என் மலர்
சினிமா

மகேஷ் பாபு திரையரங்கை துவக்கி வைக்கும் ரஜினி - முதல் படமாக வெளியாகும் 2.0
ஐதராபாத்தில் கட்டப்பட்டியிருக்கும் மகேஷ் பாபுவின் திரையரங்கை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைக்க இருப்பதாகவும், அந்த திரையரங்கில் முதல் படமாக 2.0 படத்தை திரையிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth #AMBCinemas
தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனான மகேஷ்பாபு ஐதராபாத்தில் திரையரங்கு ஒன்றை தொடங்கி இருக்கிறார்.
ஏசியன் சினிமாஸ் உடன் இணைந்து மிகப் பிரமாண்டமான திரையரங்க மால் ஒன்றை ஐதராபாத்தில் மகேஷ் பாபு நிறுவ உள்ளார். ஏஎம்பி சினிமாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரையரங்கில் முதல் படமாக அமீர்கான் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தானை வெளியிட்டு தொடக்க விழாவிற்கு அமீர் கானை வரவழைக்க ஏற்பாடு நடந்தது.

ஆனால் அமீர் கான் பிசியாக இருக்கவே அந்த முயற்சி பின்னர் கைவிடப்பட்டது. அதன் பின்னர் பிரமாண்டமான ஒரு தொடக்கத்திற்காக சரியான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த அவர்களுக்கு ரஜினியின் 2.0 படம் தற்போது கையில் கிடைத்துள்ளது.

அந்தவகையில் ரஜினியின் இந்தப் படமே அந்தத் திரையரங்கினில் முதல் படமாக வெளியிடப்படவுள்ளது. இந்த தொடக்க விழாவிற்கு ரஜினியை அழைத்திருக்கிறார்கள். 2.0 படத்திற்கான விளம்பரமாகவும் அமையும் என்பதால் ரஜினி இதில் கலந்துகொள்வார் என தெரிகிறது. #2Point0 #Rajinikanth #AMBCinemas #MaheshBabu
Next Story






