search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
    X

    லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு

    2.0 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், லேட்டா வந்தாலும், கரெக்ட்டா வரணும், வந்து சரியா அடிக்கணும் என்றார். #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது.

    இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

    நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது,

    ரஜினியையோ, அக்‌ஷய் குமாரையோ நம்பி 2.0 படத்தை பார்க்க வரவேண்டாம். ஷங்கரை நம்பி வாருங்கள். ஷங்கர் மிகவும் நம்பிக்கையான மனிதர், 2.0 சூப்பர், டூப்பர் ஹிட் ஆக போகிற படம். 2.0 திரைப்படம் அனைத்து தரப்பினருக்குமானது. அவர் ஒரு சிறந்த படைப்பாளி, மிகச் சிறந்த இயக்குநர். அவரது சிந்தனையும், உருவாக்கமும் பிரம்மாண்டமானது. ஆச்சரியப்பட வைப்பது. இயக்குனர் ஷங்கர் 2.0 திரைப்படத்தை உலகளவில் கொண்டு சென்றுள்ளார். 



    அவருடன் இரு படங்களை முடித்த பிறகு மூன்றாவது முறையாக இணைவது பற்றி 2.0 கதை பற்றி பேசினோம். அப்போது அவரிடம் நான் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை மட்டும் தான் கேட்டேன். சிவாஜி படம் எடுக்கும் போது படத்தின் தயாரிப்பு நினைத்ததை விட அதிகமானது. ஆனால் படம் நல்லாவே வசூல் செய்தது. அந்த படத்தின் வசூல் எவ்வுளவோ அதை முதலீடாக வைத்து எந்திரன் படத்தை உருவாக்கினோம். எந்திரன் படத்தின் தயாரிப்பு விகிதமும் அதிகரித்தது. சன் பிக்சர்ஸ் அதிக பணத்தை அதற்காக செலவிட்டது. எந்திரனும் வசூல் குவித்து சாதனை படைத்தது.

    இந்த நிலையில், எந்திரன் வசூலை 2.0 படத்திற்காக தான் செலவு செய்வதாக சுபாஷ்கரன் கூறினார். தனக்கு லாபம் வேண்டாம், எந்திரன் வசூல் கிடைத்தால் போதும் என்றார். 300, 350 கோடிக்கு படத்தை எடுக்க முடிவு செய்து ஆரம்பித்தோம். தற்போது 500 கோடியை தாண்டியுள்ளது படத்தின் பட்ஜெட். இந்த படமும் நல்ல வசூலைக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் படத்தில் நடிக்க முடியவில்லை. எனவே படத்தில் இருந்து நான் வெளியேறுவதாக கூறினேன். வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுப்பதாக சொன்னேன். ஆனால் ஷங்கர் விடவில்லை. படம் முக்கியம் அல்ல, நீங்கள் தான் முக்கியம் என்று சுபாஷ் சொன்னார். உடல்நிலை சரியான பிறகு கூட படத்தை எடுக்கலாம். ஆனால் நான் திரும்ப வர வேண்டும் என்று சுபாஷ் சொன்னார். இவரை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது கடினம்.



    இவரைப்போன்ற ஒரு நல்ல நண்பர் கிடைப்பது எளிதல்ல. கோஹினூர் வைரம் மாதிரி எனக்கு ஒரு நல்ல நண்பர் கிடைத்துவிட்டார். 

    படத்தில் அக்‌ஷய் குமாரின் தோற்றத்தை பார்த்து ஆடிப்போயிட்டேன். மேக்கப்புக்காக அவர் 4 மணிநேரம் வேலை பொறுமையாக இருந்திருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் சவால்.

    ரொம்பவே தாமதமாக வந்திருப்பதாக கூறுகிறார்கள். லேட்டா வந்தாலும் சரியான நேரத்திற்கு வரவேண்டும். வந்து சரியா அடிக்க வேண்டும், நான் படத்தை சொன்னேன்.

    ஆயிரக்கணக்கானோர் படத்திற்காக பணிபுரிந்திருக்கிறார்கள். அனைவரும் படத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள். 

    அடுத்ததாக எனது நண்பர் கமல் நடிக்கும் இந்தியன்-2 திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெறும். இவ்வாறு ரஜினி பேசினார். 

    Next Story
    ×