search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கர் முத்துசாமி"

    • தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-18, 21-23, 21-13 என்ற செட் கணக்கில் இஸ்ரேலின் ஜில்பர்மேனை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • சங்கர் முத்துசாமி, தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மின்டன் போட்டி கவுன்சில் பிளப்ஸ்சிஸ் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து கால் இறுதிக்கு முன்னேறினர்.

    இந்திய நேரப்படி இன்று நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் பி.வி.சிந்து 21-14, 21-12 என்ற நேர் செட் கணக்கில் சுங் சுரோ யூனை (தைவான்) தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

    பி.வி.சிந்து கால் இறுதியில் சீனாவின் காவோ பாங்ஜியுடன் மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் 21-8, 23-21 என்ற செட் கணக்கில் (செக் குடியரசு) தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-18, 21-23, 21-13 என்ற செட் கணக்கில் இஸ்ரேலின் ஜில்பர்மேனை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    நாளை நடக்கும் கால் இறுதியில் லக்ஷயா சென்-சங்கர் முத்துசாமி ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். சங்கர் முத்துசாமி, தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இறுதி போட்டியில் தைபே வீரரிடம், தமிழக வீரர் தோல்வி.
    • இந்த தொடரில் இதுவரை வெள்ளப்பதக்கம் வென்ற நான்காவது வீரர் சங்கர் முத்துசாமி.

    சாண்டேன்டர்:

    19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டின் சாண்டேன்டர் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த சங்கர் முத்துசாமி, தைபே வீரர் குவோ குவான் லின்னை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இறுதியின் 21-14, 22-20 என்ற கணக்கில் சங்கர் தோல்வியடைந்தார். இதன் மூலம் தங்கப் பதக்கத்தை கைப்பற்றும் அவரது கனவு தகர்ந்தது. இந்த தொடரில் வெள்ளப்பதக்கம் வென்ற நான்காவது இந்திய வீரர் என்ற பெருமை அவர் பெற்றுள்ளார். 


    இதற்கு முன்னர் இந்தியா சார்பில் அபர்ணா போபட் (1996), சாய்னா நேவால் (2006) மற்றும் சிரில் வர்மா (2015) ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தனர். எனினும் சாய்னா மட்டுமே கடந்த 2008 ஆண்டு உலக ஜூனியர் பேட்மிண்டன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    • அரையிறுதி போட்டியில் தாய்லாந்து வீரரை தோற்கடித்தார்.
    • 2016 ஆண்டுக்கு பிறகு இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர்.

    சாண்டேன்டர்:

    19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டின் சாண்டேன்டர் நகரில் நடைபெறுகிறது. ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டி ஒன்றில் இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த சங்கர் முத்துசாமி, உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் பனிட்சாபோன் தீரரட்சகுலுடன் மோதினார்.

    இதில் 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சங்கர் முத்துசாமி தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இந்த வெற்றியின் மூலம், 2016க்கு பிறகு இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய பேட்மிண்டன் வீரர் என்ற பெருமையை சங்கர் முத்துசாமி பெற்றார்.

    முன்னதாக கடந்த 2008 ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    ×