search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 arrest"

    நாமக்கல் அருகே கண்டெய்னர் லாரியில் ரூ.28 லட்சம் மதிப்பிலான எரிசாராயத்தையை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள புதுசத்தரம் பகுதி வழியாக மினி கண்டெய்னர் லாரியில் எரி சாராயம் கடத்தி செல்வதாக நாமக்கல் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையிலான போலீசார், புதுசத்திரம் பகுதிக்கு விரைந்து சென்று கண்காணிப்பு மற்றும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது எரிசாராயம் கடத்தி வந்த மினி கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

    கண்டெய்னருக்குள் 550 கேனில் 19 ஆயிரத்து 250 லிட்டர் எரி சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாராயம் அரியானா மாநிலத்தில் இருந்து கடத்தி எர்ணாகுளத்துக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.28 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

    இந்த கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் (வயது 44) மற்றும் மாற்று டிரைவர் ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த சிவைய்யா (30) ஆகிய 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைதான 2 டிரைவர்களை படத்தில் காணலாம்

    பறிமுதல் செய்யப்பட்ட எரி சாராயத்தை சேலம் சரக மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோர் பார்வையிட்டு, டிரைவர்களை கைது செய்த போலீசாரை பாராட்டினர். #tamilnews
    டெல்லியில் 32 கோடி ரூபாய் மதிப்பில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்து நைஜீரியன் உள்பட 2 பேரை கைது செய்தனர். #DelhiMetro #Heroin
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் சாகேத் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் போதை பொருள் கடத்தப்படுவதாக டெல்லி போதை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, டெல்லி போலீசார் இன்று அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த இருவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். 

    அவர்களிடம் நடத்திய சோதனையில் 8 கிலோ ஹெராயின் இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு 32 கோடி ரூபாய் மதிப்புடையது.

    இதையடுத்து, அவர்கள் கடத்தி வந்த 8 கிலோ ஹெராயினை டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஹெராயினை கடத்தி வந்த ஆஸ்கார் என்ற நைஜீரிய நாட்டு ஆசாமி உள்பட 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். #DelhiMetro #Heroin
    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடிய சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு தலையட்டியை சேர்ந்தவர் சகாதேவன். இவர் எடக்காடு பஜாரில் அடகு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் சகாதேவன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் ‌ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த கல்லாவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து சகாதேவன் மஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக இன்ஸ்பெக்டர் தவுஹித் நிஷா தலைமையிலான விரைந்து விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு போலீசார் பஜார் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்து இடமாக நின்ற 2 பேரை பிடடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது 2 பேரும் சகாதேவனின் அடகு கடையில் திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும் போலீசார் நடத்திய

    விசாரணையில் இவர்கள் பல்வேறு பகுதிகளில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    மதுரை பாண்டிகோவில் அருகில் வாகனங்களை வேறு பகுதிக்கு சென்று நிறுத்துமாறு கூறியுள்ள போலீஸ்காரரை தாக்கியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மதுரை:

    மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றியவர் கதிர்வேல். இவர் நேற்று காலை 11 மணிக்கு பாண்டிகோவில் அருகே உள்ள திருமண மண்டபம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    வாகனங்களை சிலர் விதிமுறைகளை மீறி போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்தனர். உடனே கதிர்வேல் வாகனங்களை வேறு பகுதிக்கு சென்று நிறுத்துமாறு கூறியுள்ளார்.

    அப்போது அண்ணாநகர், பாத்திமாநகரைச் சேர்ந்த செந்தில்குமார் (28), கொன்னவாயன் சாலையைச் சேர்ந்த அருண்பாண்டி (26) ஆகியோர் போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதில் 2 பேரும் தன்னை தாக்கியதாக போலீஸ்காரர் கதிர்வேல், அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செந்தில்குமார், அருண்பாண்டியை கைது செய்தனர். #tamilnews
    திசையன்விளை அருகே கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கோழிக்கழிவுகளை ஓடையில் கொட்டிய 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள பொத்தகாலன் விளை பன்றி பண்ணை அருகே உள்ள ஓடையில் ஒரு லாரியில் இருந்து சிலர் கோழி கழிவுகளை கொட்டினர்.

    கேரள மாநிலத்தில் இருந்து இந்த கோழி கழிவுகளை ஏற்றி வந்து கொட்டியதை அறிந்த முதுமொத்தன்மொழி கிராம நிர்வாக அலுவலர் இசக்கியப்பன் திசையன்விளை போலீசாரிடம் புகார் செய்தார்.

    சம்பவ பகுதிக்கு திசையன்விளை போலீசார் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இது தொடர்பாக போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் தனசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கேரள மாநிலத்தில் இருந்து கோழிக்கழிவுகளை கொட்டியதாக அந்த மாநிலத்தை சேர்ந்த இருமக்குழி மேக்கரை மனோரஞ்சித் (வயது 34), அசின்பாபு (26) ஆகிய 2 பேரை கைது செய்தார். கோழி கழிவுகளை ஏற்றி வந்த லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், லாரி உரிமையாளர் சிவாஜி(40) என்பவரை போலீசார் தேடிவருகின்றனர். #tamilnews
    கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் என்ஜினீயரை தாக்கியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டணம், வளையல்காரத் தெருவைச் சேர்ந்த அபுபக்கர் மகன் காஜா (வயது 27), என்ஜினீயர். இவர் பக்ரீத் பண்டிகைக்காக மதுரையில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் நண்பர்களுடன் டவுன்ஹால் ரோட்டில் உள்ள பெருமாள் கோவில் தெப்பத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்றார்.

    அப்போது அங்கு ஏற்கனவே கிரிக்கெட் விளையாடிய சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் எதிர் தரப்பினர் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் காஜா, குல்முகமதீன், பைசூல் வகிதின் ஆகியோர் காயமடைந்ததாக திடீர் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து திடீர்நகரைச் சேர்ந்த இப்ராகிம்ஷா (22), பகத்சிங் ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். #tamilnews
    ×