 படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இசை கோர்வையின் போது படத்தை பார்த்து தான் வியந்ததாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். #2Point0 #ARRahman
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஏமி ஜாக்சன், அக்‌‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.0’ இந்த மாதம் 29-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த படத்தின் 3டி டிரைலர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் கடந்த 3-ந் தேதி வெளியானது. இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்தப் படத்திற்கு இசை அமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான், ‘2.0’வின் ஆறாவது ரீல் காட்சிகளுக்கான மிக்சிங் வேலைகளை செய்து வருகையில், அந்த காட்சிகளை பார்த்து வியந்து அது குறித்து ட்விட் செய்துள்ளார். அதில், “2.0 படத்தின் 6-வது ரீலுக்கான இசையில் மிக்ஸ் செய்து கொண்டிருக்கிறேன். ஓ மை காட்... உணர்வுப்பூர்வமான சயின்ஸ் பிக்‌‌ஷர் சகாப்தம் என்பேன்” என்று பதிவிட்டிருக்கிறார். #2Point0 #Rajinikanth #ARRahman

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.0’ படம் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்ராக்கர்ஸில் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. #2Point0 #Rajinikanth
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக ரூ.543 கோடியில் இந்த படம் உருவாகி இருக்கிறது.

    சமீபத்தில் வெளியாகிய இந்த படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் வருகிற நவம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    இந்த நிலையில், 2.0 படம் விரைவில் தமிழ்ராக்கர்ஸில் வெளியாகும், நவம்பர் மாத ரிலீஸ் என்று சினிமா படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ்ராக்கர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.



    முன்னதாக விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சர்கார் படத்தையும் படம் ரிலீஸான அன்றே வெளியிட்டு படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்தது. இந்த நிலையில், 2.0 படமும் இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளதால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #2Point0 #Rajinikanth

    2.0 படத்தின் டிரைலர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், ரஜினிகாந்த், ஷங்கர் மற்றும் 2.0 படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #2Point0 #Rajinikanth #KamalHaasan
    ரஜினிகாந்தின் 2.0 பட டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டதையொட்டி அவருக்கும், இயக்குனர் சங்கருக்கும் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வீடியோவில் கூறி இருப்பதாவது:-

    ரஜினிகாந்த், ஷங்கர், அக்‌ஷய்குமார், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



    2.0 படம் ரஜினிகாந்தின் சாதனைக்கு மற்றொரு மைல்கல்லாக அமையும். இந்த படம் உருவாக சங்கர் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது எனக்கு தெரியும். ஷங்கரின் உழைப்புக்கான பலன் கிடைக்கும். வாழ்த்துக்கள். 

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #2Point0 #Rajinikanth #KamalHaasan

    2.0 படத்தில் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கரிடம் 3.0 படம் வருமா என்று கேட்டதற்கு வரவாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth
    2.0 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ‌ஷங்கர் பேசிய தாவது:-

    எந்திரன் 2.0 படத்தின் பலமே ரஜினி தான். அவர் எது செய்தாலும் வித்தியாசமாகவும் கவர்ச்சியாகவும், மாஸாகவும் இருக்கும். படப்பிடிப்பில் ஒரு நாள் அவருக்கு முழங்காலில் அடிப்பட்டது. அதுபற்றி அவர் எங்களிடம் சொல்லவே இல்லை. நாங்கள் வற்புறுத்தி பார்த்த போது தோல் கிழிந்திருந்தது. ஆனால் அதற்கு அவர் சிகிச்சை பெறாமல் தொடர்ந்து நடிப்பேன் என்று அடம் பிடித்தார். ஆனால் நாங்கள் அவரை வற்புறுத்தி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம். அவருக்கு 4 தையல் போடப்பட்டது. அவர் இப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார்.

    இப்படத்தில் ரஜினியை பல வடிவத்தில் பார்க்கலாம். எந்திரன் முதல் பாகத்தில் ரஜினியை வசிகரன், சிட்டி ஆகிய 2 வேடத்தில் பார்த்தோம். இப்படத்தில் வசிகரன், சிட்டி, ஜெயின்ட் சிட்டி, எந்திரன் 2.0 உள்ளிட்ட பல வேடத்தில் அவரை பார்க்கலாம். அவர் 42 கிலோ எடையை சுமந்து நடித்துள்ளார்.

    கண்களுக்கு 3டி டெக்னாலஜியும், காதுகளுக்கு 4டி ஒலி டெக்னாலஜியும் அருமையாக இருக்கும். கிராபிக்ஸ், சண்டை காட்சிகள், வி.எப்.எக்ஸ் ஆகியவைதான் சவாலாக இருந்தது. எந்திரன் 3.0 வருமா? என்று கேட்கிறார்கள். அதற்காக சின்ன சின்ன ஐடியாக்கள் உள்ளன. அவை ஒன்றாக இணையும் போது கண்டிப்பாக அடுத்த பாகம் வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.



    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசும் போது, ‘நான் ரஜினியின் தீவிர ரசிகன். அதை 10 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டேன். நான் 40 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் எந்திரன் படத்தில் ரஜினி கடுமையாக உழைத்ததை பார்த்து ஓய்வு எண்ணத்தை கைவிட்டேன்’ என்றார்.

    வில்லனாக நடித்துள்ள இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் கூறும்போது, ‘எந்திரன் 2.0 படத்தில் நடித்தது சந்தோ‌ஷமாக இருக்கிறது. ரஜினிதான் எனக்கு முன் மாதிரியாக இருக்கிறார்’ என்றார். #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth

    2.0 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், லேட்டா வந்தாலும், கரெக்ட்டா வரணும், வந்து சரியா அடிக்கணும் என்றார். #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது.

    இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

    நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது,

    ரஜினியையோ, அக்‌ஷய் குமாரையோ நம்பி 2.0 படத்தை பார்க்க வரவேண்டாம். ஷங்கரை நம்பி வாருங்கள். ஷங்கர் மிகவும் நம்பிக்கையான மனிதர், 2.0 சூப்பர், டூப்பர் ஹிட் ஆக போகிற படம். 2.0 திரைப்படம் அனைத்து தரப்பினருக்குமானது. அவர் ஒரு சிறந்த படைப்பாளி, மிகச் சிறந்த இயக்குநர். அவரது சிந்தனையும், உருவாக்கமும் பிரம்மாண்டமானது. ஆச்சரியப்பட வைப்பது. இயக்குனர் ஷங்கர் 2.0 திரைப்படத்தை உலகளவில் கொண்டு சென்றுள்ளார். 



    அவருடன் இரு படங்களை முடித்த பிறகு மூன்றாவது முறையாக இணைவது பற்றி 2.0 கதை பற்றி பேசினோம். அப்போது அவரிடம் நான் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை மட்டும் தான் கேட்டேன். சிவாஜி படம் எடுக்கும் போது படத்தின் தயாரிப்பு நினைத்ததை விட அதிகமானது. ஆனால் படம் நல்லாவே வசூல் செய்தது. அந்த படத்தின் வசூல் எவ்வுளவோ அதை முதலீடாக வைத்து எந்திரன் படத்தை உருவாக்கினோம். எந்திரன் படத்தின் தயாரிப்பு விகிதமும் அதிகரித்தது. சன் பிக்சர்ஸ் அதிக பணத்தை அதற்காக செலவிட்டது. எந்திரனும் வசூல் குவித்து சாதனை படைத்தது.

    இந்த நிலையில், எந்திரன் வசூலை 2.0 படத்திற்காக தான் செலவு செய்வதாக சுபாஷ்கரன் கூறினார். தனக்கு லாபம் வேண்டாம், எந்திரன் வசூல் கிடைத்தால் போதும் என்றார். 300, 350 கோடிக்கு படத்தை எடுக்க முடிவு செய்து ஆரம்பித்தோம். தற்போது 500 கோடியை தாண்டியுள்ளது படத்தின் பட்ஜெட். இந்த படமும் நல்ல வசூலைக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் படத்தில் நடிக்க முடியவில்லை. எனவே படத்தில் இருந்து நான் வெளியேறுவதாக கூறினேன். வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுப்பதாக சொன்னேன். ஆனால் ஷங்கர் விடவில்லை. படம் முக்கியம் அல்ல, நீங்கள் தான் முக்கியம் என்று சுபாஷ் சொன்னார். உடல்நிலை சரியான பிறகு கூட படத்தை எடுக்கலாம். ஆனால் நான் திரும்ப வர வேண்டும் என்று சுபாஷ் சொன்னார். இவரை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது கடினம்.



    இவரைப்போன்ற ஒரு நல்ல நண்பர் கிடைப்பது எளிதல்ல. கோஹினூர் வைரம் மாதிரி எனக்கு ஒரு நல்ல நண்பர் கிடைத்துவிட்டார். 

    படத்தில் அக்‌ஷய் குமாரின் தோற்றத்தை பார்த்து ஆடிப்போயிட்டேன். மேக்கப்புக்காக அவர் 4 மணிநேரம் வேலை பொறுமையாக இருந்திருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் சவால்.

    ரொம்பவே தாமதமாக வந்திருப்பதாக கூறுகிறார்கள். லேட்டா வந்தாலும் சரியான நேரத்திற்கு வரவேண்டும். வந்து சரியா அடிக்க வேண்டும், நான் படத்தை சொன்னேன்.

    ஆயிரக்கணக்கானோர் படத்திற்காக பணிபுரிந்திருக்கிறார்கள். அனைவரும் படத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள். 

    அடுத்ததாக எனது நண்பர் கமல் நடிக்கும் இந்தியன்-2 திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெறும். இவ்வாறு ரஜினி பேசினார். 

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.0’ படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது.

    இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

    நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பிரத்யேகமாகப் படத்தின் பாடல்கள் 3டி-யில் காட்சிப்படுத்தப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புது விதமான டிஜிட்டல் சவுண்டு சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த டிஜிட்டல் சவுண்டு சிஸ்டம் குறித்தும் பத்திரிகையாளர்களுக்கு விளக்கப்பட்டது.

    பின்னர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது. 

    இந்திய படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டும் கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 3 ஆயிரம் பேர் இந்த கிராபிக்ஸ் பணிகளைச் செய்திருப்பதாக ‌ஷங்கர் தெரிவித்துள்ளார். #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth

    2.0 படத்தின் டிரைலர்:

    ×