search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிவி சிந்து"

    • தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-18, 21-23, 21-13 என்ற செட் கணக்கில் இஸ்ரேலின் ஜில்பர்மேனை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • சங்கர் முத்துசாமி, தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மின்டன் போட்டி கவுன்சில் பிளப்ஸ்சிஸ் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து கால் இறுதிக்கு முன்னேறினர்.

    இந்திய நேரப்படி இன்று நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் பி.வி.சிந்து 21-14, 21-12 என்ற நேர் செட் கணக்கில் சுங் சுரோ யூனை (தைவான்) தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

    பி.வி.சிந்து கால் இறுதியில் சீனாவின் காவோ பாங்ஜியுடன் மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் 21-8, 23-21 என்ற செட் கணக்கில் (செக் குடியரசு) தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-18, 21-23, 21-13 என்ற செட் கணக்கில் இஸ்ரேலின் ஜில்பர்மேனை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    நாளை நடக்கும் கால் இறுதியில் லக்ஷயா சென்-சங்கர் முத்துசாமி ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். சங்கர் முத்துசாமி, தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீ காந்த், சக இந்திய வீரரான லக்சயா சென் ஆகியோர் மோதினர்.
    • பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21 - 17 , 22- 20 என்ற செட் கணக்கில் ஸ்ரீ காந்த் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    ஜகர்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீ காந்த், சக இந்திய வீரரான லக்சயா சென் ஆகியோர் மோதினர்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21 - 17 , 22- 20 என்ற செட் கணக்கில் ஸ்ரீ காந்த் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    பெண்கள் ஒற்றைய பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து இந்தோனேசியா ஓபன் சாம்பியனான தை சூயிங்கிடம் 21-18, 21-16 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். சீன தைபே வீராங்கனைக்கு எதிராக 24 நேருக்கு நேர் சந்தித்த சிந்துவின் 19-வது தோல்வி இதுவாகும்.

    • இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக பிவி சிந்து, எச்.எஸ். பிரணாய் உட்பட பல வீரர்கள் ஜகார்த்தா சென்றுள்ளனர்.
    • இந்தியாவின் பிவி சிந்து முதல் சுற்றில் இந்தோனேசியா வீராங்கனை கிரேகேரியா மரிஸ்காவை எதிர்கொண்டார்.

    இந்தோனேசியா:

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் இன்று துவங்கி அடுத்த மாதம் ஜூன் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக பிவி சிந்து, எச்.எஸ். பிரனோய் உட்பட பல வீரர்கள் ஜகார்த்தா சென்றுள்ளனர்.

    இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் 8-ம் நிலை வீரரான பிரனோய் முதல் சுற்றில் 21-16, 21-14 என்ற செட் கணக்கில் உலகின் 11-ம் நிலை வீரரான ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை வீழ்த்தினார்.

    பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து முதல் சுற்றில் இந்தோனேசியா வீராங்கனை கிரேகேரியா மரிஸ்காவை எதிர்கொண்டார்.


    பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-19, 21-15, என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். இதனால் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய அணியின் ஸ்ரீகாந்த் 21-15 21-19 என்ற கணக்கில் தாய்லாந்தின் காண்டபோன் வாங்சரோயனை வீழ்த்தினார்.
    • பெண்கள் பிரிவில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள சிந்து, 'நம்பர் ஒன்' வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சியும் மோதினர்.

    சிங்கப்பூர்:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கியது. வருகிற 11-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.7 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு ரூ.49 லட்சம் பரிசாக கிடைக்கும்.

    இந்நிலையில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய அணியின் ஸ்ரீகாந்த் 21-15 21-19 என்ற கணக்கில் தாய்லாந்தின் காண்டபோன் வாங்சரோயனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் பிரனோய் 15-21 19-21 என்ற கணக்கில் ஜப்பான் வீரரான நரோகாவிடம் தோல்வியடைந்தார்.

    பெண்கள் பிரிவில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள சிந்து, 'நம்பர் ஒன்' வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சியும் மோதினர். இதில் 21-18 19-21 17-21 என்ற கணக்கில் அவர் தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ராட்சனோக் இன்டோனனை எதிர்கொண்டார். இதில் 21-15 21-19 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

    • இந்தியாவின் பிரனோய் , இந்தோனேஷியாவின் கிறிஸ்டியன் அடினாடாவை எதிர்கொண்டார்.
    • அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து, இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கை எதிர்கொண்டார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரனோய், இந்தோனேஷியாவின் கிறிஸ்டியன் அடினாடாவை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தில் 21-19 என்ற கணக்கில் முதல் சுற்றை பிரனோய் கைப்பற்றினார். பின்னர் காயம் காரணமாக கிறிஸ்டியன் அடினாடா போட்டியிலிருந்து விலகினார். இதனால் இந்தியாவின் பிரனோய் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து, இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 14 -21 , 17 -21 என்ற கணக்கில் பி.வி. சிந்து தோல்வி அடைந்தார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து- ஜாங்யி மேன் பலப்பரீட்சை நடத்தினர்.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்து-சீனாவின் ஜாங்யி மேன் பலப்பரீட்சை நடத்தினர்.

    இதில் சிந்து 21-16, 13-21, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் அரை இறுதி போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை ஜி.துஞ்சங்வுடன் நாளை மோதுகிறார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார். அவர் இந்தோனேஷியாவின் கிறிஸ்டியன் ஆதிநாடாவிடம் 21-16, 16-21, 11-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி , தாய்லாந்து வீரர் குன்லவுட் விடிசார்ன் ஆகியோர் மோதினர்.
    • பரபரப்பான ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி , தாய்லாந்து வீரர் குன்லவுட் விடிசார்ன் ஆகியோர் மோதினர்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21- 19 , 21-19 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெற்றி பெற்றார். இதனால் அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    உலகின் 9-வது இடத்தில் இருக்கும் பிரனோய், உலகின் 11-ம் நிலை வீரரான லியை 13-21, 21-16, 21-11 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்றது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 16-வது சுற்றில் ஜப்பான் வீராங்கனையான அயா ஓஹோரியை 16-21, 11-21 என்ற கணக்கில் பிவி சிந்து வீழ்த்தினார். இந்த ஆட்டம் 40 நிமிடங்கள் நடந்தது.

    இதன் மூலம் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி மற்றும் பிரணாய் பெண்கள் பிரிவில் பிவி சிந்து ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    • தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    • காயம் குணமடைந்த பிறகு விளையாடிய போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தார்

    மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து, இந்தோனேசிய வீராங்கனை கிரிகோரியா மரிஸ்காவுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 8-21, 8-21 என்ற நேர்செட்களில் பி.வி.சிந்து தோல்வியடைந்து, இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

    காயம் காரணமாக சுமார் 5 மாத காலம் ஓய்வில் இருந்த பி.வி.சிந்து, காயம் குணமடைந்த பிறகு விளையாடிய போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்ததால் கடந்த வாரம் வெளியான டாப்-10 வீராங்கனைகள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி போட்டி நடந்தது.
    • இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், நேற்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, சிங்கப்பூரைச் சேர்ந்த இயோ ஜியா மின்னுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 24-22, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தோனேசிய வீராங்கனையுடன் பி.வி.சிந்து மோதுகிறார்.

    • ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, டென்மார்க்கைச் சேர்ந்த மியா பிளிச்பெல்டுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, இந்தோனேசியாவைச் சேர்ந்த வர்தானியுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராஜ் ஜோடி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
    • சாத்விக்-சிராஜ் ஜோடி கால் இறுதியில் டென்மார்க்கின் ஜெப்பே பே-லாஸ்சே மோல் ஹெடே ஜோடியுடன் மோதுகிறது.

    சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.சி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    அவர் 2-வது சுற்றில் இந்தோனேசியாவின் புத்ரி குசுமாவர்தானியிடம் 15-21, 21-12, 18-21 என்ற செட் கணக்கில் தோற்றார். ஏற்கனவே இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிரனாய், மிதுன், மஞ்சுநாத் ஆகியோர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தோற்றனர். இதன் மூலம் சுவிஸ் ஓபன்பேட்மின்டனில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராஜ் ஜோடி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. தைவானின் பாங்சிக்லீ-ஜென் லீ ஜோடியை 12-21, 21-17, 28-26 என்ற கணக்கில் கடுமையாக போராடி வென்று கால் இறுதிக்கு இந்திய ஜோடி முன்னேறியது. சாத்விக்-சிராஜ் ஜோடி கால் இறுதியில் டென்மார்க்கின் ஜெப்பே பே-லாஸ்சே மோல் ஹெடே ஜோடியுடன் மோதுகிறது.

    ×