search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Badminton Tournament"

    • 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரித்விக், கிருத்திக் பிரணவ் ஜோடி முதலிடம் பெற்றனர்.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் திருப்பூர் சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளுக்கு இடையேயான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. திருப்பூர் சகோதயா கூட்டமைப்பில் உள்ள 23-க்கும் அதிகமான சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இருந்து 250-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர். 12 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் இரட்டையர் பிரிவில் வர்ணிகாஸ்ரீ, மகிமிதா ஜோடி முதலிடம் பெற்றனர். 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரித்விக், கிருத்திக் பிரணவ் ஜோடி முதலிடம் பெற்றனர். 14 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் இரட்டையர் பிரிவில் ஐஸ்வர்ய லட்சுமி, ஸ்வேதா ஜோடி முதலிடம் பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மாணவன் ரித்விக் முதலிடம் பெற்றார். 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மாணவன் கவுஷிக் குகன் 2-ம் இடம் பெற்றார்.

    முன்னதாக தொடக்க விழாவுக்கு ஏ.வி.பி.பள்ளி தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி பேசினார். முதல்வர் பிரமோதினி வரவேற்றார். மாநகராட்சி கமிஷனர் ஜி.பவன்குமார், திருப்பூர் யூரோலைன் ஏற்றுமதி நிறுவன மேலாண்மை இயக்குனர் மெய்நம்பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி, பொருளாளர் லதாகார்த்திகேயன், முதல்வர் பிரமோதினி, ஒருங்கிணைப்பாளர் வி.மோகனா, பயிற்சியாளர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ, ஸ்ரீமுருகன் நிட்ஸ் ஏற்றுமதி நிறுவன தலைவரும் முன்னாள் திருப்பூர் மாமன்ற உறுப்பினருமான பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். உடற்கல்வி ஆசிரியர் ஞானசுந்தரி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • கனரா வங்கி சார்பில் கிரிக்கெட், பேட்மிட்டன் போட்டி நடந்தத.
    • மகளிருக்கான பேட்மிட்டன் போட்டியில் திருச்சி ராக்போர்ட் குயின்ஸ் அணி வெற்றி பெற்றது.

    மதுரை

    கனரா வங்கி மதுரை வட்ட அலுவலகம் சார்பில் விடுமுறை நாளையொட்டி கிரிக்கெட், பேட்மிட்டன் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியை கனரா வங்கியின் மதுரை வட்ட பொதுமேலாளர் டி.வீ.கே. மோகன் தொடங்கி வைத் தார்.

    இதில் மதுரை வட்டத்தின் கீழ் உள்ள 405 கிளைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது திறமை மற்றும் குழு உணர்வினை வெளிப்படுத்தினர்.

    விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் மண்டலத்தின் ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. மகளிருக்கான பேட்மிட்டன் போட்டியில் திருச்சி ராக்போர்ட் குயின்ஸ் அணி வெற்றி பெற்றது.

    வெற்றி பெற்ற அணிக ளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. இந்த நிகழ்வு உடல் ஆரோக்கியத்தை ஊக்கு விப்பது மட்டுமல்லாமல் மனவளத்தை பேணுவதோடு ஊழியர்களிடையே நல்ல நட்புறவை வளர்ப்பதாக அமைத்தது என்பது சிறப்பம்சமாகும்.

    கனரா வங்கி ஊழயர்க ளுக்கான மண்டல மற்றும் தேசிய அளவிலான போட்டி களில் மதுரை வட்டத்தின் ஒரு குழு பங்கேற்று பிட் இந்தியா இயக்கத்தை மேலும் உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.

    • தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-18, 21-23, 21-13 என்ற செட் கணக்கில் இஸ்ரேலின் ஜில்பர்மேனை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • சங்கர் முத்துசாமி, தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மின்டன் போட்டி கவுன்சில் பிளப்ஸ்சிஸ் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து கால் இறுதிக்கு முன்னேறினர்.

    இந்திய நேரப்படி இன்று நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் பி.வி.சிந்து 21-14, 21-12 என்ற நேர் செட் கணக்கில் சுங் சுரோ யூனை (தைவான்) தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

    பி.வி.சிந்து கால் இறுதியில் சீனாவின் காவோ பாங்ஜியுடன் மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் 21-8, 23-21 என்ற செட் கணக்கில் (செக் குடியரசு) தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-18, 21-23, 21-13 என்ற செட் கணக்கில் இஸ்ரேலின் ஜில்பர்மேனை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    நாளை நடக்கும் கால் இறுதியில் லக்ஷயா சென்-சங்கர் முத்துசாமி ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். சங்கர் முத்துசாமி, தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இதில் 26 நாடுகளை சேர்ந்த 202 வீரர்கள் விளையாடினர்.
    • ஒற்றையர் ஆண்கள் பிரிவில் விளையாடிய பிரேம்குமார் வெண்கல பதக்கம் வென்றார்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் ஊழியராக வேலைபார்த்து வருபவர் பிரேம்குமார். பேட்மிண்டன் வீரரான இவர், கடந்த 2-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் உகாண்டாவில் நடைபெற்ற சர்வதேச தரவரிசை பாரா ஒலிம்பிக் பூப்பந்து போட்டியில் பங்கேற்றார்.

    இதில் 26 நாடுகளை சேர்ந்த 202 வீரர்கள் விளையாடினர். இதில் ஒற்றையர் ஆண்கள் பிரிவில் விளையாடிய பிரேம்குமார் வெண்கல பதக்கம் வென்றார். இதேபோல் இரட்டையர் ஆண்கள் பிரிவில் தினேஷ்ராஜய்யாவுடன் இணைந்து, மற்றொரு வெண்கல பதக்கத்தையும் வென்றார். அவரை அணுமின்நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் பாராட்டினர்.

    • சோழசிராமணி பிரண்ட்ஸ் பேட்மிட்டன் கிளப் நடத்திய 6-ம் ஆண்டு இறகு பந்து போட்டி மாரப்பம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
    • இறகு பந்து போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி பிரண்ட்ஸ் பேட்மிட்டன் கிளப் நடத்திய 6-ம் ஆண்டு இறகு பந்து போட்டி மாரப்பம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

    இறகு பந்து போட்டி தொடக்க விழாவிற்கு சோழசிராமணி ஊராட்சி முன்னாள் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அரிமா சங்க மாவட்ட முன்னாள் ஆளுநர் சந்திரசேகரன் முன்னிலை வைத்தார். தனியார் பள்ளி தாளாளர் தேவராஜன் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக கபிலர்மலை யூனியன் சேர்மன் ஜே.பி.ரவி கலந்து கொண்டு இறகு பந்து போட்டியை தொடங்கி வைத்தார். இறகு பந்து போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

    இதில், கவுந்தப்பாடி அணி முதலிடத்தையும், திருச்செங்கோடு அணி 2-ம் இடத்தையும், ஜேடர்பாளையம் 3-ம் இடத்தையும், சோழசிராமணி அணி 4-ம் இடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் சோழசிராமணி பிரண்ட்ஸ் பேட்மிட்டன் கிளப்பைச் சேர்ந்த பரத் நன்றி கூறினார். 

    • 8 மாநிலங்களை சேர்ந்த அணியினர் பங்கேற்றனர்.
    • வின்னர் கோப்பையை முதலாவதாக மும்பை-அஜந்தா அணியினர் பெற்றனர்.

    மாமல்லபுரம்:

    தேசிய அளவிலான அணுசக்திதுறை ஊழியர்களின் ஆண்-பெண் "அட்டாமிக் பேட்மிண்டன்" போட்டி கல்பாக்கம் நகரியத்தின் நெஸ்கோ உள்விளையாட்டு அரங்கத்தில் 5 நாட்கள் நடைபெற்றது. இதில் 8 மாநிலங்களை சேர்ந்த அணியினர் பங்கேற்றனர்.

    வின்னர் கோப்பையை முதலாவதாக மும்பை-அஜந்தா அணியினர் பெற்றனர். இரண்டாம் இடத்தை கல்பாக்கம் இராமேஸ்வரம் அணியினர் பெற்றனர். பெண்கள் பிரிவில் மும்பை அணியினர் வெற்றி பெற்றனர். கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குனர் எஸ்.பி.ஷெல்கே வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார்.

    • 2:0 என்ற புள்ளி கணக்கில் பிரன்ட்லைன் பள்ளி மாணவி பிரவந்திகா வெற்றி பெற்றார்.
    • இணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளியின் முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் பாராட்டினர்.

    திருப்பூர் :

    பள்ளி கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான இறகுபந்து போட்டி, தர்மபுரி மாவட்டம், டான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், 39 மாவட்டங்களிலிருந்து பள்ளி மாணவியர் பங்கேற்றனர்.

    ஒற்றையர் பிரிவு இதில், திருப்பூர் பிரன்ட்லைன் பள்ளி மாணவி, ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்ட மாணவியை, 2:0 என்ற புள்ளி கணக்கில் பிரன்ட்லைன் பள்ளி மாணவி பிரவந்திகா வெற்றி பெற்றார்.

    அதேபோல், இரட்டையர் பிரிவில் இறுதி போட்டியில், விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவியரும், பிரண்ட்லைன் பள்ளி மாணவியரும் மோதினர். இதில், 2:0 என்ற புள்ளி கணக்கில் பிரண்ட்லைன் பள்ளி மாணவியர் பிரவந்திகா மற்றும் பிரசிதா வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    வெற்றி பெற்ற மாணவி யரை, பள்ளியின் தாளாளர் டாக்டர். சிவசாமி, செயலாளர் டாக்டர். சிவகாமி, பள்ளி இயக்குனர் சக்தி நந்தன், இணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளியின் முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் பாராட்டினர்.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு ஜனவரி 1-ந் தேதி மாலை கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர்:

    இமாலயா விளையாட்டு குழு, திருப்பூர் மாவட்ட பூப்பந்தாட்ட குழு சார்பில் 40 ம் ஆண்டு மாநில ஐவர் பூப்பந்து போட்டி 2 நாட்கள் திருப்பூரில் நடக்கிறது.வருகிற 31 மற்றும் ஜனவரி 1-ந் தேதி, திருப்பூர் கொங்கு மெயின் ரோடு சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.

    இரு பாலருக்கான இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு அணி வீரர்கள் பங்கேற்கின்றனர்.போட்டிகளை எம்.பி., சுப்பராயன் தொடங்கி வைக்கிறார். இரண்டாம் நாள் போட்டியை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார் தொடங்கி வைக்கிறார். வெற்றி பெற்ற அணிகளுக்கு ஜனவரி 1-ந் தேதி மாலை கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    ×